SHARE

Thursday, October 01, 2026

திலீபன் சிலையை மீள நிறுவ யாழில் போராட்டம்

 தியாக தீபத்தின் நினைவாலயம் முன் அணையா விளக்கு


யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் தியாக தீபம் திலீபனின் நினைவாலயத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த தியாக தீபத்தின் சிலையை பொலிஸார் பெயர்த்து எடுத்து சென்றமையை கண்டித்தும், சிலையை மீள அவ்விடத்தில் நிறுவ வேண்டும் எனவும் யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் முதல் நாளை மறுதினம்  வெள்ளிக்கிழமை வரையில் அணையா விளக்குப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது

தியாக தீபத்தின் நினைவாலயம் முன்பாக இன்றய தினம்  புதன்கிழமை மாலை தீபம் ஏற்றப்பட்டு , அதனை அணைய விடாது நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை வரை போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

குறித்த அணையா விளக்கு போராட்டம் , பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

தியாக தீபத்தின் நினைவாலயத்தில் இருந்த தியாக தீபத்தின் சிலையை கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாண தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான சுமார் 20க்கும் மேற்பட்ட பொலிஸார் , இரண்டு பொலிஸ் வாகனங்களில் வந்து சிலையை அங்கிருந்து பெயர்த்து எடுத்து சென்றுள்ளனர்.

பொலிஸாரினால் சிலை பெயர்த்து எடுத்து செல்லபப்ட்டதனை கண்டித்தும் , மீள அந்த சிலையை அவ்விடத்தில் நிறுவ வேண்டும் என கோரியே போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

அதேவேளை குறித்த சிலையை மீள அவ்விடத்தில் நிறுவ வேண்டும் என சிலை எடுத்து செல்லப்பட்ட தினமான ஞாயிற்றுக்கிழமை தியாகி திலீபனின் நினைவேந்தல் குழுவின் ஏற்பாட்டிலும், மறுநாள் திங்கட்கிழமை வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களாலும்,  மூன்றாவது நாளாக நேற்று செவ்வாய்க்கிழமை பொது அமைப்புக்களின் ஏற்பாட்டிலும் தொடர் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது

இந்நிலையில் பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் இன்றைய  தினம் புதன்கிழமை நினைவாலயம் முன்பாக விளக்கு ஏற்பட்டு, நாளைய மறுதினம் வரையில் விளக்கினை அணைக்காது இரவு பகலாக தொடர் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 





No comments:

Post a Comment

திலீபன் சிலையை மீள நிறுவ யாழில் போராட்டம்

  தியாக தீபத்தின் நினைவாலயம் முன் அணையா விளக்கு புதினம் Wednesday, September 30, 2026   யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் தியாக தீபம் திலீபனின் ...