SHARE

Wednesday, February 06, 2013

இராமதாஸ் கும்பலின், தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான “அனைத்து சமுதாய மக்களின் பாதுகாப்பு முன்னணியை” முறியடிப்போம்! தமிழகம் தழுவிய கழகத்தின் ஜனநாயக அரசியல் பிரச்சார இயக்கம்!




இராமதாஸ் கும்பலின், தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான “அனைத்து சமுதாய மக்களின் பாதுகாப்பு முன்னணியை” முறியடிப்போம்!
தமிழகம் தழுவிய கழகத்தின் ஜனநாயக அரசியல் பிரச்சார இயக்கம்!

 கடந்த வருடம் (2012) நவம்பர் 7ல், தருமபுரியில் நடத்திய சாதிவெறியாட்டத்தை  இராமதாஸ் கும்பல் கடலூர், விழுப்புரம் மாவட்டங்களிலும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக கட்டவிழ்த்தது. குறிப்பாக கடலூர் மாவட்டத்தில் மேலிருப்புக் கிராமத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள்மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தியதோடு, அவர்களின் வீடுகளையும் தீவைத்துக் கொளுத்தினர். தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான வன்கொடுமைகள் தொடர்கின்றன. தர்மபுரி கலவரத்திற்கு பின்பு பா.ம.க நிறுவனர் இராமதாசு தாழ்த்தப்பட்டசாதி மக்களுக்கு எதிராக பிற்படுத்தப்பட்ட சாதிகளின் அமைப்பு ஒன்றை உருவாக்கி தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக அனைத்து மாவட்டங்களிலும் கூட்டங்கள் நடத்துகிறார்.

இந்த “அனைத்து சமுதாய மக்களின் பாதுகாப்பு முன்னணி” ஜனநாயக விரோத எதிர்ப்புரட்சிகர முன்னணியே! என அம்பலப்படுத்தி, இதனை முறியடிக்க அனைத்து சாதி உழைக்கும் மக்களையும் ஜனநாயக சக்திகளையும் உள்ளடக்கிய ஒரு மக்கள் முன்னணியை உருவாக்கவேண்டும் என முழங்கி தமிழகம் தழுவிய ஜனநாயக அரசியல் பிரச்சார இயக்கத்தை கழகம் முன்னெடுத்து வருகின்றது.

விரிவான பிரசுரத்தைப் படிக்க : arhttp://saman1917.blogspot.co.uk/2013/02/blog-post.html

India, Sri Lanka head to a win-win relationship

India, Sri Lanka head to a win-win relationship 《  Asian Age 17 Dec 2024  》 All the signs are pointing to the possibility of a major win for...