SHARE

Wednesday, April 27, 2016

போராளிகளின் பொது வாழ்வின் மீது சிங்களம் போர் வாள் வீசுவதை எதிர்ப்போம்!


வி்டுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி நகுலன் கைது
APR 26, 2016 | 16:25by யாழ்ப்பாணச் செய்தியாளர் செய்திகள்
சிறிலங்கா இராணுவத்தினரின் புனர்வாழ்வுக்குப் பின்னர் விடுவிக்கப்பட்ட விடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதிகளில் ஒருவரான நகுலன் இன்று
தீவிரவாத விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நகுலன் என அழைக்கப்படும், கணபதிப்பிள்ளை சிவமூர்த்தி இன்று காலை, கோப்பாய் தெற்கில் உள்ள அவரது வீட்டில் இருந்து, சிவிலுடையில் சென்ற தீவிரவாத விசாரணைப் பிரிவினரால் கைது செய்து கொண்டு செல்லப்பட்டார்.

விடுதலைப் புலிகளின் சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத் தளபதியாக இருந்த நகுலன், இறுதிக்கட்டப் போரின் போது, அம்பாறை மாவட்டத்தில், புலிகளின் தளபதிகளில் ஒருவரான ராமுடன் இணைந்து செயற்பட்டவர்.

புலிகளின் முன்னாள் தளபதி ராம் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்ட நிலையில், நகுலனும் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

போர் முடிவுக்கு வந்த பின்னர், இவர்கள், சிறிலங்கா படையினரால் பிடிக்கப்பட்டு, புனர்வாழ்வு அளிக்கப்பட்ட பின்னர், 2013ஆம் ஆண்டு விடுவிக்கப்பட்டனர்.

அதன் பின்னர் திருமணம் செய்து வாழ்ந்து வந்த நிலையிலேயே இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சியில் வைத்தே புலிகளின்  தளபதி ராமிடம் விசாரணை
APR 26, 2016 | 1:37by கி.தவசீலன்  செய்திகள்
திருக்கோவில்- தம்பிலுவில் பகுதியில் உள்ள தமது வீட்டில் வைத்துக் கடத்திச் செல்லப்பட்ட விடுதலைப் புலிகளின் அம்பாறை மாவட்ட முன்னாள் தளபதி ராம்,

கிளிநொச்சியில் வைத்து விசாரணை செய்யப்பட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

நேற்றுமுன்தினம் காலையில், புலிகளின் முன்னாள் தளபதி ராம், வான் ஒன்றில் வந்தவர்களால் கடத்திச் செல்லப்பட்டிருந்தார். இதுதொடர்பாக அவரது மனைவி திருக்கோவில் காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்தார்.

இந்த நிலையில், ராம், கடத்தப்படவில்லை என்றும், தீவிரவாத விசாரணைப் பிரிவினால், கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப்படுவதாக நேற்று சிறிலங்கா காவல்துறை பேச்சாளர் அறிவித்திருந்தார்.

திருக்கோவிலில் கைது செய்யப்பட்ட ராம், கிளிநொச்சிக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும், அங்கு வைத்தே, அவரிடம் விசாரணைகள் நடத்தப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும், ராம் கைது செய்யப்பட்டுள்ளதற்கான காரணத்தை, சிறிலங்கா காவல்துறை இன்னமும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

LLRC நூலில் 41ஆவது பக்கத்திலுள்ள புகைப்படத்தில் எனது மகன்! ஜெயக்குமாரி

நமது செய்தியாளர்: thaya April 28, 2016.
கற்றுக்கொண்ட பாடங்களும், நல்லிணக்கமும் பற்றிய ஆணைக்குழவின் பரிந்துரைகள் பற்றிய நூலில் 41ஆவது பக்கத்தில் காணப்படுகின்ற புகைப்படத்தில் எனது மகன் பாலேந்திரன் மகிந்தன் காணப்படுகின்றான். எனவே அவனை மீட்டுத்தாருங்கள் என தாய் பாலேந்திரன் ஜெயக்குமாரி காணால் போனோர்கள் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு முன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட காணாமல் போனவர்கள் தொடர்பில் நேற்று புதன் கிழமை மூன்றாம் நாள் அமர்வில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

குறித்த புகைப்படம் 2009 யூன் மாதம் அயர்லாந்து ஊடகவியலாளர் ரொம் ஹால் என்பரால் அம்பேபுச புனர்வாழ்வு முகாமில் எடுக்கப்பட்டது. அதனை லங்காபுவத் ஊடகம் வெளியிட்டிருந்தது. அப்போது மேஜர் ஹேமன் பெர்ணாட்டோ பொறுப்பாக இருந்துள்ளார். இந்த புகைப்படத்தையே கற்றுக்கொண்ட பாடங்களும் நல்லிணக்கமும் பற்றிய பரிந்துரைகள் அடங்கிய நூலில் 41 பகத்தில் விடுதலைப் புலிகளின் போராளிகளுக்கு புனர்வாழ்வு வழங்கப்படுகிறது எனும் விபரத்துடன் போடப்பட்டுள்ளது.
எனவே அம்பேபுச முகாமில் புனர்வாழ்வு பெற்ற மகன் தற்போது எங்கே? அயர்லாந்து ஊடகவியலாளரால் புகைப்படம் எடுக்கும் போது இருந்து மகன் தற்போது எங்கே? என தாய் ஜெயக்குமாரி ஆணைக்குழு முன் கேள்வி எழுப்பியுள்ளார்.

தனது மகன் க.பொ.த சாதாரண தரம் பரீட்சை எடுத்துவிட்டு குடும்ப வறுமை காரணமாக கூலி வேலைக்குச் செல்வது வழமை என்றும் அவ்வாறே 2008-12-19 அன்று கிளிநொச்சி கல்மடுநகரில் நாங்கள் இருந்த போது வேலைக்குச் சென்றவர் வீடு திரும்பவில்லை எனத் தெரிவித்த அவர்.

இறுதியாக மாத்தளன் இரட்டைவாய்க்கால் பகுதியில் பலர் மகனை கண்டுள்ளனர் என்றும் குறிப்பிட்டார். இதேவேளை எனது மூத்த மகனை திருகோணமலையில் இனந்தெரியாதவர்கள் சுட்டுக்கொலை செய்துவிட்டனர். மற்றொரு மகனும் முள்ளிவாய்க்காலில் இறந்து விட்டான். தற்போது மூன்றாவது மகனையும் காணவில்லை என கண்ணீருடன் தெரிவித்தார்.

ஜெயக்குமாரியும் கடந்த 2014 ஆம் ஆண்டு கைதுசெய்யப்பட்டு ஒரு வருடம் சிறையில் இருந்தவா் என்பது குறிப்பிடத்தக்கது.
=====================
 'தற்கொலை அங்கி' 
 April 28, 2016.

யாழ்ப்பாணம் – சாவகச்சேரி பகுதியில் மீட்கப்பட்ட தற்கொலை அங்கி விவகாரத்தில் அடையாளம் காணப்பட்டுள்ள மேலும் இரண்டு சந்தேக நபர்களை விரைவில் கைது செய்யவுள்ளதாக பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

தற்கொலை அங்கி மீட்ட சம்பவத்துடன் தொடர்புடைய 11 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன் இந்த சந்தேக நபர்கள் பயணித்த இரண்டு வான்கள் உட்பட 8 வாகனங்களை பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் கைப்பற்றியுள்ளனர்.

ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள மன்னார் பகுதியைச் சேர்ந்த எட்வர்ட் ஜுலியட் என்ற இளைஞனிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக பயங்கரவார விசாரணைப் பிரிவை மேற்கோள்காட்டி ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இவரிடம் பெற்ற வாக்குமூலத்திற்கு அமைவாக 10 பேர் கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில் மேலும் இருவர் கைது செய்யப்படவிருப்பதாக அந்தச் செய்தியில் மேலும் கூறப்பட்டுள்ளது.

India, Sri Lanka head to a win-win relationship

India, Sri Lanka head to a win-win relationship 《  Asian Age 17 Dec 2024  》 All the signs are pointing to the possibility of a major win for...