SHARE

Friday, May 24, 2013

மத முரண்பாட்டுக்கு பெளத்தர்கள் காரணமானவர்கள் அல்ல: மகிந்த


மத முரண்பாட்டுக்கு பௌத்தர்கள் காரணமானவர்கள் இல்லை; ஜனாதிபதி

இலங்கையில் உள்ள பௌத்தர்கள் கடும்போக்காளர்கள் அல்ல. மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கவே சிலர் முயற்சிகளை மேற்கொள்கின்றனர் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கண்டி தலதா மாளிகையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்  போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டில் உள்ள பௌத்தர்கள் கடும் போக்கானவர்கள் அல்ல. எனினும் சில அரச சார்பற்ற நிறுவனங்கள் மதத்தின் அடிப்படையில் நாட்டை சீர்குலைப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அத்துடன் பௌத்தர்கள் ஏனைய மதத்தவர்களைத் துன்புறுத்துவதாக குற்றம் சுமத்தப்படுகின்றது. எனினும் ஏனைய மத வழிபாட்டுத் தளங்களை அமைத்துக் கொள்ள பௌத்த விஹாரைகளுக்கு சொந்தமான காணிகளும் வழங்கப்பட்டுள்ளன.

இவ்வாறான செயற்பாடுகள் மூலம் பௌத்தர்கள் மத நல்லிணக்கத்தை ஏற்படுத்த முயற்சிகளை எடுத்து வருகின்றனர் என்பது வெளிப்படையாகும்.

நாட்டில் மத முரண்பாடுகள் கிடையாது, அவ்வாறு முரண்பாடுகள் ஏற்பட பௌத்தர்கள் இடமளிக்க மாட்டார்கள் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.


 

India, Sri Lanka head to a win-win relationship

India, Sri Lanka head to a win-win relationship 《  Asian Age 17 Dec 2024  》 All the signs are pointing to the possibility of a major win for...