Friday 27 November 2009

மாவீரர் தினம் 2009

தமிழர் தாயக உறுதிமொழி

உறுதி மொழி
தமிழீழத்தாய் நாட்டிற்காக தமது இன்னுயிரை ஈந்த மாவீரர்களை நினைவுகூரும் இந்நாளில் -2009,நான் மேற்கொள்ளும் உறுதி மொழியானது; ஈழத்தமிழனாகிய நான் உலகின் எத் திசையில் வாழ்ந்தாலும் தமிழீழம் எனது இலட்சியம்.இந்த இலட்சியத்துக்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவேன் என்பதுடன் சுதந்திரமும் இறைமையுமுள்ள தமிழீழத் தனியரசான எனது வரலாற்று மண்ணின் மீட்சிக்காக அயராது உழைப்பேன் என இந்நாளில் உறுதி மொழி எடுத்துக்கொள்கின்றேன்.

தமீழவிடுதலைப் புலிகளின் தலமைச் செயலகம் வெளியிட்டுள்ளதாக 'தமிழ் நெற்' இணையதளம் வெளியிட்டுள்ள மாவீரர் தின அறிக்கை-2009.
மாவீரர் தினம் 2009 அறிக்கை - உரை வடிவில்
==============================================
"எத்தனை சவால்களுக்கு முகம்கொடுத்தாலும் எத்தனை இடையூறுகளை எதிர்கொண்டாலும் எத்தனை சக்திகள் எதிர்த்து நின்றாலும் நாம் தமிழரின் சுதந்திர விடிவிற்காகத் தொடர்ந்து போராடுவோம். வரலாறு விட்ட வழியில், காலம் இட்ட கட்டளைப்படி சிங்கள அந்நிய ஆக்கிரமிப்பு அகலும் வரை நாம் தொடர்ந்து போராடுவோம்."
"புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்"
(வே. பிரபாகரன்) தலைவர், தமிழீழ விடுதலைப் புலிகள்.

மாவீரர் நாள் உரை- 2008
=============================================
மாவீரர் தினம் 2009
*தேசியத் தளபதி பிரபாகரனின் தமிழீழக் கனவை நனவாக்க சபதம் ஏற்போம்!
*அந்நிய நாடுகளில் தற்காலிக தமிழீழ அரசாங்கம் எனும் மோசடித்தனமான ஏமாற்றுப் பாதையை அடியோடு நிராகரிப்போம்!!
*இலங்கையின் -அரைக்காலனிய,தரகு முதலாளித்துவ,சிங்களப்பேரினவாத,பெளத்த மதவாத,இராணுவ சர்வாதிகார,தமிழினப் படுகொலைப் - பாசிச அரசை பாதுகாக்கும் இந்திய விஸ்தரிப்புவாத, மற்றும் சர்வதேச ஏகாதிபத்திய அரசுகள் நமது எதிரிகளே எனப் பிரகடனம் செய்வோம்!
*இனவெறிப்பாசிச இராணுவ சர்வாதிகார இலங்கை அரசின் கொலைக் கரத்தில் இருந்து ஈழ தேசம் விடுதலை பெற பிரிந்து செல்லும் உரிமையை உயர்த்திப்பிடிப்போம்!
*புதிய ஈழம் படைக்கும் புரட்சிப்படையைத் திரட்ட, புலம் பெயர் நாடுகளில் புதிய ஜனநாயக அரசியல் பிரச்சாரம் செய்வோம்!!!
*பக்ச பாசிஸ்டுக்களின் ஈழமுற்றுகையை (புலம்பெயர்-ஈழம் வாழ்) தமிழர் படையெடுப்பால் முறியடிப்போம்!
* தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்!
-புதிய ஈழப் புரட்சியாளர்கள்-

அநுரா ஆட்சியில் செல்வினின் பனை அபிவிருத்தி சபைத் தலைவர் பொறுப்பு பறிப்பு!

அநுரா ஆட்சியில் செல்வினின் பனை அபிவிருத்தி சபைத் தலைவர் பொறுப்பு பறிப்பு! பனை அபிவிருத்தி சபைத் தலைவராக இரானியேஸ் செல்வின் அவர்களைப் பொறுப்ப...