சரத் பொன்சேகாவின் பதவி விலகல் வேண்டுகோள் உடனடியாக அமுலுக்கு வர ஜனாதிபதி அனுமதி
13 நவம்பர் 2009ஜெனரல் சரத் பொன்சேகா கூட்டுப்படைகளின் கட்டளைத் தளபதி பதவியிலிருந்து விலகுவாக விடுக்கப்பட்ட கோரிக்கையை அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளது.
கூட்டுப்படைகளின் கட்டளைத் தளபதி பதவியிலிருந்து எதிர்வரும் டிசம்பர் மாதம் விலகுவதற்கு அனுமதியளிக்குமாறு முன்னாள் இராணுவத் தளபதி ஜனாதிபதியிடம் கோரியிருந்தார்.
எனினும், டிசம்பர் மாதம் வரையில் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை எனவும், உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் அவரது இராஜினாமா கடிதம் ஏற்றுக்கொள்ளப்பட்டதாகவும் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க அறிவித்துள்ளார்.