SHARE

Wednesday, October 26, 2011

லிபிய தேசியத்தலைவர் கடாபியின் சிறீலங்கா அரசுடனான கூட்டை நியாயமாகவே விமர்சிப்போரின் கவனத்துக்கு!

சர்வதேசிய நிலையில் உமர் முக்தாவின் வீரப்புதல்வனாக, அரபுத்தேசியவாதி நாசரின் அசல் வாரிசாக, உள்நாட்டில் லிபிய கணம் ஒன்றின் மேலாதிக்க அரசதிகார இராணுவ சர்வாதிகாரியும், சந்தர்ப்பவாதியுமான தளபதி கடாபி, ராஜபக்சவோடு கூட்டமைத்தது- அதிகார நலனின் அடிப்படையில்- நியாயப்படுத்தப்படக் கூடியது! எந்தளவிலும் இது நியாயமானதாக இல்லாது இருப்பினும் கூட!

ஆனால் விடுதலைப் போராளிகளே! மறத்தமிழ் வீரர்களே!!
யாரோடு கூட்டமைக்க தமிழீழ ஏழை முஸ்லிம் விவசாயிகளைப் படுகொலை செய்தீர்கள்?

ஈழ முஸ்லிம்களை அவர்கள் தாய் மண்ணிலிருந்து ஏன் விரட்டியடிதீர்கள்?

எங்கள் கூட்டுக்குள் குடியிருந்த குயில்களை ஏன் கொத்திக் கலைத்தீர்கள்?

இப் படுபாதகச் செயலுக்கு தங்கள் பதில் என்ன?

சொல்ல மாட்டீர்கள், நாங்கள் சொல்கிறோம்,

அகத்தில் குறுமினவாதமும் புறத்தில் நாம் பாகிஸ்தானின் எதிரிகள், இந்தியாவின் நண்பர்கள் என்று எடுத்துரைப்பதுதானே உங்கள் படுகொலைகளின் குறிக்கோள்! இதன் மூலம் இந்தியாவை அணைத்துக்கொண்டு இமாலயத் தமிழீழத்தை அடையலாம் என்று தானே மூடர்களே கருதினீர்கள்.

இவ்வாறுதானே உங்கள் வெளிவிவகார சந்தர்ப்பவாத மூடக் கொள்கை செயற்பட்டு வந்தது;  இதைத்தானே ``காய் நகர்த்தல்`` என்கிற சூதாட்ட மொழியில் உரைத்தீர்கள்,  இவ்வாறுதானே விடுதலைப் போரை சூதாட்டமாக மாற்றினீர்கள்.

அன்ரன் பாலசிங்கச் சூதாடிகளை தேசத்தின் குரல் ஆக்கினீர்கள் !

உண்மையா-இல்லையா?

இதற்கு ஈழமக்கள் கொடுத்த கோர விலை தானே முள்ளிவாய்க்கால்!

எத்தனை நாள் உங்கள் தமிழ் முக்காடுகளுக்குள் மூடி மறைந்திருப்பீர்கள்?

எத்தனை நாள் தேசியத்துக்கும் விதேசியத்துக்கும் இடையில்

``தொப்பி பிரட்டுவீர்கள்``

எத்தர்களே எழுந்து வெளிச்சத்துக்கு வாருங்கள்!

எமக்கு நியாயம் சொல்லுங்கள்!


==========புதிய ஈழப்புரட்சியாளர்கள் ==========
==================================================================
சிகப்பு ஆகஸ்து
கிழக்கு முஸ்லிம் இனசுத்திகரிப்பு

2006
ஆகஸ்ட் -01-மூதூர் முஸ்லிம்கள் வெளியேற்றம்
1990
ஆகஸ்ட்- 01 அக்கரைபற்று 8 முஸ்லிம்கள் படுகொலை
ஆகஸ்ட்- 03 காத்தான்குடி மஸ்ஜிதுகளில் 103 முஸ்லிம்கள் படுகொலை
ஆகஸ்ட்- 05 அம்பாறை முல்லியன்காடு, 17 முஸ்லிம் விவசாயிகள் படுகொலை
ஆகஸ்ட்- 06 அம்பாற 33முஸ்லிம் விவசாயிகள் படுகொலை
ஆகஸ்ட் -12 சமாந்துரை 4 முஸ்லிம் விவசாயிகள் படுகொலை
ஆகஸ்ட்- 12 ஏறாவூர் 116 பேர் முஸ்லிம் கிராம படுகொலை
ஆகஸ்ட்- 13 வவுனியா 9 முஸ்லிம்கள் படுகொலை


தகவல் நன்றி லங்கா முஸ்லீம்

Maduro in court- U.S. kidnapped Me

Maduro, making first court appearance, says U.S. ‘kidnapped’ him As the deposed Venezuelan president and his wife, Cilia Flores, grapple wit...