SHARE
Sunday, March 17, 2013
தோழர்களுக்கு ஒரு அவசர வேண்டுகோள்
தோழர்களுக்கு ஒரு அவசர வேண்டுகோள்,தமிழ்நாட்டில் நடந்து வரும் மாணவர் எழுச்சி தாங்கள் அறிந்ததே,நாற்பது ஆண்டுகள் கழித்து மாணவர்கள்
தமிழின பிரச்சனைக்காக வெளியே வந்துள்ளார்கள் அவர்களை ஊக்குவித்து உதவ வேண்டியது நமது கடமை,மாணவர்களின் போராட்டங்களுக்கு
உங்கள் பங்களிப்பை நீங்களும் தரலாம்,மாணவர் எழுச்சி பெரும் அளவில் இருப்பதால் ஒருங்கிணைப்பதில் களத்தில் இருக்கும் தோழர்கள் பெரும்
சவால்களை சந்தித்து வருகிறார்கள்,அவர்களுடன் நீங்களும் கைகோருங்கள்.
௧.வெறும் நானூறு முதல் ஐநூறு ருபாய் மட்டு இருந்தால் போதும் உங்கள் அருகாமையில் நடக்கும் மாணவர் போராட்டங்களுக்கு உங்கள்
வீட்டிலேயே தேநீர் தயாரித்து கொடுக்கலாம், பிஸ்கட் போன்றவற்றை வாங்கி மாணவர்களுக்கு விநயோகிக்கலாம்.
௨.வெறும் நூறு ருபாய் இருந்தால் போதும் அவர்களுக்கு மோர்,அல்லது எலுமிச்சை ஜூஸ் போன்றவற்றை உங்கள் வீட்டிலிருந்து தயார் செய்து கொண்டு போய் கொடுக்கலாம்.
௩.நகல் எடுக்க வெறும் இருபத்தி ஐந்து பைசா போதும் இருநூற்று ஐம்பது ருபாய் மட்டும் இருந்தால் ஆயிரம் துண்டறிக்கைகள் அடித்து கொடுத்து அவர்களுக்கு உதவலாம்.
௪.அதுவும் முடியவில்லை என்பவர்கள் அவர்களுக்கு குறைந்தது பானையில் குளிர்ந்த நீரை தர ஏற்பாடு செய்து தரலாம்,அவர்களுடன் ஒன்றிணைந்து துண்டறிக்கைகள் விநயோகிக்கலாம்,
௫.குறைந்தது நீங்கள் உங்கள் அருகில் நடக்கும்,போராட்டங்களுக்கு உங்கள் குடும்பத்துடனோ அல்லது நண்பர்களுடனோ சென்று மாணவர்களை வாழ்த்தி உற்சாக படுத்தலாம்,உங்கள் நண்பர்களுக்கும் இதை தெரிய படுத்தலாம்.
வெளிநாடுகளில் வாழும் நம் தோழர்கள் தங்கள் நண்பர்கள் மூலமாக இதை செய்ய முயற்சிக்கலாம்,மாணவர்கள் அவர்களின் இனப்பற்றை காண்பித்து விட்டார்கள்,அவர்களை காலம் முழுவதும் குறை சொல்லும் நாம் நம் கடமையை இப்போதாவது சரியாக செய்வோமே,
இந்த எளிய போராட்டங்களுக்கு நம்முடைய எளிய பங்களிப்பை தரலாமே?
இதை இனப்பற்றுள்ள ஒவ்வொருவரும் அவசியம் பகிர வேண்டும் தோழர்களே,உலக தமிழர்கள் மாணவர்கள் பின் நிற்பதை உறுதி செய்யுங்கள்.
நூல்முகத்தில் இருந்து
நூல் முகத்தில் தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு
நூல் முகத்தில் தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு
தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு, தமிழகத்தில் நடந்துவரும் மாணவர்கள் போராட்டத்தை ஒருங்கிணைக்கும் வண்ணம் நூல் முகத்தில்
https://www.facebook.com/tamilnaduhungerstrike முகம் காட்டியிருக்கிறது.
நாளுக்கு நாள் தீவிரம் அடைந்து வரும் மாணவர்கள் போராட்டத்தை ஒருங்கிணைத்திட மாணவர்களுக்கு இந்த நூல் முக இணைப்பு தொடர்புக்களமாக அமைந்துள்ளது.
ஏறத்தாழ பத்தாயிரம் (உறுப்பினர்கள், ஊழியர்கள்,ஆதரவாளர்கள், அனுதாபிகள், வெகுஜனங்கள் உள்ளிட்ட) பெரும்பாலும் மாணவர் அடங்கிய பேரணி இந்த இணைப்பில் இணைந்து களமுறுகிறது.
செய்தி: enb
ஒரு கோடி மாணவர்களின் தொடர் முழக்கப் போராட்டம்!
"ஒரு கோடி மாணவர்கள் பங்கேற்கும் தொடர்முழக்கப் போராட்டம்"
20/03/2013
தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு
-------------------------------------------------------------------------------
மார் 16, 2013
-------------------------------------------------------------------------------
மார் 16, 2013
வரும் 20/03/2013 புதன்கிழமை தமிழகம் தழுவிய மாவட்ட, நகர, கிராம அளவில் தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பினால் "ஒரு கோடி
மாணவர்கள் பங்கேற்கும் தொடர்முழக்கப் போராட்டம்" முன்னெடுக்கப் படவுள்ளது.
இப் போராட்டத்தினை தமிழகம் தழுவி தமிழீழ விடுதலை வேண்டி போராடும் அனைத்து மாணவர் ஒருங்கிணைப்பு குழுக்களும், தாங்களே தமது பகுதியிலுள்ள சாத்தியமான மூலை முடுக்குகளில் ஒன்றுகூடலுக்கான ஒரு பகுதியினை தேர்வு செய்து நடத்த உத்தேசித்துள்ளதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
இப்போராட்டம் பற்றிய தகவலுக்கு : 00 91 9791162911
Subscribe to:
Comments (Atom)
How Nato is preparing for war in the Arctic
How Nato is preparing for war in the Arctic Nordic nations hope US fixation on Greenland will spur alliance to catch up with years of Russi...
-
தமிழகம் வாழ் ஈழத்தமிழர்களை கழகக் கண்டனப் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ளக் கோருகின்றோம்!
-
சமரன்: தோழர்கள் மீது எடப்பாடி கொலை வெறித்தாக்குதல், கழகம்...



