SHARE

Monday, August 18, 2014

திருமலை கருமலையூற்று பள்ளிவாசல் சிங்களப் படையால் தகர்ப்பு!

கருமலையூற்று பள்ளிவாசல் உடைக்கப்பட்டது' - மாகாண சபை உறுப்பினர்


திருகோணமலை மாவட்டத்தில் உயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள கருமலையூற்று பள்ளிவாசல் பாதுகாப்பு தரப்பினரால் உடைக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாணசபை உறுப்பினரான மௌஃரூப் இம்ரான் கூறுகிறார்.

கிழக்கு மாகாண சபையின் ஐ. தே. கட்சி உறுப்பினர் மொகமட் மஹ்ருப் இம்ரான் இது தொடர்பான குற்றச்சாட்டொன்றை முன் வைத்துள்ளார்.
இது தொடர்பாக அந்த பகுதி மக்களால் கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளதையடுத்து, உண்மை நிலையைக்

கண்டறிவதற்காக இன்று மாலை அந்தப் பகுதிக்கு பொறுப்பான இராணுவ கட்டளை அதிகாரியை அவர் சந்திக்கவிருந்தார்.

திருகோணமலை பட்டினச் சூழல் பிரதேசத்திலுள்ள கருமலையூற்று கிராமத்தில் பள்ளிவாசல் அமைந்துள்ள பகுதி உயர் பாதுகாப்பு வலயமாக இருப்பதால், அங்கு வெளியார் செல்வதற்கு 2009ம் ஆண்டு தொடக்கம் தடை விதிக்கப்பட்டிருப்பதுடன் தொழுகையும் தடைப்பட்டுள்ளது.
 1926ம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்ட இந்தப் பள்ளிவாசல், 1947ம் ஆண்டு ஜும்மா பள்ளி வாசலாக பதிவு செய்யப்பட்டு, அந்தப் பகுதி உயர் பாதுகாப்பு வலயமாக அடையாளமிடப்படும் வரை இஸ்லாமியர்களின் வழமையான தொழுகைகளும் அங்கு இடம்பெற்று வந்தன.

2007ம் ஆண்டு, தான் மத்திய அரசில் அமைச்சராக பதவி வகித்தவேளை, திருகோணமலை மாவட்ட மீலாத் விழாவின் போது தனது முன்மொழிவின் அடிப்படையில், அரசாங்கத்தினால் 4 இலட்சத்து 80 ஆயிரம் ருபா நிதி வழங்கப்பட்டு இந்த பள்ளிவாசல் புனரமைக்கப்பட்டதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத் கூறுகின்றார்.

அந்தப் பகுதியில் இராணுவ முகாம் அமைந்திருந்ததால், 2009ம் ஆண்டு முதல் வெளியார் அந்த பகுதிக்குள் செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.

இறுதியாக 2012ம் ஆண்டு கிழக்கு மாகாண சபை தேர்தல் காலத்தில் ஐ.ம. சு. முன்னணி வேட்பாளராக போட்டியிட்ட முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத் மற்றும் நாடாளுமன்ற

உறுப்பினர் ஏ. எச். எம். அஸ்வர் ஆகியோர் அந்தப் பகுதிக்கு சென்று பார்வையிட்டிருந்தனர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

Maduro in court- U.S. kidnapped Me

Maduro, making first court appearance, says U.S. ‘kidnapped’ him As the deposed Venezuelan president and his wife, Cilia Flores, grapple wit...