SHARE

Tuesday, August 04, 2015

``காணாமல் போனோரின்`` உறவுகள் தேர்தலைப் புறக்கணிக்கக் கோரிக்கை!

தேர்தலை புறக்கணிக்கும் காணாமல் போனவர்களின் உறவுகள் 


திருகோணமலை மாவட்டத்தில் காணாமல் போனவர்களின் உறவுகள் ஒன்றிணைந்து நடத்திய
கண்டனப் போராட்டத்தில் இக் கோரிக்கையை பிரகடனப் படுத்தினர்

திருகோணமலை மாவட்ட சிவில் சமூகம் மற்றும் திருகோணாமலை மாவட்ட காணாமல் போனோர் சங்கத்தினால் இக்கவனயீர்ப்பு போராட்டம்
திருகோணமலை சிவன் ஆலயத்திற்கு முன்பாக இடம்பெற்றது.
புதிய அரசாங்கம் காணாமல்போனோர் தொடர்பில் இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. 
தமது உறவுகளை மீட்பதற்கான நடவடிக்கையினை துரிதப்படுத்துமாறும், தமது கோரிக்கை தொடர்பில் விரிவான செயற்பாடுகளை மேற்கொள்ளுமாறும் இந்த போராட்டத்தின்போது வலியுறுத்தப்பட்டது. பல அரசியல்வாதிகள் காணாமல்போனோர் தோடர்பில் கதைக்கின்ற போதிலும் இதுவரை காலமும் எந்தவிதமான முடிவுகளையும் பெற்றுத் தரவில்லை. 
எனவே இம்முறை தேர்தலை புறக்கணிப்பதாக தீர்மானித்துள்ளோம்!
என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் கருத்துத் தெரிவித்தனர்.

இப்போராட்டத்தில் திருகோணமலை, மட்டக்களப்பு ,வவுனியா, அம்பாறை ஆகிய பகுதிகளில் இருந்து உறவுகளை இழந்தவர்கள் பங்கேற்றனர்.



India, Sri Lanka head to a win-win relationship

India, Sri Lanka head to a win-win relationship 《  Asian Age 17 Dec 2024  》 All the signs are pointing to the possibility of a major win for...