SHARE

Sunday, March 23, 2014

தமிழ் ஈழத்திற்கு ஆதரவில்லை: பா.ஜ.க அறிவிப்பு


வெங்கையா நாயுடு படம்: ஆ.முத்துக்குமார் 


தமிழ் ஈழத்திற்கு ஆதரவில்லை: 
பா.ஜ.க அறிவிப்பு

Posted Date : 15:40 (23/03/2014)செய்திகள் / இந்தியா / 23 Mar, 2014

சென்னை: இலங்கை ஒரே நாடாக இருக்க விரும்புவதாகவும், தமிழ் ஈழத்திற்கு ஆதரவு அளிக்க மாட்டோம் என்று பா.ஜ.க மூத்த தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.

சென்னையில் உள்ள பா.ஜ.க தலைமை அலுவலகமான கமலாலயத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், இலங்கையின் ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும் காக்க உறுதி பூண்டுள்ளோம்.

இலங்கை -அரசியல்- சாசனத்திற்கு உட்பட்டே தமிழர் பிரச்னைக்கான எந்தவொரு தீர்வும் இருக்க வேண்டும்.

இலங்கை அரசில் முடிவு எடுப்பதிலும் தங்கள் தலைவிதியை தீர்மானி்ப்பதிலும் தமிழர்களுக்கு உரிமை அளிக்கப்பட வேண்டும்  என்பதில் உறுதியாக இருக்கிறோம். பா.ஜ.க ஆட்சிக்கு வந்தால் இலங்கைத் தமிழர் நலனுக்காக ஒப்பந்தங்கள் பரிசீலிக்கப்படும்.

அத்வானிக்கு ஒன்றுக்கு மேற்பட்ட தேர்வுகள் கொடுக்கப்பட்டன. காந்திநகர் தொகுதியை அவர் தேர்வு செய்தார். இது தொடர்பாக ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் தவறானவை. அவற்றிக்கு எந்தவொரு ஆதாரமும் இல்லை. முரளி மனோகர் ஜோஷி விவகாரத்திலும் கட்சித் தலைமை அவருடன் ஆலோசனை நடத்தியது" என்றார்.

நன்றி:ஆனந்தவிகடன்

=============================================================================


Ukraine could join EU by 2027

  Ukraine could join EU by 2027 under draft peace plan ‘Crafty’ diplomacy by Kyiv could force the bloc to rewrite its accession procedures J...