Sunday, 7 February 2010

ராஜபக்ச ரசியாவின் KP

ன்றுள்ள உலக ஏகாதிபத்திய பொதுப் பொருளாதார நெருக்கடியில், இதன் விளைவாக குறிப்பாக அமெரிக்க ஏகாதிபத்தியம் மீளமுடியாத நெருக்கடிக்குள் சிக்கியுள்ள சாதகமான சூழ்நிலையில் அபரிமிதமான எண்ணை வளத்தைக் கொண்டும், ஆயுத விற்பனையைக் கொண்டும் மீண்டும் தன்னை ஒரு ஏகாதிபத்திய நாடாக வளர்த்துக்கொள்ள பூட்டினின் ரசியா முயன்று வருகின்றது.இப்பலத்தையே உலக மறுபங்கீட்டிற்கான தனது ஆயுதமாகவும் ரசியா பயன்படுத்திவருகின்றது.இந்து சமுத்திரப் பிராந்தியதை இந்தியாவைக் கொண்டு தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ளவது அமெரிக்காவின் யுத்ததந்திரத் திட்டமாக உள்ளது.இதற்குப் போட்டியாக ரசியாவும், சீனாவும், ஈரானும் எழுந்து வருகின்றன.இத்தகைய ஒரு உலக மற்றும் பிராந்திய மேலாதிக்கத்துக்கான - உலக மறு பங்கீட்டிற்கான- சூழ்நிலை இலங்கை போன்ற அரைக்காலனி நாடுகளின் தரகு ஆளும் கும்பலுக்கு பேரம் பேசும் பரப்பையும் ஆற்றலையும் விரிவாக்கிக் கொடுத்துள்ளன.இந்த இடைவெளிக்குள் நடத்தும் பேரத்தைப் பயன்படுத்தித்தான் தான் மேற்குலகத்திற்கு அடங்காத காளையென்ற தோற்றத்தை உருவாக்கிவருகின்றார் ராஜபக்ச.ரசியா போன்ற சாவு வியாபார அரசுகளின் நலன்களுக்கும், ராஜபக்ச போன்ற இராணுவ சர்வாதிகார பாசிச ஆட்சியாளர்களின் நலன்களுக்கும் இடையில் பரஸ்பர ஒற்றுமை ஏற்பட்டுள்ளது.இந்த ஆயுத வர்த்தகத்துக்கு அளிக்கப்பட்ட கெளரவமே இந்த கலாநிதி பட்டம்.
மேலும்

ஜனாதிபதியின் கொள்கை பிரகடன உரை! -ஆங்கிலக் குறிப்புடன் தமிழ் சிங்கள வீடியோக்கள்.

அநுரவின் உரையின் முக்கிய பகுதி தமிழில் LINK அநுரவின் உரையின் முழுப்பகுதி சிங்களத்தில்                                                       ...