SHARE

Showing posts with label மலையகம். Show all posts
Showing posts with label மலையகம். Show all posts

Wednesday, February 15, 2012

மாதம் 15 நாள் வேலை! மலையகத் தொழிலாளர் ஆர்ப்பாட்டம்!



                                        ராகலைத் தோட்டத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

ராகலைப் பிரதேச புரூக்சைட், செல்வகந்தை, கொன்கோடியா மற்றும் டென்ட்லெந் பெருந்தோட்டங்களைச் சேர்ந்த தோட்டத் தொழிலாளர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

தோட்ட நிருவாகத்தால் இன்று முதல் முன்னெடுக்கப்படும் வேலைத் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தே 400 தொழிலாளர்கள் தொழிற்சாலைக்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
 
 தோட்டங்களிலுள்ள தொழிலாளர்களை இரண்டாக பிரித்து 'ஒன்றை விட்டு ஒருநாள்' என்ற அடிப்படையில் இன்று முதல் வேலை வழங்கப்படும் என தோட்ட நிருவாகம் அறிவித்திருந்து.

இதன்காரணமாக, தொழிலாளர் ஒருவர் மாதத்தில் 15 நாட்களே வேலையில் ஈடுபட முடியும்.

இந்நிலையில், 30 நாட்கள் வேலை செய்வதால் கிடைக்கும் சம்பளமே குடும்ப செலவினங்களை குறைக்க போதாமலிருக்க, 15 நாட்கள் வேலை செய்து பெறும் சம்பளத்தை வைத்து என்ன செய்வது என்ற கேள்வியை தொழிலாளர்கள் எழுப்புகின்றனர்.

நன்றி யாழ் உதயன் 13 பெப்ரவரி 2012, திங்கள்

Thursday, January 05, 2012

நாவலப்பிட்டி கலபொட தோட்டத்தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்



நாவலப்பிட்டி கலபொட தோட்டத் தேயிலைத் தொழிற்சாலையின் உபகரணங்கள் மற்றும் இரும்புப் பொருட்களைத் தோட்டத்தொழிலாளர்களுக்கு அறிவிக்காமல் தோட்ட நிருவாகம் பலவந்தமாக அப்புறப்படுத்தி வருகின்றமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து அந்தத் தோட்டத்தைச்சேர்ந்த தொழிலாளர்களும் ஏனையவர்களும் இன்று கலபொட தேயிலைத் தொழிற்சாலைக்கு முன்னால் ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர்.

ஜனவசம நிர்வாகத்துக்கு உட்பட்ட நாவலப்பிட்டி கலபொட தோட்டத்தின் தேயிலைத் தொழிற்சாலை நீண்ட காலமாகக் கைவிடப்பட்ட நிலையிலுள்ளது. அத்துடன் இந்தத் தோட்டத்தில் தொழில்செய்கின்ற 200 தொழிலாளர்களுக்கு வாரத்தில் மூன்று நாட்கள் மாத்திரமே வேலை வழங்கப்படுகின்றது.

இந்த நிலையில் கைவிடப்பட்ட இந்தத் தோட்டத்தின் தேயிலைத் தொழிற்சாலையின் ஒரு தொகுதி உபகரணங்களைத் தோட்ட நிர்வாகம் தோட்டத்தொழிலாளர்களுக்கு அறிவிக்காமல் நேற்று 3 ஆம் திகதி லொறி ஒன்றின் மூலம் மிகவும் இரகசியமான முறையில் அப்புறப்படுத்தியுள்ளது.

இதனைக் கேள்வியுற்ற தோட்ட மக்கள் உடனடியாகத் தேயிலைத் தொழிற்சாலைக்கு வருகை தந்து தேயிலைத் தொழிற்சாலையின் உபகரணங்களை அப்புறப்படுத்துவதற்காக வருகை தந்தவர்கள் பயணித்து வந்த கார் ஒன்றினைத் தடுத்து வைத்துள்ளனர். இந்தச்சம்பவம் தொடர்பாக கலபொட தோட்டத்தொழிலாளர்கள் தொழிற்சங்கங்களுக்கும் நாவலப்பிட்டி பொலிஸாருக்கும் அறிவித்துள்ளனர்.
நன்றி: வீரகேசரி இணையம் 1/4/2012 6:26:38 PM

Maduro in court- U.S. kidnapped Me

Maduro, making first court appearance, says U.S. ‘kidnapped’ him As the deposed Venezuelan president and his wife, Cilia Flores, grapple wit...