SHARE

Monday, November 22, 2021

2021 மாவீர நாள் முழக்கச் சுவரொட்டி

மாவீரர் வாரம் (21-27) - 11-2021


மாவீரத் தோழர்களே செவ்வணக்கம்!

இந்தமண் எங்களின் சொந்தமண் என்றுரைத்து  மாண்டோரே செவ்வணக்கம்!!

👉 புலி இல்லா இலங்கையை அந்நியருக்கு பூண்டோடு விற்றுவிட்ட பக்ச பாசிசமே, தேசிய மாவீரர் நினைவு கூரலை தடைசெய்யாதே!

ஈழ தேசிய நில அபகரிப்பை நிறுத்து;

போர்க்குற்றத்துக்கு பொறுப்பெடு; பொது நீதி வழங்கு;

`ஏக்க ரட்டே` பேசிஉலக மறு பங்கீட்டுக்கு நாட்டை ஏலம் போடாதே;

இலங்கையில் மூன்றில் இரண்டு (ஏறத்தாழ 60%), கடல் வான் பரப்புக்குச் சொந்தமான ஈழ தேசத்தின் சுய நிர்ணய உரிமைக்கு பொது வாக்கெடுப்பு நடத்து!

இரண்டே ஆண்டுகளில் மொத்த நாட்டையும் வங்குரோத்தாக்கிய இராணுவ சர்வாதிகார பாசிஸ்ட் கோத்தாபாயவே பதவி விலகு!

 👉 இந்திய விரிவாதிக்கமே, 

ஈழத்தை இன்னொரு இந்திய அடிமை மாநிலமாக்கும் சதிகார உல்க மறுபங்கீட்டுத் திட்டத்தைக் கைவிடு!

👉 புலம் பெயர்ந்த, பெயராத, இடையிடையே பெயரும் தமிழ் இனத்துவ,தரகுத்துவ கும்பலே, தமிழகத் தொப்புள் கொடியே, `இந்திய ஒன்றிய அரசின்` தோப்புச் செடியே, 

இந்திய விரிவாதிக்கத் திட்டத்துக்கு துணை போகாதே! ஈழத்தை இந்திய மாநிலம் ஆக்காதே!

இந்தியக்கைக்கூலி TELO சிவாஜிலிங்கமே இந்திய விரிவாதிக்க ஏவல் நாயாக செயற்படாதே!

அந்நிய இந்திய அமெரிக்க நேட்டோ இராணுவத்  தலையீட்டீற்கு அழைப்புவிடாதே!

👉 ஈழ தேசமே,

பாசிச எதிர்ப்பு விவசாயக் கிளர்ச்சியில், சிங்கள தேசத்துடன் ஐக்கியப்படுவோம்;

மலையகத்தை ஒன்றிணைப்போம்;

பக்ச பாசிசத்தின் சோனகர் எதிர்ப்பை முறியடிப்போம்;

போர்க்குற்றத்துக்கு நீதிபெற சுய நிர்ணய பொது வாக்கெடுப்பைஉயர்த்திப்பிடிபோம்;

ஈழ தேசிய ஒற்றுமையை இறுகப்பற்றுவோம்,

இறுதி வெற்றி ஈழமக்களுக்கே !

புதிய ஈழப் புரட்சியாளர்கள் 

India, Sri Lanka head to a win-win relationship

India, Sri Lanka head to a win-win relationship 《  Asian Age 17 Dec 2024  》 All the signs are pointing to the possibility of a major win for...