SHARE

Saturday, August 11, 2012

மக்கள் அஞ்சலி! மத ஆராதனை!! விடை பெற்றான் மரியதாஸ் டெல்றொக்சன்!!!


மக்கள் அஞ்சலி! மத ஆராதனை!! விடை பெற்றான் மரியதாஸ் டெல்றொக்சன்!!!

வவுனியா சிறைச்சாலையில் சிங்களச் சிப்பாய்களின் கொலைவெறித் தாக்குதலில் படுகாயமடைந்து மகர சிறைக்கு மாற்றப்பட்டு கோமா நிலையில் உயிரிழந்த, தமிழ் அரசியல் கைதியான மரியதாஸ் டெல்றொக்சனின் இறுதிக் கிரியைகளும், இறுதி வணக்க நிகழ்வுகளும் இன்று மதியம் இடம்பெற்றன.

இறுதி வணக்க நிகழ்வில்  மக்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

இவ் வணக்க நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய நாடாளுமன்ற வாதிகள்,  இது திட்டமிடப்பட்ட கொலையே, உரிய நீதி கிடைக்க வேண்டும். என உரையாற்றினர். எனினும் திட்டமிட்டது யாரென்றோ, உரிய நீதி என்னவென்றோ அவர்கள் எதுவும் உரைக்கவில்லை. இது பாதிக்கப்பட்ட மக்களை மேலும் பாதித்தது.

அதன்பின்னர் சமய முறைப்படி பாசையூர் புனித அந்தோனியார் தேவாலயத்திற்கு உடல் எடுத்துச் செல்லப்பட்டு, இறுதி ஆராதனை நடத்திய பின்னர், கொஞ்செஞ்சி மாதா சேமக்காலையில் டெல்றொக்சனின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

சமரன்: இந்தியாவின் அனைத்துத் துறைகளையும் அமெரிக்கக் கம்பெனிகளுக்கு திறந்துவிட நிர்ப்பந்திக்கும் ஒபாமாவின் ஆணையை முறியடிப்போம்!

சமரன்: இந்தியாவின் அனைத்துத் துறைகளையும் அமெரிக்கக் கம்பெ...:

இந்தியாவின் அனைத்துத் துறைகளையும் அமெரிக்கக் கம்பெனிகளுக்கு திறந்துவிட நிர்ப்பந்திக்கும் ஒபாமாவின் ஆணையை முறியடிப்போம்!  
மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம்



புதிய ஈழம்: நாடாளுமன்ற முறை குறித்த பாட்டாளிவர்க்கக் கட்சியின்...

புதிய ஈழம்: நாடாளுமன்ற முறை குறித்த பாட்டாளிவர்க்கக் கட்சியின்...:   நாடாளுமன்ற முறை குறித்த பாட்டாளிவர்க்கக் கட்சியின் போர்த்தந்திரமும், செயல்தந்திரங்களும். சமரன் - ஜனவரி, 1989

''தற்காலிகப் புரட்சி அரசாங்கத்தில் ஒரு பாட்டாளி வர்க்கக்கட்சி பங்குகொள்வது என்பதும் தற்போதைய நிலையிலுள்ள தரகு முதலாளித்துவ,
நிலப்பிரபுத்துவ கூட்டுச் சர்வாதிகார அரசில் உள்ள பாராளுமன்ற முறையிலான அரசாங்கங்களில் பங்கு கொள்வது என்பதும் ஒன்றல்ல. இரண்டும் வெவ்வேறானது. முன்னால் கூறப்படுவது லெனினியக் கோட்பாடு வழியில் அமைந்த ஒரு சரியான பாட்டாளிவர்க்கச் செயல்தந்திரமாகும். இரண்டாவது வகைப்பட்டது இந்நாட்டில் வலது, இடது போலிக் கம்யூனிஸ்டுகள் பயன்படுத்தும் சீர்திருத்தச் செயல் தந்திரங்கள் ஆகும். '' சமரன்

India, Sri Lanka head to a win-win relationship

India, Sri Lanka head to a win-win relationship 《  Asian Age 17 Dec 2024  》 All the signs are pointing to the possibility of a major win for...