SHARE

Thursday, October 29, 2015

வேடம் கலையும் ரணில் மைத்திரி நல்லாட்சி நாடகம்!

ல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு முன்பாக இன்று (29-10-2015), மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட அமைதி ஆர்ப்பாட்டத்தின் மீது, நல்லாட்சி வேடம் பூண்ட ரணில் மைதிரி பாசிச அரசின் , ஏவல்படை,மற்றும் கலகம் அடக்கும் படை  கண்ணீர்ப் புகைப் பிரயோகம், விசைத் தண்ணீர்வீச்சு  மற்றும் குண்டாந் தடியடி தாக்குதல்களை நடத்தி மாணவர் குரலை வன்முறை மூலம் நசுக்கியுள்ளது.

போராடக்கூடாது என எச்சரித்து ``பாடம் கற்பித்துள்ளது``!

அனைத்து உயர் தேசிய கணக்காளர் பாடநெறிக்கான மாணவர் ஒன்றியம் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் மீதே இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட  39 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களில் 32 மாணவர்களும்,  5 மாணவிகளும் 2 பிக்கு மாணவர்களும் அடங்குவதாக காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

அமைதியாக ஆர்ப்பாட்டம் நடத்திய அனைத்து உயர் தேசிய கணக்காளர் பாடநெறிக்கான மாணவர் ஒன்றிய மாணவர்கள் மீது ரணில் மைத்திரி பாசிச அரசு கட்டவிழ்த்த வன்முறைத் தாக்குதலை புதிய ஈழப் புரட்சியாளர்களாகிய நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்!

கைது செய்யப்பட்ட அனைத்து மாணவர்களையும் உடனடியாக விடுதலை செய்யக் கோருகின்றோம்!

மாணவர் கோரிக்கைகளுக்கு மதிப்பளித்து தீர்வை முன்வைக்க வேண்டுகின்றோம்!

தமிழீழ மக்கள் சார்பில் எதிர்கட்சித் தலைவர் சிங்கக் கொடி அகிம்சைச் சம்பந்தன் இந்த வன்முறையை கண்டிக்க வேண்டுமென கட்டளை இடுகின்றோம்.
புதிய ஈழப்புரட்சியாளர்கள்





Maduro in court- U.S. kidnapped Me

Maduro, making first court appearance, says U.S. ‘kidnapped’ him As the deposed Venezuelan president and his wife, Cilia Flores, grapple wit...