Sunday 10 January 2016

கழகக் கை நூல்: காலனியாதிக்கமும் காலநிலைப் பேரிடர்களும்


நூல் அறிமுகம்

தமிழக வெள்ளப் பேரிடர் தொடர்பாக கழகம், `வெள்ளம் வரட்சியினால் ஏற்படும் பேரிடர்கள் அற்ற புதிய உலகம் படைக்க ஏகாதிபத்தியத்தையும்,காலனியாதிக்கத்தையும் எதிர்த்துப் போராடுவோம்` என்று முழங்கி ஒரு கை நூலை வெளியிட்டுள்ளது.

இக் கை நூல் தமிழக கால நிலைப் பேரிடர்களை, சர்வதேசப் பரிமாணத்திலும்,குறிப்பாக ஏகாதிபத்திய காலனியாதிக்க அரசியல் சமூக வரலாற்றுப் பின் புலத்திலும் எடுத்து விளக்கி, அதன் பகுதியாக உள்நாட்டு நிலைமைகளை ஆராய்கின்றது.

இவ் ஆய்விலிருந்து  யுத்ததந்திர செயல்தந்திர மற்றும் உடனடிக் கடமைகளை வகுத்தளிக்கின்றது. 

பூமிக் கிரக  வெப்ப உயர்வுப் பிரச்சனைக்கும், காலனியாதிக்க போர்கள் ஏற்படுத்திய இயற்கைக்  கட்டுமான அழிவுக்கும் இடையில்  ஒரு தர்க்க ரீதியான இணைப்பைக் காட்டுகின்றது.

இக் கை நூலை மேற்காணும் படத்தில் அழுத்தி கண்டறிந்து படிக்கலாம்.

படியுங்கள்! பரப்புங்கள்! நிதி ஆதாரம் வழங்குங்கள்!

அநுரா ஆட்சியில் செல்வினின் பனை அபிவிருத்தி சபைத் தலைவர் பொறுப்பு பறிப்பு!

அநுரா ஆட்சியில் செல்வினின் பனை அபிவிருத்தி சபைத் தலைவர் பொறுப்பு பறிப்பு! பனை அபிவிருத்தி சபைத் தலைவராக இரானியேஸ் செல்வின் அவர்களைப் பொறுப்ப...