SHARE

Tuesday, November 21, 2023

பொலிஸ் சித்திரவதையில் அலெக்ஸ் படுகொலை!

 நீதி வேண்டும்! நீதி வேண்டும்!!

மக்கள் அவலக்குரல்!!!

சித்திரவதை! பொலிஸ் படுகொலை!!
 மைய உடலின் பின் புற, மேல் கீழ் பாகங்கள் படுகாயம், 
அலெக்ஸ் ‘மரணம்’
இயற்கை மரணம் இல்லை, மருத்துவ அறிக்கை.




அலெக்சின் இறுதிப் பயணம்:25-year-old Nagarasa Alex describes the torture
he suffered at the hands of Vaddukottai police. Alex is reported to have died the same day.

அலெக்ஸ்-வாக்குமூலம்

இலங்கை-ஈழம் யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை சித்தங்கேணி எனும் சிற்றூரைச் சேர்ந்தவர், 26 வயதுடைய அலெக்ஸ் என்ற தமிழ் இளைஞர்.இவர் உள்ளூரில் நடைபெற்ற ஒரு சிறு குற்றச் செயல் சம்பந்தமாக சந்தேகத்தின் நிமித்தம்  பொலிசாரால் கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலையத்தில் ‘’விசாரணைக்கு’’ உட்படுத்தப்பட்டார். விசாரணையில் அலெக்ஸ் இக்குற்றச் சாட்டை தொடர்ந்து மறுத்து வந்தார்.

இவரை 19-11-2023 ஞாயிறு அன்று பிரேத பரிசோதனைக்காக யாழ் மருத்துவ மனையில் ஒப்படைத்த பொலிசார், ‘’அலெக்ஸ் பொலிஸ் நிலையத்தில் இருந்து மருத்துவ மனைக்கு எடுத்து வரும் வேளையில், ’இடை வழியில் இறைபதம் அடைந்தார்’ என அதிகார பூர்வ அறிக்கை சமர்ப்பித்துள்ளனர்.

பிரேத பரிசோதனை அறிக்கை ’அலெக்சின் மரணம் இயற்கை மரணம் அல்ல எனவும் அவரின் பின் மைய உடற் பகுதியின் மேலும் கீழும் படுகாயப்பட்டதற்கான அடையாளங்கள் பல காணப்பட்டன’ எனக் கண்டறிந்துள்ளது.


Trunk எனும் மருத்துவப் பதம் கருதும் உடற் பாகங்கள்

அலெக்ஸ் பலியான அன்று, தான் எவ்வாறு விசாரிக்கப்பட்டேன், எவ்வாறு சித்திரவதை செய்யப்பட்டேன், எவ்வாறு துன்புறுத்தவும் மிரட்டவும் பட்டேன் என தெளிவாகவும்,விரிவாகவும் கூறியுள்ளார். (ஆண் பெண் அடங்கிய இருவரது கேள்விக்கு அலெக்ஸ் பதிலளிக்கின்றார், சில கேள்விகள் வீடியோவில் தெளிவாக இல்லை).

அவர் கூறியதாவது:

‘’ களவு போன சந்தேகத்தில் பொலிஸ் கொண்டு போய் அடிச்சது. கட்டித் தூக்கீற்று அடிச்சவங்கள். துணியால மூஞ்சையைக் கட்டிப் போட்டு தண்ணியை ஊத்தி ஊத்தி அடிச்சவங்கள்.எழுந்திருக்க முடியல்ல....சாப்பாடு இறங்கல்ல..ஒரு கொஞ்சமாத்தான் சாப்பிட வேண்டிக் கிடந்தது.

அப்ப.... துணியக் கட்டி அடிச்சுப்போட்டு விட்டவங்கள்.பேந்து கயிற்றைக் கட்டி ஒரு ரெண்டு முழத்துக்கு மேல தூக்கிப் போட்டு பிறங்கையில் கயித்தக் கட்டி இழுத்துப்போட்டு அடிச்சவங்கள்...பிடிச்சு வச்சு அடிச்சவங்கள்.

கேட்டுக் கேட்டு அடிச்சவங்கள்.நான் இல்லை அண்ணா...... இல்லை அண்ணா......

பேந்து பெற்றோலை வாயில தடவிப் போட்டு அடிச்சவங்கள்...நான் .... மயங்கிப் போனன் அதில.

அதுக்குப் பிறகு என்ன நடந்தது என்று தெரியாது.

அதுதான் நொந்தது எனக்கு...இரண்டு கையும் தூக்க இயலாது இப்ப.
என்னால ஏலாம கிடக்கு.

முதல் நாள் சாப்பாடு தரல.

அடுத்த நாள் தான் சாப்பாடு தந்து, அவையின்ர றூமில கூட்டிக் கொண்டுபோய் வைச்சிருந்து சொன்னவை...சொல்ல வேண்டாம், கேஸ் போட வேண்டாம், ஹியூமன்ஸ் றைற்சில ஒன்றும்.... எண்டெல்லாம் சொன்னவை எனக்கு. சொல்லிப் பிந்தி அடுத்த நாளும் பயப்பிடுத்திவிட்டவை என்ன (என்னை). 
(கேள்வி) ஓ..ஓ..என்னைப்  பயப்பிடுத்தி விட்டவை. நான் ஒன்றும் பறையல்ல. அவ்வளவுதான்.

சாராயம் தந்தவங்கள் குடிக்க. ஒரு பெக் சாராயம். அவ்வளவு தான். 

ரெண்டு மணித்தியாலங்களுக்கு மேல் கட்டி வைச்சிருந்தவங்கள்.

(வீடியோ-https://youtu.be/sQHTB6zHp58?si=Hl5YvPwu6oplqFiQ- நிறுத்தம். )

இவ்வாக்கு மூலம் அளித்த அன்று அலெக்ஸ் இறந்தார்.

அவரது மரண வாக்குமூலம் பிரேத பரிசோதனைக் குறிப்பை ஊர்ஜிதம் செய்கின்றது.

அலெக்ஸ் ‘விசாரணையின்’ போது இறந்தாரா, போகிற வழியில் இறைபதம் அடைந்தாரா என்கிற சட்ட வாதத்தில் நமக்கு நம்பிக்கை இல்லை.

அலெக்ஸ் எங்கு இறந்திருந்தாலும் அவர் சித்திரவதையால் இறந்தார். அதற்கு பொலிசாரே பொறுப்பு.

(காகித) சட்டத்தின் ஆட்சியில் சித்திரவதை தடை செய்யப்பட்ட ஒன்று.அதனால் தான் அமெரிக்கா அதை அபுகிரேயிலும், குவாண்டனாமோ பேய்யிலும் செய்தது. அலெக்ஸிற்கு இழைக்கப்பட்ட Waterboarding சித்திரவதை சர்வதேசச் சட்டங்களில் தடை செய்யப்பட்ட விசாரணை முறையாகும்.

ஆனால் இஸ்ரேலின் புண்ணியத்தில் இப்போது சர்வதேச சட்ட நியமம் என்று ஒன்று உலகில் ஒக்ரோபர் 7 (2023) இற்குப் பின்னால் இல்லாதொழிந்துவிட்டது.

பொருளாதார வங்குரோத்து கொள்ளையில் குற்றவாளி என உச்சநீதி மன்றம் தீர்ப்பளித்த குற்றவாளி 'கேக்' ஊட்ட, ஜனாதிபதி கை தட்டி பிறந்த நாள் கொண்டாடுகின்ற ஆட்சி! 

IMF அதானி பொருளாதாரத் திட்டத்தை பாசிசக் கரங்கொண்டு அமூலாக்க பொலிசாருக்கு சித்திரவதை சிறந்த கருவியாகும்.

ஆக நீதி எங்கே பெறுவது? எப்படிப் பெறுவது?



அலெக்சின் ஆன்மா சாந்தியடைய சிந்திப்போம்!



India, Sri Lanka head to a win-win relationship

India, Sri Lanka head to a win-win relationship 《  Asian Age 17 Dec 2024  》 All the signs are pointing to the possibility of a major win for...