SHARE

Sunday, October 07, 2012

பாதுகாப்பு உத்தரவாதத்துடன் கூடங்குளம் அணு உலையைத் திற!


பாதுகாப்பு உத்தரவாதத்துடன் கூடங்குளம் அணு உலையைத் திற!
----------------------------------------

``அமெரிக்காவின் உலக மேலாதிக்கத்திற்குச் சேவைசெய்யும் ஒரு எடுபிடி நாடாக இந்தியாவை மாற்றும் இராணுவ ஒப்பந்தத்தை இந்தியா ஏற்ற பிறகுதான், இந்தியாவுடன் அணுசக்தி ஒப்பந்தத்தை அமெரிக்கா செய்துகொண்டது. அணுசக்தி ஒப்பந்தமும்கூட ஈரானுக்கு எதிராக அமெரிக்கா எடுக்கும் நடவடிக்களை ஆதரிக்க வேண்டும் என்ற அமெரிக்காவின் ஹைடு சட்ட நிபந்தனக்கு உட்பட்டே போடப்பட்டது. ஈரானிலிருந்து இந்தியா எண்ணெய் இறக்குமதி செய்வதைத் தடுப்பது; இந்தியாவின் தற்காப்புக்கான அணு ஆயுதத் திட்டத்தைச் சிதைப்பது; இந்தியாவின் சுயேச்சையான அணுமின் திட்டத்தை ஒழிப்பது; இந்திய அணு ஆற்றல் சந்தையில் தமக்குப் போட்டியாக விளங்கும் ரசியா மற்றும் பிரான்ஸ் போன்ற ஏகாதிபத்திய நாடுகளை விரட்டுவது என்பதே அமெரிக்காவின் திட்டமாக உள்ளது.

 ஒபாமா ஜனாதிபதியாகப் பதவியேற்றபிறகு, 2010ஆம் ஆண்டு அமெரிக்கா தனது தேசிய பாதுகாப்புத் திட்டத்தை வெளியிட்டுள்ளது. ஜனநாயகத்தை மீட்பது, மனித உரிமையைக் காப்பது, ஊழலை ஒழிப்பது என்ற பேரில் உலகின் எந்த ஒரு நாட்டிலும் அமெரிக்கா தலையிடும் என்றும்; அதற்கு அரசுசாரா தொண்டு நிறுவனங்களை ஈடுபடுத்தும் என்றும் அது கூறுகிறது.

ஏமன், எகிப்து, லிபியா போன்ற நாடுகளில் அமெரிக்காவின் எடுபிடியாக இருந்த சர்வாதிகார ஆட்சிகளை எதிர்த்து மக்கள் போராடியபோது அந்தப் போராட்டங்களைப் பயன்படுத்தி அமெரிக்கா “ஆட்சி மாற்றத்தின்- Regime Change” மூலம் தமது பொம்மை ஆட்சிகளை நிறுவிக்கொண்டது. அதற்கு அரசுசாரா தொண்டு நிறுவனங்கள் துணைநின்றன.

அதற்கும் முன்னர் சோவியத் ரசியாவிலிருந்து பிரிந்து வந்த நாடுகளில் பல வர்ணப் புரட்சிகள் எனும் பேரில் தொண்டு நிறுவனங்களைப் பயன்படுத்தி
“ஆட்சிமாற்றத்தை” அமெரிக்கா செய்தது. இந்தியாவிலும் அன்னா அசாரே தலைமையிலான ஊழல் எதிர்ப்பு இயக்கத்தினரும், உதயகுமார்
தலைமையிலான அணு உலைக்கு எதிரான இயக்கங்களும் இன்னும் பலவகையான தொண்டு நிறுவனங்களும் “அமெரிக்காவிடம் நிதியுதவிபெற்று அதன் கைப்பாவைகளாகச் செயல்படுகின்றன”.

அமெரிக்காவின் தீவிர விசுவாசியான மன்மோகன் கும்பல் அமெரிக்காவின்
கோரிக்கையை முழுமையாகச் செயல்படுத்தும் முறையில் அதற்கு நிர்ப்பந்தம் கொடுப்பது தற்போதைய போராட்டங்களின் நோக்கமாகும். அமெரிக்க ஏகாதிபத்தியத்தையும், அதன் தாசனான மன்மோகன் கும்பலையும் எதிர்த்து இந்திய மக்கள், புரட்சிகரப் போராட்டத்திற்குத் தயாராகிவிட்டால் அப்போது “அமெரிக்காவின் நேரடிப் பொம்மை ஆட்சியை நிறுவ இந்தத்
தொண்டு நிறுவனங்கள் துணை நிற்கும்”. அதற்காகப் பல்வேறு கோரிக்கைகளை வைத்து அவைகள் போராடுகின்றன. அந்த நோக்கத்தை அடைவதற்கு அரசியல் திரட்டலுக்கான போராட்டங்களில் ஒன்றுதான் கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டமும்.``
---------------------------
கழகப் பிரசுரத்தில் இருந்து: http://samaran1917.blogspot.co.uk/2012/10/blog-post.html
================
முழு விரிவான கூடங்குளம் குறுநூலைப் படிக்க இணைப்பில் அழுத்தவும். 
http://samaveli.tripod.com/
================
 

Maduro in court- U.S. kidnapped Me

Maduro, making first court appearance, says U.S. ‘kidnapped’ him As the deposed Venezuelan president and his wife, Cilia Flores, grapple wit...