SHARE

Tuesday, September 20, 2011

இந்திய எதிர்ப்புப் போராளி திலீபனின் நினைவு தினம்,ஈழத்தமிழர்களின் இந்திய விரிவாதிக்க எதிர்ப்பு தினம்!

இந்திய எதிர்ப்புப் போராளி திலீபனின் நினைவு தினம், ஈழத்தமிழர்களின் இந்திய விரிவாதிக்க எதிர்ப்பு தினம்!

இப்பொன்னாளில் ராஜீவ் கொலை வழக்கு கைதிகள் நளினி, பேரறிவாளன்,சாந்தன்,முருகன் நால்வரின் விடுதலைக்காக முழக்கமிடுவோம்! போராடுவோம்!

ஈழத்தில் சுரேஸ்,தமிழகத்தில் நெடுமாறன்,புலம்பெயர்ந்த நாடுகளில் உருத்திரகுமாரன் தலைமை ஒருசேர அரங்கேற்றும் இடைவழிச்சமரசத்தை எதிர்ப்போம்!

தமிழீழ தேசிய சுயநிர்ணய உரிமைக்கோரிக்கையை உயர்த்திப்பிடிப்போம்!


                         ராஜிவ் கொலை வழக்கு

ராஜிவ் கொலையில் மரணதண்டனை விதிக்கப்பட்டிருந்த பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய மூவரின் கருணை மனுவை ஏற்றுக் கொள்ள இந்திய ஜனாதிபதி மறுப்பு தெரிவித்துள்ளார். இந்த முடிவு தமிழ் மக்களின் மனங்களில் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சியுள்ளதாக அமைந்துள்ளது.

இந்த முடிவானது, ஈழவிடுதலையை தொடர்ந்து ஆதரிக்கும் தமிழக மக்களிடையே பெரும் கொந்தளிப்பைத் தூண்டியுள்ளது. இதன் விளைவாக தமிழகம் எங்கும் தன்னியல்பான இயக்கங்கள் வெடித்து கிழம்பியுள்ளன.

செங்கொடி என்கிற செம்மலர் தீய்ந்து கரியாகிப்போனாள்!


இதன் பிரதி விம்பங்கள் புலம்பெயர் நாடுகளிலும் தெறிக்கத் தொடங்கிவிட்டன. இந்தத் தன்னியல்பான மக்கள் இயக்கங்களின் மத்தியில் பல்வேறு சமூக வர்க்கங்களும் தம் நலன் சார்ந்து, தம் நிலை சார்ந்து, தம் சொந்த முழக்கங்களை முன்வைத்து , தம் சொந்தக் குறிக்கோள்களை அடைய தலையீடு செய்து போராடி வருகின்றன.

இந்நிலையில் சர்வதேசிய பாட்டாளிவர்க்க இயக்கத்தின் தமிழீழப் படைப்பிரிவினரான புதிய ஈழப் புரட்சியாளரின் நோக்கு நிலையை விளக்குவது இச்சிறு பிரசுரத்தின் நோக்கமாகும்.

ராஜிவ் படுகொலையானது புற நிலையில், 1987 ஜூலை மாதம் இலங்கை அரசை இந்திய விஸ்தரிப்பு வாதத்துக்கு அடிபணியச் செய்யும் பொருட்டு செய்து கொள்ளப்பட்ட இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் அரசியல் எதிர் விளைவாகவும்; இவ் ஒப்பந்தத்தை அமுலாக்கவும், விடுதலைப் புலிகளை நிராயுதபாணிகளாக்கும் பொருட்டும் இலங்கையில் நிலை கொண்ட ராஜிவ் படை இழைத்த யுத்த குற்றங்களின் இராணுவ எதிர் விளைவாகவும் எடுக்கப்பட்ட நடவடிக்கையாகும்.

1947 இல் அரைக்காலனியப் போலிச் சுதந்திரம் கிடைத்த பின்னரும் இலங்கை நாடானது உலக வங்கியினதும் அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகளினதும் நலன்களைச் சார்ந்தே பிரதானமாக இயங்கி வந்தது.ஆனால் இக்காலத்தில் சர்வதேசிய சூழ்நிலையானது இரட்டைத் துருவ அமைப்பைக் கொண்டிருந்தது.

அதாவது உலக மேலாதிக்கத்திற்கான போட்டியானது அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகளுக்கும் சோவியத் சமூக ஏகாதிபத்தியவாதிகளுக்கும் இடையில் பிரதானமாக முனைப்புற்றிருந்தது. இந்த அணிசேர்க்கையில் அரசியல் ரீதியாக இலங்கை, அமெரிக்க ஏகாதிபத்தியம் (மற்றும் பாக்கிஸ்தான்) சார்ந்தும்; இந்தியா அரசியல் ரீதியாக சோவியத் சமூக ஏகாதிபத்தியத்தைச் சார்ந்தும் இயங்கி வந்தன.

1971 இந்திய பாக்கிஸ்தான் போரில் இலங்கை பாக்கிஸ்தானுக்கு ஆதரவாக செயற்பட்டது.Voice of America வானொலி நிலையம் அமைக்க இலங்கை அனுமதித்தது. 70 களின் நடுப்பகுதியில் தென்னாசிய பிராந்திய நாடுகளில் இலங்கையே முதன் முதலாக திறந்த பொருளாதார உலக மயமாக்கல் கொள்கையைக் கடைப்பிடித்தது.

இதன் விளைவாக அரைக்காலனிய இலங்கை நாடு ஜப்பானிய ஏகாதிபத்தியத்தின் சந்தையாக மாறியது.

இந்தப் பின்னணியில் “தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் நேரும் தருணத்தில்”,அவசரகால நிலைமையில் இந்தியாவிடம் அடைக்கலம் கோரியதற்கு அப்பால் இலங்கை அரசானது அரசியல் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் வெளிவிவகாரக் கொள்கையிலும் இந்தியாவின் விரிவாதிக்கக் குடைக்கு வெளியே நின்ற ஒரு நாடாகவே இருந்தது.

இதனை சகித்துக் கொள்ளாத, இதனால் கசப்புணர்வு கொண்ட பஞ்ச சீல இந்திய ஆளும் கும்பல் இலங்கைக்கு அறிவுரைகளும் ஆலோசனைகளும் அதட்டல்களும் மிரட்டல்களும் விட்டு தன்னுடைய விரிவாதிக்கக் குடைக்குள் வீழ்த்துவதற்கு போராடிவந்தது.

இதே நேரத்தில் 70 களில் ஈழத்தமிழர் விடுதலைப் போராட்டத்துக்கு தலைமை ஏற்றிருந்த சமரவாதத் தமிழ் தலைமையினர் இந்திய ஆளும் கும்பலோடும் தமிழக மாநில ஆளும் கும்பல்களுடனும் அடுத்த கட்ட அரசியல் ஸ்தாபன உறவுகளை ஸ்தாபித்திருந்தனர்.

இந்த வேளையில்தான் இலங்கையில் 1983 ஜூலை இனப்படுகொலை அரங்கேறியது. இதன் விளைவாக ஈழத்தமிழர்கள் உயிர்த்தஞ்சம் கோரி தமிழீழக் கடல் தொழிலாளர்கள், தமிழகக் கடல் தொழிலாளர்கள் ஆகியோரின் ஒன்றிணைந்த வீரதீரச் செயல்களால் தமிழகத்துக்குள் அகதிகளாகக் குவிந்தனர். மறுபுறம் 70 களின் பிற்பகுதில் கெரில்லாப் போர்க்கட்டத்திலிருந்த ஆயுதமேந்திய தமிழீழப் போராட்டம் உள்நாட்டு யுத்தமாக வடிவமெடுத்தது.

ஈழவிடுதலைப் போராட்ட வரலாற்றின் இப்புதிய இரு பரிணாமங்களையும் இந்திய அரசு தனது விரிவாதிக்க நலனுக்கு உட்படுத்த முனைந்தது.

இதற்கமைய தனது அரசியல் வெளிவிவகார மற்றும் இராணுவக் கொள்கைகளையும் வரையறுத்துக் கொண்டது. இதற்குத் துணையாக, மேலும் இதற்குப் பக்கபலமாக இந்திய விரிவாதிக்கத்தின் ஆதரவாளர்களும் தமிழகத்தின் இனமானத் தமிழ் சமரசவாதிகளும்

“கொல்லாதே கொல்லாதே ஈழத்தமிழர்களைக் கொல்லாதே”


”இந்திய அரசே இந்திய அரசே ஈழத்தமிழர்களைக் காக்க இலங்கையில் இராணுவத் தலையீடு நடத்து”


என முழங்கி மனிதச் சங்கிலிப் போராட்டங்கள் நடத்தி ஈழத்தமிழர்களை இந்திய விஸ்தரிப்புவாத அடிமைச் சங்கிலியால் கட்டிப்போட பாதையைச் செப்பனிட்டனர். இதே கடமையைத்தான் ஈழத்தமிழினத்தின் சமரசவாத தமிழர் கூட்டணி அமிர்தலிங்கம் கும்பலும் நிறைவேற்றப் பாடுபட்டது. இந்தப் புண்ணியவான்களின் பேருதவியுடன் `ஈழத்தமிழரின் பாதுகாவலன்` என்கிற கொடியேந்தி இலங்கையை தனது விரிவாதிக்க நலனுக்கு உட்படுத்தும் உண்மை நோக்கத்தை மூடிமறைக்க ஒரு தார்மீக நியாயத்தை இந்தியா பெற்றுக் கொண்டது.

இது ஒரு பெரும் அரசியல் வெற்றியாக இருப்பினும் இதை மட்டும் கொண்டே இலங்கை அரசைப் பணியவைப்பது சாத்தியமாக இருக்கவில்லை.

இதற்காக இந்திய அரசு ஒரு சதித்தனமான இராணுவத்திட்டத்தை வகுத்தது

இத்திட்டம் இரு அம்சங்களைக் கொண்ட இரட்டைக் குழல் துப்பாக்கியாக இருந்தது. அவ் அம்சங்கள் ஆவன;

1. ஈழப் போரளிகளுக்கு ஆயுதப் பயிற்சி அளித்து, ஆயுதங்களை வழங்கி இலங்கை அரசுக்கு எதிரான பயங்கரவாத படுகொலை நடவடிக்கைகளைத் தூண்டுவதன் மூலம் இலங்கை அரசைப் பணிய வைப்பது,


2. ஆயுதப் பயிற்சி என மோகம் காட்டி பயங்கரவாதப் படுகொலைப் பாதையில் வழிதிருப்புவதன் மூலம் தமிழீழத் தேசிய விடுதலைக்காக ஒரு மக்கள் ஜனநாயக இயக்கத்தை வளரவிடாமல் தடுப்பது,

இந்த இரு குறிக்கோள்களையும் நிறைவேற்றும் பொறுப்பை இந்திய ஆளும் வர்க்கங்களினதும் இந்திய மைய அரசினதும் சார்பில் இந்தியப் புலனாய்வுத்துறையான Reasarch And Analysis Wing (RAW ) இன் கையில் ஒப்படைக்கப்பட்டது. தமிழகம் திறந்து விடப்பட்டு தமிழகத்தில் சட்டபூர்வமாகவும் பகிரங்கமாகவும் இயங்கி வந்த,இலங்கையில் தடைசெய்யப்பட்ட ''பயங்கரவாத இயக்கங்களை'' அணுகி இராணுவப் பயிற்சிக்கு ஏற்பாடு செய்தது. உத்தரப் பிரதேசத்தில் பிரதானமாகவும் தமிழ்நாட்டின் கும்பகோணம் மற்றும் பகுதியில் துணையாகவும் இராணுவப்பயிற்சி முகாம்கள் அமைக்கப்பட்டு RAW உளவாளிகளால் பயிற்சிகள் வழங்கப்பட்டன. இவற்றில் பெரும்பாலான முகாம்களில் சிறைக்கைதிகளாக சுமார் இரண்டு வருடங்கள் முடக்கி வைக்கப்பட்டிருந்த ஈழப்போராளிகள் உடற்பயிற்சிக்கு மேல் எந்த இராணுவப் பயிற்சிகளையும் பெறவில்லை.( மேலதிக புள்ளிவிபரங்களுக்கு டக்ளஸ்சை அணுகவும்)


இவ்வாறு தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த ஈழப் போராளிகளை பயன்படுத்தி 1985 நடுப்பகுதிகளில் அப்பாவிச் சிங்கள மக்களுக்கு எதிராக RAW ஒரு படுகொலைத் தாக்குதலை ஏவியது. இந்திய உளவுப்படையின் கைக்கூலிகளாகச் செயல்பட்டு, ஈழப் போராளிகளும் தம் சொந்த நாட்டு மக்களுக்கு எதிராக இந்த ஈனத்தனமான செயலை-பங்களாதேசத்தைப்போல் ஒரு `கேக் துண்டை` இலங்கையிலும் வெட்டி தங்கள் வாயில் வைக்குமென்ற மூடத்தனத்தின் விளைவாகச்- செய்து முடித்தனர். இந்த நடவடிக்கையானது அன்றிருந்த J.R. ஜெயவர்த்தனா அரசுக்கு ஒரு பெரும் நிர்ப்பந்தமாக அமைந்து இந்திய விரிவாதிக்கத்தின் காலில் இறுதியாக வீழ்த்தப்பட்டார்.

இலங்கை அரசை தனது காலில் வீழ்த்திய மறுகணமே ஈழப்போராளிகளின் மீது பாய்ந்தது இந்திய அரசு.

ஈழத்தமிழர் பிரச்சனைக்கு அரசியல் தீர்வுகாண இலங்கை அரசோடு போராளிக் குழுக்கள் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் அதற்கு தான் மத்தியஸ்துவம் வகிக்கப் போவதாகவும் வாக்குறுதி அளித்தது இந்திய அரசு. இதற்கமைய 1985 ஜூன் மாதத்தில் பூட்டான் நாட்டின் தலைநகர் திம்புவில் இலங்கை அரசுக்கும் போராளிக்குழுக்களுக்கும் இடையில் தனது மத்தியஸ்துவத்தில் ஒரு பேச்சுவார்த்தையை ஏற்பாடு செய்து அதில் கலந்து கொள்ள வேண்டுமெனப் போராளிக் குழுக்களைப் பணித்தது. இதுவே இன்று திம்புப் பேச்சுவார்த்தை என அழைக்கப்படுவதும் அறியப்பட்டதுமான வரலாற்று முக்கியத்தும் மிக்க நிகழ்வாகும்..

திம்பு பேச்சுவார்த்தை

திம்பு பேச்சுவார்த்தையில் EPRLF, PLOT, TELO, TULF, LTTE ஆகிய அமைப்புக்கள் தமிழர்கள் சார்பில் பிரதிநிதித்துவம் செய்தன. அவர்களுக்கும் இலங்கை அரசுப் பிரதிநிதிகளுக்கும் இடையில் இனப்பிரச்சனைக்கு அரசியல் தீர்வுகாணும் முகமாக நடைபெறும் பேச்சுவார்த்தையில், தான் மத்தியஸ்துவம் வகிக்கும் பாத்திரத்தை ஆற்றுவதாக இந்திய அரசு கூறியது. இவ்வாறு பேச்சுவார்த்தையில் தானும் ஒரு பங்காளி ஆனது. பேச்சுவார்த்தையில் பங்கு கொண்ட தமிழர் தரப்பு இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி அரசியல் ரீதியாக ஈழத்தமிழ் தேசிய இனப் பிரச்சனைக்கு தீர்வுகாண வேண்டுமானால் பின்வரும் அடிப்படைக் கோட்பாடுகளையும் கோரிக்கைகளையும் இலங்கை அரசு ஏற்றுக் கொள்ள வேண்டும் எனக் கோரியது.

அக்கோட்பாடுகளும், கோரிக்கைகளும் பின்வருமாறு;

1. வடக்கு மாகாணம், கிழக்குமாகாணம் அடங்கிய நிலப்பரப்புக்கள் தமிழ் மக்களின் பாரம்பரிய பிரதேசம் ஆகும்.


2. வடக்கு கிழக்கு வாழ் தமிழ் மக்கள் ஒரு தேசிய இனத்தவரும் தேசிய சுயநிர்ணய உரிமை உடையவர்களும் ஆவர்.


3. தமிழ்மொழி இலங்கையின் அரச கரும மொழியாக சட்டரீதியாகவும் நடைமுறையிலும் அமுலாக்கப்படவேண்டும்.


4. வாக்குரிமை பறிக்கப்பட்ட அனைத்து மலையகத் தமிழர்களுக்கும் வாக்குரிமையும்,வாழ்விட உரிமையும் வழங்கப்பட வேண்டும்.

இந்த நியாயமான ஜனநாயக ரீதியான அடிப்படை ஆதாரக் கோட்பாடுகளை (வரையறுத்து வகுத்தளித்து பேச்சுவார்த்தை மேசையில் வைத்தவர் திரு,வரதராசப்பெருமாள் அவர்கள்) இலங்கை அரசு ஏற்க மறுத்தது.குறிப்பாக தாயகம்,தேசியசுயநிர்ணய உரிமைக்கோட்பாடுகளை அடியோடு நிராகரித்தது.

இலங்கை அரசின் நிலையைப் போலவே இக்கோரிக்கைகளை ஏற்க இந்திய அரசும் மறுத்தது.இந்நிலையில் இலங்கை அரசுக்கும், ஈழத்தமிழ் தரப்புக்குமிடையில் மத்தியஸ்துவம் வகிப்பதாக கூறிவந்த இந்திய அரசு குத்துக்கரணம் அடித்து இலங்கை அரசுடன் இணைந்து கொண்டது. இவ்விணக்கத்தின் பயனாக இந்திய இலங்கை ஒப்பந்தம் 1987 இல் உருவானது. இவ்வொப்பந்தத்தின் மூலம் ஒருபுறம் இலங்கை அரசை தனது அரசியல் இராணுவ பொருளாதார மேலாதிக்கத்தின் கீழ் கொண்டுவந்தது. மறுபுறம் ஈழத்தமிழரின் தேசிய சுயநிர்ணய உரிமைப்,போரை நசுக்க விடுதலைப்புலிகளை நிராயுதபாணியாக்க இந்திய ஆக்கிரமிப்புப் படையைக் கட்டவிழ்த்து ஒரு காட்டுமிராண்டித்தனமான யுத்தத்தை நடத்தியது.

*******************************
இலங்கையில் இந்திய ஆக்கிரமிப்புப் படை நடத்திய யுத்தம் நவீன மனித நாகரீக வரலாறு இதுவரையிலும்(2011), காணாத அளவுக்கு கேடானதும் கொடியதும் சர்வதேச சட்ட விதிகளை மீறியதும் ஆகும்.

தமிழீழத் தாய்க்குலத்துக்கு எதிரான பாலியல் பலாத்கார வன்முறையை (கற்பழிப்பை) ,ஒரு போராயுதமாக இந்திய அரசு ஈழத்தில் பயன்படுத்தியது.

இது உலக யுத்த வரலாற்றில், அமெரிக்க வியட்நாமிய யுத்தத்திலும், இலங்கை விடுதலைப் புலிகள் யுத்ததிலும் கூட எந்தத் தரப்பாலும் பயன்படுத்தப்படாத படு கேடான மிக இழிவான மிலேச்சத்தனமான காட்டுமிராண்டி ஆயுதமாகும். இதை இந்திய ஆக்கிரமிப்புப் படை ஈழத்தமிழின படுகொலை யுத்தத்தில் பிரதான ஆயுதமாக பயன்படுத்தியது.

(இதுபோன்ற எண்ணற்ற இந்திய ஆக்கிரமிப்பு யுத்தக்குற்ற தகவல்களும், ஆதாரங்களும் தனியாக இணைக்கப்படும்.இவ்விணைப்புக்களில் கூறப்படும் கருத்துக்கள், மதிப்பீடுகள் அவர்களுக்கு உரியவையாகும்.இந்திய ஆக்கிரமிப்புப்படையின் போர்க்குற்றங்களை தத்தம் நோக்கு நிலையில் ஆவணப்படுத்தியுள்ள எழுத்தாளர்களுக்கும், நிறுவனங்களுக்கும் என்றும் எமது நன்றி. ENB)


1 2 3 4 5
*******************************

இந்திய இலங்கை ஒப்பந்தம், இலங்கை மீது தனது மேலாதிக்கத்தை நிறுவுவதன் மூலம் இந்திய பிராந்தியத்தில் இந்தியாவின் மேலாண்மை உறுதி செய்யப்படுவதாக அமைந்ததால் இது அனைத்து ஏகாதிபத்திய வாதிகளினதும் ஆசீர்வாதத்தையும் பெற்றிருந்தது, பெற்றிருக்கிறது!

இதனால் இந்திய ஆக்கிரமிப்புப் படை ஈழத்தில் நிகழ்த்திய போர்க்குற்ற அட்டூழியங்கள் இன்றுவரை உலக மக்களின் கண்களுக்குத் தெரியாமல் முற்றுமுழுதாக மூடிமறைக்கப்பட்டுள்ளன. உலகத்தில் ஒரு ஆக்கிரமிப்பு போர், அதன் அடிச்சுவடு கூடத் தெரியாமல் இருட்டடிப்புச் செய்யப்பட்டிருக்கிறது என்றால் அது ஈழத்தமிழர்கள் மீது இந்தியா நடத்திய ஆக்கிரமிப்புப் போர்தான்.

அதுமட்டுமல்லாமல்  இந்திய ஆக்கிரமிப்பு இராணுவம் வடகிழக்கில் தமிழீழத்தில்விடுதலைப் புலிகளை வேட்டையாடி தமிழ்மக்களை கொன்றொழித்துக் கொண்டிருக்க சிங்கள இராணுவம் முழுமையாக தென்னிலங்கையில் குவிக்கப்பட்டு JVP போராளிகள் மீதும் சிங்கள பொதுமக்கள் மீதும் கொலைவெறித் தாண்டவத்தைக் கட்டவிழ்த்தது. இன்றுவரைக்கும் சரியான கணக்குத் தெரியாமல் இந் நரபலி வேட்டையில் கொன்றொழிக்கப்பட்டோர் ஒரு உத்தேசத்துக்கு சில லட்சம் பேர் என அறியப்படுகிறது. (சரியான புள்ளிவிபரம் ராஜபக்சேவுக்கு தெரிந்திருக்கக்கூடும், இவர்தான் அப்போது மனித உரிமைக்காக போராடினார்!) சிங்கள இராணுவம் கிராமம் கிராமமாக, நகரம் நகரமாக இரவோடு இரவாக பகலோடு பகலாக சுற்றிவளைத்து சிங்கள இளைஞர்களைக் கூட்டம் கூட்டமாக கைது செய்து வதை முகாம்களில் சித்திரவதை செய்து கைகளைப் பின்னால் கட்டி இறப்பர் ரயர்களால் தீமூட்டிக் கொழுத்தியது. பாதி கருகிய உருக்குலைந்த சடலங்களை களனி ஆற்றில் தூக்கிவீசியது. ஒரு கட்டத்தில் சிங்களச் சிறுவர்கள் மனித எலும்புக் கூடுகளின் முறிவுகளைப் பற்றி மோதறைக் கடற்கரையில் பந்தடித்து விளையாடினார்கள்.

அப்போது கொழும்பை ஆண்ட இந்தியத் தூதுவராக இருந்த J.N.டிக்சிற் 1987 இல் விடுதலைப் புலிகளுக்கும் இந்திய இராணுவத்துக்கும் இடையில் நடைபெற்ற அரசியல் பேச்சுவார்த்தைகளில் கலந்து கொள்ளச் சென்ற விடுதலைப் புலித் தலைவர்கள் மாத்தையாவையும் பிரபாகரனையும் சுட்டுக் கொல்லுமாறு இந்திய இராணுவ அதிகாரிகளுக்கு உத்தரவிட்ட பேரறிவாளராகும். இந்த டிக்சிற் தான் அப்போது இலங்கையை ஆண்டுகொண்டிருந்தார். இக்கோர கொலைவெறித் தாண்டவத்தின் பின்னணியில் இருந்து அதை இயக்கிய அதிகாரி இவர்தான்.

எனவே தமிழீழத்தில் நடந்த படுகொலைக்கு மட்டுமல்ல, தென்னிலங்கையில் நடந்த படுகொலைகளுக்கும் இலங்கை அரசுக்கு இணையாக இந்திய அரசும் பொறுப்பேற்க வேண்டும்.

இவ்வாறு சிங்கள இளைஞர்களை இந்தியப் படை படுகொலை செய்தது இதுவல்ல முதல் தடவை 1972 இல் JVPஇன் ஆயுதமேந்திய கிளர்ச்சியையும் இந்தியப் படையே நசுக்கியது. அப்போது இலங்கை அரசிடம் ஒரு உள்நாட்டுக் கிளர்ச்சியை நசுக்கக் கூடிய இராணுவமே இருக்கவில்லை. உள்ளூர் விவசாயிகளின் ஆயுதப்பாவனை அப்போதுதான் பறிக்கப்பட்டது.

இந்திய இலங்கை ஒப்பந்தத்தில் கைச்சாத்திட ராஜீவ் இலங்கைக்கு வந்தபோது விமானநிலையத்தில் இடம்பெற்ற அரசமரியாதை வைபவத்தில் கலந்து கொண்ட ஒரு சிங்களக் கடற்படைச் சிப்பாய் தன் துப்பாக்கியால் ஓங்கி ராஜீவின் பிடரியில் அறைந்தான்.

ஒரு குறியீடாக அமைந்த இந்த எதிர்ப்பைத் தொடர்ந்து தமிழீழ விடுதலைப் புலிகளும்--தமிழ்மக்களும், தென்னிலங்கையில் ஜே.வி.பியும்-- சிங்கள மக்களும் தனித்தனியான பாதையில் இந்திய ஆக்கிரமிப்பை எதிர்த்த நாடுதழுவிய கிளர்ச்சிக்கு வித்திட்டனர். இதன் விளைவாக இலங்கை அரசு பொறிந்து விழும் நிலையேற்பட்டது.

அரசாங்கம் ஸ்தம்பித்துப் போனது. பெரும்பாலான மந்திரிகள் பிரேமதாசாவை விட்டுத் தப்பியோடி “பயங்கரத்துக்கு அஞ்சி” பதுங்கிவிட்டார்கள். ஆட்டங்கண்டுவிட்ட அரசு முறையைப் பாதுகாக்க இந்திய ஆக்கிரமிப்புப் படையை வெளியேற்றக் கோரும் இலங்கை மக்களின் தேசியப் புரட்சிக்கு பிரேமதாசா அடிபணிய நேரிட்டது. விடுதலைப் புலிகளின் உதவித் தலைவர் மாத்தையாவுடனான பேச்சுவார்த்தையில் இந்திய ஆக்கிரமிப்புப் படையை வெளியேற்றுவதற்கு உடன்பாடு காணப்பட்டு யுத்தநிறுத்தம் அறிவிக்கப்பட்டது. இந்தியா இலங்கையில் “கைகளைப் பின்னால் கட்டிக் கொண்டு போரிட்ட காரணத்தால்” மண்கவ்வி மானமிழந்து கறைபடிந்த கையோடு தன் சொந்த நாடு திரும்பியது.கருணாநிதி போன்ற அயோக்கியன் கூட தன் அரசியல் வாழ்வுக்கு அஞ்சி இப்படையை வரவேற்கச்செல்லவோ வாழ்த்தவோ இல்லை!

இவ்வாறு ராஜீவ் படை கட்டவிழ்த்த அரச பயங்கரவாத போர்க்குற்றங்களுக்கு பழிதீர்க்கும் பதில் பயங்கரவாத நடவடிக்கையாகத்தான் ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்டார்.

தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கு தமிழகம் ஒரு பலமான பின்புலமாக இருந்த நேரத்தில், தமிழீழ மக்களின் சுயநிர்ணய உரிமைப் போரை நசுக்கும் பொருட்டும், இலங்கை நாட்டை தனது மேலாதிக்கத்துக்கு உட்படுத்தும் பொருட்டும் ஒரு இராணுவ ஆக்கிரமிப்பை மேற்கொண்ட ஒரு அண்டைநாட்டுடனான முரண்பாட்டை ஈழதேசிய விடுதலை இயக்கம் இவ்வாறு அணுக முடியுமா? இந்த வழிமுறை சரியானதா? என்று வேண்டுமானால் விவாதிக்கலாம். உணமையில் விவாதிக்கவும் வேண்டும். விவாதங்களும் வேண்டும்.

ஆனால் இது ராஜீவ் காந்திக்கு தண்டனை வழங்குவதற்கான நியாயங்களை இல்லாமல் செய்துவிடாது.

மேலும், இந்திய இலங்கை ஒப்பந்தம் ஏற்பட்டது 1987 இல். ராஜீவ் கொலை நடைபெற்றது 1990 இல். முத்தமிழரின்தூக்குத்தண்டனை விவகாரம் எழுந்திருப்பது 2011 பிற்பகுதியில்.எனவே முத்தமிழர் தூக்குத் தண்டனை விவகாரத்தில் 1987 இல் நிலைமைகளோடு மட்டுமல்ல, 1990 இற்குப் பிந்திய 21 ஆண்டுகால உலக உள்நாட்டு நிலைமைகளிலுள்ள மாறுதல்களுடனும் ஒப்பிட்டு நோக்க வேண்டும்

* ஆப்கானிஸ்தானில் தளமிட்டு இயங்கிய இஸ்லாமிய அல்கெய்டா அமைப்பைச் சார்ந்த சவுதிஅரேபிய உறுப்பினர்கள் இரட்டைக் கோபுரத்தைத் தாக்கி சுமார் மூவாயிரம் அமெரிக்கர்களை படுகொலை செய்தனர்.இதற்காக முழு ஆப்கான் நாட்டையுமே அமெரிக்கா இன்று ஆக்கிரமித்து இருக்கிறது. பாக்கிஸ்தானுக்குள் அத்துமீறிப் புகுந்து ஒசாமா பின்லாடனை படுகொலை செய்தது.

* குவைத்தை ஆக்கிரமித்தமைக்காக முதலாவதும், உள்நாட்டுமக்களுக்கு ஜனநாயகத்தை வழங்கமை, குர்திக்ஷ் மக்கள் மீது விசவாயு அடித்தமை ஆகிய குற்றங்களுக்காக   இரண்டாவது தடவையும் ஈராக் மீது ஆக்கிரமிப்புப் போர்கள் தொடுக்கப்பட்டன. ஈராக் தலைவர் சதாம் ஹுசைன் அவர்கள், இறுதிப்பிராத்தனை முடிவதற்கு முன்னமே கோரத்தனமாக தூக்குக் கயிற்றில் தொங்கவிடப்பட்டார்.

* ஆசிய சமுதாய வளர்ச்சிக்கட்டதையும், ஆபிரிக்க சமூக வளர்ச்சிக்கட்டத்தையும் ஒப்புநோக்கி, அரசு முறை வடிவத்தை நோக்கினால் நேரு குடும்பத்தின் பாராளுமன்ற பாசிசம் கடாபி குடும்பத்தின் ராணுவ சர்வாதிகாரத்துக்கு சற்றும் சளைத்தது அல்ல.ஆனால் மனிதகுலத்தின் மனச்சாட்சியையே உலுக்கக் கூடிய வகையில் “மனிதாபிமான நடவடிக்கை” என்ற பெயரில் லிபிய நாடு மறைமுகமாக ஆக்கிரமிக்கப்பட்டு நவீன காலனிய NTC பொம்மை அரசு நிறுவப்பட்டுள்ளது.லிபியத் தளபதி கடாபியை படுகொலை செய்ய எடுத்த பல முயற்சிகள் தோல்வியடைந்தும் கூட நேட்டோவும்,Interpol உம் அவரை வேட்டையாட கொலை வெறி கொண்டு லிபியா எங்கும் அலைகிறது.

* இவற்றுக்கெல்லாம் மேலாக விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையில் நோர்வே அனுசரனையில் ஆரம்பித்த பேச்சுவார்த்தையை ஒரு அங்குலமும் முன்னேறவிடாமல் தடுத்தது இந்திய அரசு.இறுதியாக இலங்கை அரசு ஒருதலைப் பட்சமாக யுத்தநிறுத்த ஒப்பந்தத்திலிருந்தும், பேச்சுவார்த்தையிலிருந்தும் விலகி இனப்படுகொலை யுத்தத்தைக் கட்டவிழ்த்தது.இந்த யுத்தத்துக்கு இராஜதந்திர ரீதியாகவும், இராணுவ ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் ஆதரவு வழங்கிய இந்திய விஸ்தரிப்புவாத அரசு சிங்கள அரசுடன் கூட்டுச் சேர்ந்து நேரடியாக யுத்ததில் பங்கேற்று விச வாயுக்களை வீசி விடுதலைப் புலிகளின் முன்னரண்களை நிர்மூலமாக்கி சிங்கள படைகளின் முன்னேற்றத்துக்குவழியமைத்தது. இறுதியாக யுத்தத்தில் சிங்களம் வெற்றிகொள்வதற்கும் விடுதலைப் புலிகள் தலைமை முற்றாக அழித்தொழிக்கப்படுவதற்கும் காரணகர்த்தாவாக அமைந்தது.இந்த ஈழப்போரில் இறுதிச் சில நாட்களில் மட்டும் எழுபதினாயிரம் மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்ட இந்த இரத்த வரலாற்றுக்கும் இந்திய அரசு பிரதான பொறுப்பாளியாக இருக்கிறது.

சதாம் குவைத்தை ஆக்கிரமித்து குர்க்ஷித் மக்கள் மீது விசவாயுவை அடித்தது, பின்லாடன் இரட்டைக்கோபுரத்தை தாக்கியழித்தது, கடாபி உள்நாட்டு மக்களுக்கு ஜனநாயகத்தை மறுத்தது இதற்காக எல்லாம் அவர்கள் கொலை செய்யப்படுவது நியாயமென்றால் இவை அனைத்தையும் இலங்கை நாட்டின் மீது மூன்று தடவை மீண்டும் மீண்டும் பிரயோகித்த இந்திய அரசை ஈழத்தமிழ் மக்கள் தண்டிப்பது எந்த வகையில் குற்றமாகும்.

ராஜீவ் காந்தியை தண்டிப்பதற்கு ஈழத்தமிழர்களுக்குள்ள அரசியல் உரிமையை மறுப்பது எந்த வகையில் நியாயமானதாகும், ஜனநாயகமானதாகும்?.

ராஜீவுக்கு வழங்கப்பட்ட தண்டனை நீதியானது நியாயமானது. இதற்கு அஞ்சி நாம் மரண தண்டனைக்குள்ளும் மனிதாபிமானத்துக்குள்ளும்,மனித உரிமைக்குள்ளும் முக்காடுபோட்டு மறைந்திருந்து முனகத்தேவை இல்லை, அதற்கு நாம் தயாராக இல்லை.

எனவே ஏகாதிபத்திய ஆதிக்கத்தையும்,இந்திய விஸ்தரிப்புவாதத்தையும் எதிர்த்து, ஈழத்தமிழ்த் தேசிய சுயநிர்ணய உரிமையை வென்றெடுப்பதற்குமான ஜனநாயக இயக்கத்தின் ஒரு பகுதியாக நாம் ஈழத்தமிழர் விடுதலை இயக்கத்தின் மீது இந்திய விஸ்தரிப்புவாத அரசு தொடர்ந்து தலையீடு செய்வதற்கும், விடுதலைப்புலி இயக்கத்துக்கு தடை விதித்திருப்பதற்கும், ராஜீவ் கொலையைக் காரணம் காட்டி ஈழத்தமிழின விடுதலைப்போரை தொடர்ந்து நசுக்கி வருவதற்கும் என்றும் எதிர்ப்புத் தெரிவித்து போராடுவோம் எனப் பிரகடனம் செய்கிறோம்.

முத்தமிழர் உயிர்மீட்புப் போராட்டம்

ராஜீவ் கொலை வழக்கில் மரண தண்டனைக்குக் காத்திருக்கும் முத்தமிழ் உயிர்கள் தொடர்பான இக்குறிப்பான பிரச்சனையில் பின்வரும் அம்சங்கள் கவனத்துக்குரியவை.

1. ராஜீவ் கொலையில் காங்கிரசின் ஒரு பகுதியினரின் பங்கு.

2. ராஜீவ் கொலையில் ராஜீவ் குடுப்பத்தின் பங்கு

3. ராஜீவ் கொலையில் சம்பந்தப்பட்ட விடுதலைப்புலிகளின் உயர்மட்ட உறுப்பினர்கள் யார் என்ற கேள்வி.கே.பி.குறித்த சர்ச்சைகள்.

4. இவ்வழக்கு தடாச் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட்டமை.

5. வாக்குமூலங்கள் சித்திரவதை மூலம் பெறப்பட்டமை.

6. இம்மூவரும் ஏற்கனவே 21 ஆண்டுகால சிறைவாசத்தை அனுபவித்து முடித்திருப்பது

7. இம்மரண தண்டனை சட்டவிரோதமானதென சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பது.

இக்காரணங்களால் முத்தமிழர்களின் கருணை மனுவை நிராகரித்திருப்பதும் தொடர்ந்து சிறை வைத்திருப்பதும் சட்டவிரோதமானதும், அநீதியானதும் சட்டத்தின் ஆட்சியின் வரம்புகளுக்கு உட்பட்டே கூட ஜனநாயக விரோதமானதாகும்.

எனவே முத்தமுழர் மரண தண்டனை ரத்துச் செய்யப்பட்டு உடனடியாக அவர்கள் மூவரும், நளினியும் விடுதலை செய்யப்பட்ட வேண்டுமென அறைகூவுகின்றோம்.இக்கொடுமையை எதிர்த்து போரிடும் உலகத்தொழிலாளரினதும், உலகத் தமிழ்மக்களதும் ஜனநாயக இயக்கத்தில் பின்வரும் சொந்த முழக்கங்களுடன் நாமும் பங்குபெறுகின்றோம்.

* இந்திய அரசே ஈழத்தமிழர் பிரச்சனையில் தலையிடாதே!


* போர்க்குற்றவாளி ராஜபக்க்ஷவை சர்வதேச அரங்குகளில் பாதுகாக்காதே!


* இலங்கை அரசு தொடரும் இன அழிப்பு நடவடிக்கைகளை ஊக்குவிக்காதே!

* இந்திய விஸ்தரிப்புவாத ஆதரவு பொம்மைத் தமிழ் குழுக்களை உருவாக்கி அவர்களே ஈழத்தமிழ் மக்களின் அரசியல் பிரதிநிதிகள் என பிரகடனம் செய்து மக்கள் ஜனநாயகக் கோட்பாட்டை மாசுபடுத்தாதே!


* இலங்கையில் மூன்று தடவைகள் இழைத்த யுத்தக் குற்றங்களுக்குப் பொறுப்பேற்று தண்டனை வழங்கும் ஈழத்தமிழரின் அரசியல் உரிமையை அங்கீகரி!


* இலங்கை மக்களுக்கு இழைத்த யுத்தக் குற்றங்களுக்கு நக்ஷ்ட ஈடு வழங்கு!


* பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய முத்தமிழ் உயிர்கள் மீதான மரண தண்டனையை ரத்துச் செய்!


* நளினி உள்ளிட்ட நால்வரையும் உடனே விடுதலை செய்!

உலகத் தொழிலாளர்களே ஒடுக்கப்பட்ட தேசங்களே ஒன்று சேருங்கள்!

புதிய ஈழப் புரட்சியாளர்கள்

India, Sri Lanka head to a win-win relationship

India, Sri Lanka head to a win-win relationship 《  Asian Age 17 Dec 2024  》 All the signs are pointing to the possibility of a major win for...