SHARE

Monday, April 23, 2012

சிங்களமே, தம்புள்ளைப் பள்ளியில் தாக்குதல் நடத்திய பிக்குக் காடையரைக் கைது செய்!


மத வழிபாட்டுத்தலங்கள் மீ்தான சிங்களத்தின் தாக்குதல்கள், பாரம்பரிய வாழ்விடங்களில் இருந்து வேரறுத்தெறியும் போரே!

தம்புள்ளையில் பள்ளிவாசல் மீது பௌத்த பயங்கரவாதம்ஏப் 21, 2012

தம்புள்ளையில் அமைந்துள்ள 60 வருடகால பழைமை வாய்ந்த ஹைரியா ஜும்ஆ பள்ளிவாசல் மீது 500இற்கும் மேற்பட்ட பௌத்த பிக்குகள் சிறீலங்கா காவல்துறையின்; முன்னிலையில் நேற்றுத் தாக்குதல் நடத்திக் கடும் சேதத்தை ஏற்படுத்தினர். பள்ளியில் ஜும் ஆ தொழுகைக்காக அமர்ந்திருந்தவர்களும் பலவந்தமாக வெளியேற்றப்பட்டனர். இதனால் அப்பள்ளியில் ஜும்ஆ தொழுகை ரத்தானதோடு தம்புள்ளையில் பெரும் பரபரப்பும் பதற்றமும் ஏற்பட்டன.

பள்ளிவாசலின் பாதுகாப்புக்காகக் குவிக்கப்பட்டிருந்த சிறீலங்கா காவல்துறையினருக்கு மேலதிகமாக 200 இராணுவத்தினர் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டே நிலைமை ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

பகல் 12 மணிமுதல் 2.30 மணிவரை நீடித்த இத்தாக்குதலால் பள்ளிவாசலுக்குக் கடும் சேதம் ஏற்பட்டது. பள்ளிவாசலைச் சூழ்ந்துநின்று பிக்குகள் கற்களாலும் கம்பு, தடிகளாலும் தாக்குதல் நடத்தினர் என்று பள்ளிவாசலில் அமர்ந்திருந்த பள்ளிவாசல் நிர்வாகிகள் கூறினர்.

இதனால் பள்ளிவாசலின் சுவர்கள் மற்றும் ஏனைய பொருட்களுக்கும் சேதம் ஏற்பட்டது என்று அவர்கள் மேலும் கூறினர். இதனால் தம்புள்ளை நகரில் கடும் பதற்றம் நிலவியது. தம்புள்ளை பஸாரில் உள்ள சிங்கள மற்றும் முஸ்லிம் வர்த்தகர்களுக்குச் சொந்தமான கடைகள் மூடப்பட்டு பஸார் வெறிச்சோடிக் காணப்பட்டது.

தம்புள்ளை புனித பூமிக்குள் இந்தப் பள்ளிவாசல் அமைந்துள்ளது என்று தெரிவித்து அதை அங்கிருந்து அகற்றிவிடுமாறு கோரியே பிக்குகள் இந்தத் தாக்குதலை நடத்தினர். தம்புள்ளை ரஜமகா விஹாரையின் பீடாதிபதி கினாமுலுவ சிறி சுமங்கலதேரரே இதற்குத் தலைமைதாங்கினார்.

அந்தப் பள்ளிவாசலை உடைக்கப்போவதாகப் பிக்குகள் நேற்றுமுன்தினமே அறிவித்திருந்தனர். ஜும்ஆ தொழுகை இடம்பெற்றுக் கொண்டிருக்கும் போது ஊர்வலமாக வந்து இத்தாக்குதலை நடத்துவதென்று அவர்கள் திட்டமிட்டிருந்தனர். அவ்வாறே செய்தனர்.

இதன்போது உயிர்ச்சேதங்கள் ஏதும் ஏற்படக்கூடும் என்ற அச்சத்தில் அந்தப் பள்ளியில் ஜும்ஆ தொழுகையை நடத்தவேண்டாம் என்று மத்திய மாகாணப் பிரதிக் காவல்துறை அதிபர் பிரமுக பள்ளி நிர்வாகிகளிடம் கேட்டிருந்தார். தாம் தொழுகையை நிறுத்தமாட்டோம் என்று பள்ளிவாசல் நிர்வாகிகள் பிரமுகரிடம் தெரிவித்தனர்.

அதேவேளை, அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் இப்பள்ளிவாசல் மீது தாக்குதல் நடத்தவேண்டாம் என்று பிக்குகளைக் கேட்டுக் கொண்டதோடு, வழமைபோல் தொழுகையை நடத்துமாறு பள்ளி நிர்வாகிகளிடம் கூறியிருந்தார்.

இந்த நிலையில், நேற்று அதிகாலை 3.30 மணியளவில் பள்ளிவாசலுக்கருகில் பெற்றோல் குண்டுத்தாக்குதல் ஒன்றும் நடத்தப்பட்டது என்று பள்ளிவாசல் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

இதனால் அதிகாலையில் இருந்து பதற்றம் ஆரம்பமானது. பள்ளிவாசலின் பாதுகாப்புக்காகப் சிறீலங்கா காவல்துறையின்;; நிறுத்தப்பட்டனர். அத்தோடு, பள்ளிவாசல் மீது மேற்கொள்ளப்படவிருக்கும் தாக்குதலைத் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு பள்ளிவாசல் நிர்வாகிகள் முஸ்லிம் அரசியல்வாதிகளிடமும், கொழும்பில் உள்ள முஸ்லிம் நாடுகளின் தூதுவர்களிடமும் மகஜர்கள் மூலம் வேண்டுகோள் விடுத்திருந்தனர்.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மத்திய மாகாணசபை உறுப்பினர் ரிஸ்வி பாரூக் இந்த விடயத்தைப் பிரதமர் டி.எம்.ஜயரட்ணவின் கவனத்திற்குக் கொண்டுவந்த போது பள்ளிவாசல் மீது தாக்குதல் நடத்தும் சதித்திட்டம் முறியடிக்கப்படும் என்றும், பள்ளிவாசலுக்கு முழுமையான பாதுகாப்பு வழங்கப்படும் என்றும் பிரதமர் கூறியிருந்தார்.

அதேபோல், முஸ்லிம் அரசியல்வாதிகளும் இந்த விடயத்தை மகிந்தவின் கவனத்திற்குக் கொண்டுவந்து தாக்குதல் நடவடிக்கையை முறியடிக்கப்போவதாகப் பள்ளி நிர்வாகிகளிடம் வாக்குறுதியளித்தனர்.

இவ்வாறு பள்ளியைப் பாதுகாக்கப்போவதாகப் பலரும் வாக்குறுதி வழங்கிய நிலையில்தான் பிக்குகள் சிறீலங்கா காவல்துறையின்;; முன்னிலையில் தாக்குதல் நடத்தினர்.
கொழும்பில் பல சந்தர்ப்பங்களில் ஆர்ப்பாட்டங்களை நடத்திய பிக்குகள் மீது பல தடவைகள் கண்ணீர் புகைக்குண்டுத்தாக்குதல் நடத்தி அவர்களை விரட்டிய சிறீலங்கா காவல்துறையினரால் ஏன் இந்தப் பிக்குகளை விரட்ட முடியவில்லை என்று பள்ளிவாசல் நிர்வாகிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

12 முதல் 2.30 மணிவரை பிக்குகளின் கட்டுப்பாட்டின் கீழேயே பள்ளிவாசல் இருந்தது என்றும் 2.30 மணிக்குப் பின்னர் சிறீலங்கா இராணுவத்தினர் வந்தே பள்ளிவாசலை அவர்களிடமிருந்து மீட்டெடுத்தனர் என்றும் பள்ளிவாசல் நிர்வாகிகள் கூறினர்.

இந்த மாதம் 23 ஆம் திகதிவரை எவரும் பள்ளிவாசலுக்குள் நுழையக்கூடாது என்று சிறீலங்கா இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர் என்று பள்ளிவாசல் நிர்வாகிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.

நன்றி: சங்கதிEhttp://www.sangathie.com/news/19305/64/.aspx
===========

இந்துக்கோவில், பள்ளிவாசல் உள்ளிட்ட கட்டடங்களை இடித்துத்தள்ள தன்னிச்சையாக முடிவு [ செவ்வாய்க்கிழமை, 24 ஏப்ரல் 2012, 01:17 GMT ] [ கொழும்புச் செய்தியாளர் ]

தம்புள்ள ரங்கிரிய விகாரையைச் சுற்றியுள்ள இந்துக்கோவில், பள்ளிவாசல் உள்ளிட்ட 72 சட்டவிரோத கட்டங்களை அடுத்த ஆறு மாதங்களுக்குள் இடித்து தள்ளப்படும் என்று, நேற்று சிறிலங்கா அரசஅதிகாரிகள் மற்றும் பௌத்த பிக்குகள் பங்கேற்ற கூட்டம் ஒன்றில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
தம்புள்ள பிரதேசத்தில் 65 ஆண்டுகளாக இயங்கி வந்த முஸ்லிம்களின் பள்ளிவாசலை அங்கிருந்து அகற்றுமாறு சிறிலங்கா பிரதமர் டி.எம். ஜெயரட்ண உத்தரவிட்டதன் பின்னணியில் நேற்று இந்தக் கூட்டம் இடம்பெற்றுள்ளது.

சிறிலங்கா பிரதமர் வசம் உள்ள புத்த சாசன அமைச்சின் ஏற்பாட்டில், அந்த அமைச்சின் செயலர், மாவட்ட அரசாங்க அதிபர், பிரதேச செயலர் மற்றும் தம்புள்ள ரஜமகா விகாரையின் தலைமைக்குரு இனாமலுவே சுமங்கல தேரர் உள்ளிட்ட பலரும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
இந்தக் கலந்துரையாடலில் அஸ்கிரிய பீடாதிபதியும் கலந்து கொண்டிருந்தார்.
அதேவேளை, புனிதப் பிரதேசத்துக்கு வெளியே எந்த மதச் சின்னங்களையும் அமைப்பதற்கும் இந்தக் கூட்டத்தில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

நேற்றைய கூட்டத்தில் எந்தவொரு முஸ்லிம் பிரதிநிதிகளும் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி: புதினப்பலகை 
Sri Lankan mosque forced to abandon prayers by protesters
Buddhist monks were also involved in the protest

A mosque in Sri Lanka has been forced to abandon Friday prayers
amid community tensions in the central town of Dambulla.
About 2,000 Buddhists, including monks, marched to the mosque
and held a demonstration demanding its demolition.
A mosque official told the BBC he and several dozen companions
were trapped inside and feared the crowd would destroy the
building.
Overnight the mosque had been targeted by a fire-bombing - no-
one was hurt.
The BBC's Charles Haviland in Colombo says the tensions have
been growing in the neighbourhood.
Shortly after the protest the mosque was evacuated and its
Friday prayers cancelled.
Many Buddhists regard Dambulla as a sacred town and in recent
months there had been other sectarian tensions in this part of
Sri Lanka, our correspondent says.
Last September a monk led a crowd to demolish a Muslim shrine
in Anuradhapura, not far from Dambulla.
Buddhism is the religion of the majority of the population in
Sri Lanka.

India, Sri Lanka head to a win-win relationship

India, Sri Lanka head to a win-win relationship 《  Asian Age 17 Dec 2024  》 All the signs are pointing to the possibility of a major win for...