Tuesday 5 January 2010

அவசரகால சட்ட நீடிப்பை எதிர்த்து ஐக்கிய தேசியக் கட்சி, ஜேவிபி, சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஏன் வாக்களிக்கவில்லை?

79 மேலதிக வாக்குகளால் அவசரகாலச் சட்டம் மேலும் ஒரு மாதம் நீடிப்பு!
பதிவு சிவதாசன், கொழும்பு செவ்வாய், ஜனவரி 5, 2010 15:15
79 மேலதிக வாக்குகளால் அவசரகாலச் சட்டம்; மேலும் ஒருமாதம் காலம் நீடிக்கப்பட்டுள்ளது. இன்று சிறீலங்காப் பாராளுமன்றில் இடம்பெற்ற அவசரகால சட்ட நீடிப்பு விவாதத்தில் அதற்கு ஆதரவாக 97 வாக்குகளும், எதிராக 18 வாக்குகளும் கிடைத்துள்ளன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதற்கு எதிராக வாக்களித்துள்ளது. வாக்கெடுப்பின் போது, ஐக்கிய தேசியக் கட்சி, ஜேவிபி, சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி ஆகியவை சமூகமளிக்கவில்லை-மறைமுகமாக ஆதரவளித்தனர் -.

நான் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டால்
* அவசரகாலச் சட்டம் உடன் நீக்கப்படும்.
2010-01-03 06:19:05
யாழ்.நகரில் நேற்று நடந்த கூட்டத்தில் பொன்சேகா தெரிவிப்பு
நான் இராணுவ அதிகாரியாக இங்கு இருந்த போது யுத்தத்தில் ஈடுபட்டேன் அது எனது கடமை. அதே சமயம் நான் தெற்கில் இருந்தாலும் இதனையே செய்திருப் பேன். எனது கடமையைத் தவற விட்டிருக்கமாட்டேன். இவ்வாறு தெரிவித்தார் எதிர்க்கட்சிப் பொதுவேட்பாளரான ஜெனரல் சரத் பொன் சேகா. நேற்று மாலை யாழ்.வீரசிங்கம் மண்ட பத்தில் நடைபெற்ற கூட்டத்தில்

தமது தேர்தல் வாக்குறுதிகளை விவரித்து உரையாற்றுகையில் அவர் மேலும் கூறியதாவது:
யாழ்ப்பாணத்தை நன்கு அறிந்தவன், நான் இங்குள்ள மக்களாகிய உங்களின் பாதுகாப்புக்காக நான் கடமையாற்றியுள்ளேன். உங்களின் அன்பு, கலாசாரம் என்பவற்றையும் இங்கிருந்ததால் நன்கு அறிந்தவன். 30 ஆண்டுகளாக நடைபெற்ற போரில் இளைஞர்கள் பலரின் உயிர்கள் நம்மை விட்டுப் பிரிந்தன. அதனை எண்ணி நான் மிகவும் வருந்துகின்றேன். ஆனால் வடக்கு,
கிழக்கு, தெற்குக்கு என்ன தேவையோ அதனையே புரிந்தேன். தமிழ் மக்களுக்கு சுகாதாரம், உணவு, உடை என்பன கிடைக் கவில்லை ஆனால் இந்த அரசு இதனை அறிந்தும் அறியாதது போல் உள்ளது. நான் ஜனாதிபதியானதும் இலங்கையில் தமிழ், சிங்களவர், முஸ்லிம் என்று வேறுபாடு இல்லாத நாட்டை உருவாக்குவேன் என்றார். அங்கு மற்றும் வாக்குறுதிகள் பலவற் றையும் பொன்சேகா வழங்கினார்.

அவை வருமாறு:
* முகாம்களில் அடைத்துவைத்து துன்பத்தை அனுபவிக்கும் மக்கள் உட னடியாக சொந்த இடங்களில் மீளக்குடி யமர்த்தப்படுவர்.
* அவசரகாலச் சட்டம் உடன் நீக்கப்படும்.
* வீடுகளை இழந்த மக்களுக்கு வீடுகள் அமைப்பதற்கு உதவிகள் வழங்கப்படும்.
* 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஓய்வூதியம் வழங்கப்படுவதுடன் இடைக் கால வருமானம் ஒன்றைப் பெறவும் சந் தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுத்தல்.
*வேலையற்ற பட்டதாரிகளுக்கும், இளைஞர் யுவதிகளுக்கும் மாதம் 2,000 ரூபா கொடுப்பனவு வழங்கப்படும்.
*பொலிஸார், இராணுவத்தினர் தவிர்ந்த ஆயுதக்குழுக்களின் ஆயுதங்கள் அனைத்தும் களையப்படும்.
* தமிழ்ப் பிரதேசங்களில் தமிழ்பேசும், தமிழ் அறிவுள்ள அதிகாரிகள் நியமிக்கப் படுவர்.
*சீரற்ற நிலையில் இருக்கும் போக்கு வரத்துப் பிரச்சினைகள் உடனடியாகத் தீர்க்கப்படும்.
* போக்குவரத்துச் சேவையில் ஈடு படும் வாகனங்களுகளுக்கு பொற்றோல் மானியவிலையில் வழங்கப்படும்.
* விவசாயிகளுக்கு உரிய மானியங் கள் வழங்கப்படும்.
* கொழும்பில் இருக்கும் பாடசாலைகள், வைத்தியசாலைகள் போன்று யாழ்ப் பாணப் பாடசாலைகளும், வைத்தியசாலை களும் அபிவிருத்தி செய்யப்படும்.
* பொலிஸாரின் நடவடிக்கைகளில் தலையிடுபவர்களுக்கு எதிராக உரிய சட் டங்கள் இயற்றப்பட்டு நடைமுறைப்படுத் தப்படும்.
இவை தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் அடங்கியுள்ளன என்று தெரிவித்தார் பொன்சேகா.

அநுரா ஆட்சியில் செல்வினின் பனை அபிவிருத்தி சபைத் தலைவர் பொறுப்பு பறிப்பு!

அநுரா ஆட்சியில் செல்வினின் பனை அபிவிருத்தி சபைத் தலைவர் பொறுப்பு பறிப்பு! பனை அபிவிருத்தி சபைத் தலைவராக இரானியேஸ் செல்வின் அவர்களைப் பொறுப்ப...