https://www.facebook.com/Piratheeparajah
03.12.2025 புதன்கிழமை பிற்பகல் 3.30 மணி
விழிப்பூட்டும் முன்னறிவிப்பு
இன்று வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில பகுதிகளுக்கு மிதமான மழை கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.
நாளை 04.12.2025 அன்று வடக்கு, கிழக்கு, தெற்கு, மேற்கு , மத்திய மாகாணங்களில் மிதமான மழை கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.
எதிர்வரும் 05.12.2025 அன்று கிழக்கு மாகாணத்திற்கு குறிப்பாக திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களுக்கு கனமழை கிடைப்பதற்கான வாய்ப்புகள் காணப்படுகின்றன.
அன்றைய தினம்( 05.12.2025) வடக்கு, மத்திய மற்றும் வட மத்திய மாகாணங்களுக்கு மிதமான மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.
எதிர்வரும் 06 மற்றும் 07 ம் திகதிகளில் நாடு முழுவதும் பல இடங்களில் மிதமானது முதல் கனமானது வரை மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது. குறிப்பாக மன்னார், அனுராதபுரம், புத்தளம், சிலாபம், மாத்தளை, கண்டி, நுவரெலியா, கொழும்பு, கம்பஹா, இரத்தினபுரி, களுத்துறை, காலி,பதுளை மாவட்ட்ங்களின் பல பகுதிகளுக்கும் கனமழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.
எதிர்வரும் 08.12.2025 அன்று வடமத்திய, மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கும் பதுளை மாவட்டத்திற்கும் சற்று கனமழை கிடைக்கும் என்பதோடு வடக்கு மாகாணத்தின் சில பகுதிகளுக்கு மிதமான மழை கிடைக்கும்.
எதிர்வரும் 09.12.2025 திகதி நாடு முழுவதும் மிதமானது முதல் கனமான மழை கிடைக்கும் வாய்ப்பு காணப்படுகின்றது.
10.12.2025 அன்று நாடு முழுவதும் மிதமான மழை கிடைக்கும் வாய்ப்பு காணப்படுகின்றது.
இது வடகீழ்ப் பருவக்காற்று காலம் என்பதனால் அவ்வப்பொழுது இலங்கையில் பல இடங்களிலும் மிதமானது முதல் கனமானது வரை மழை கிடைக்கும் வாய்ப்புக் காணப்படுகின்றது.
ஆயினும் ஒரு தீவிரமான வானிலை நிகழ்வுக்குரிய எந்த வாய்ப்பும் அடுத்து வரும் 07 நாட்களுக்கு இல்லை என்பதனால் மக்கள் மழை கிடைத்தாலும் அச்சம் கொள்ள தேவையில்லை.
----------------------------++++++++++-------------------------
ஆனால் ஏற்கெனவே புயலினால் மிகக்கனமழை கிடைத்து, ஆறுகளின் நீர் மட்டம் அதிகரித்து, குளங்கள் வான் பாய்ந்து மண் ஈரலிப்பாக உள்ள நுவரெலியா, கண்டி, பதுளை, கேகாலை, இரத்தினபுரி, மாத்தளை மாவட்டங்களுக்கு சற்று கனமான மழை கிடைத்தாலே( குறைந்தது 30-40 மி.மீ. கிடைத்தால் கூட) அது நிலச்சரிவைத் தூண்டும் என்பதனால் இப்பகுதிகளில் உள்ள மக்கள் இது தொடர்பாக மிக அவதானமாக இருக்க வேண்டும். குறிப்பாக எதிர்வரும் 6,7,8,9 ம் திகதிகளில் மத்திய, ஊவா மற்றும் சப்ரகமுவ மாகாண மக்கள் அவதானமாக இருப்பது அவசியம்.
மேற்குறிப்பிட்ட மாவட்டங்களில் அனர்த்த மீட்பு பணிகளில் ஈடுபடுவோரும் இதனைக் கருத்தில் கொண்டு செயற்படுவது சிறந்தது.
-------------------------+++++++++++-----------------------------
நான் பல தடவைகள் குறிப்பிடுகின்ற ஒரு விடயம் சாத்தியமான அனர்த்தம் ஒன்றை கருத்தில் கொண்டு நாம் தயாராக இருந்தால், அந்த அனர்த்தம் நிகழாவிட்டாலும் எமக்கு எந்த பாதிப்பும் இல்லை. ஆனால் தயராக இல்லாது விட்டால் பாரதூரமான விளைவுகள் ஏற்படும்.
- நாகமுத்து பிரதீபராஜா -
2025.12.03 Wednesday 3.30 pm
-------------------------------------------------
Moderate rainfall is expected in some areas of the northern and eastern provinces today.
Moderate rainfall is expected in north, east, south, west and central provinces tomorrow 2025.12.04.
Heavy rains are expected in the Eastern Province, especially Trincomalee and Battakalapuwa districts as of 2025.12.05.
There is a possibility of moderate rainfall in northern, central and northern central provinces on that day (2025.12.05).
Moderate to heavy rains are expected in many places across the island on 06 and 07. There is a possibility of heavy rains in many areas of Mannarama, Anuradhapura, Puttalam, Chalawatha, Kandy, Nuwara Eliya, Colombo, Gampaha, Ratnapura, Kalutara, Galle and Badulla districts.
Heavy rains will occur in northern central, central and eastern provinces and Badulla district on 2025.12.08 and moderate rains in some parts of the northern province.
Moderate to heavy rains are expected across the country as of 2025.12.09.
Moderate rainfall is expected across the country on 2025.12.10.
As this is the north-west monsoon season, many places in Sri Lanka are likely to occur frequently moderate to heavy rains.
However, as there is no possibility of severe weather event for the next 07 days, people shouldn't worry despite the rain.
-------------------------+++++++++++++----------------------
But as the storm has already poured heavy rains, the water levels in the rivers have risen, the ponds have overflowed and the soil is wet, although Nuwara Eliya, Kandy, Badulla, Kegalle and Ratnapura districts have received minor heavy rains (even though at least 30-40 mm), it will cause landslide, so People in these areas should be very careful about this. People in Central, Uwa and Sabaragamuwa provinces should be careful especially on the next 6th, 7th, 8th and 9th
Those who are engaged in disaster relief activities in the above mentioned districts should also keep this in mind.
-------------------------++++++++++++--------------------------
One thing I've mentioned many times is that if we are ready considering a possible disaster, even if it doesn't happen, we won't be affected. But serious consequences will happen if we are not ready.
- Nagamuthu Pradeeparaja -

02.12.2025 செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3.30 மணி
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில பகுதிகளில் இன்று மாலை அல்லது இரவு மிதமான மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது. முக்கியமாக வவுனியாவின், ஓமந்தை, கீரிசுட்டான், புளியங்குளம் , கனகராயன்குளம், மூன்றுமுறிப்பு, பாலைப் பாணி பகுதிகளிலும் முல்லைத்தீவு மாவட்டத்தின் சாளை, கெருடமடு, புதுக்குடியிருப்பு மற்றும் முத்தையன் கட்டு குளத்தின் கீழ்ப் பகுதிகளிலும் சற்றுக்கனமழை கிடைக்கும்.
அதேவேளை நுவரெலியா, கண்டி, காலி, பதுளை இரத்தினபுரி, மாவட்டங்களின் சில பகுதிகளிலும், தம்புள்ள, அனுராதபுரம் பகுதிகளிலும் இன்று மாலை அல்லது இரவு மிதமான மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.
இப்பகுதிகளில் அனர்த்த மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளவர்கள் இதனைக் கருத்தில் கொள்ளவும்.
பெருமழை இல்லை. ஆகவே அச்சப்படத் தேவையில்லை.
2025.12.02 අඟහරුවාදා ප.ව. 3.30
උතුරු සහ නැගෙනහිර පළාත්වල සමහර ප්රදේශවලට අද සවස හෝ රාත්රියේ මධ්යස්ථ වැසි ඇති වීමට ඉඩ ඇත.
ප්රධාන වශයෙන් වවුනියාවේ ඕමන්තෙයි, කීරිෂුඩ්ඩාන්, පුලියන්කුලම්, කනගරායන්කුලම්, මුරුමුරිප්පු, පලෙයිපානි ප්රදේශවල සහ මුලතිව් දිස්ත්රික්කයේ සාලයි, කෙරුඩමඩු, පුදුකුඩියිරිප්පු සහ මුතයියන් කට්ටු යන ප්රදේශවල පහළ ප්රදේශවල.
මේ අතර, නුවරඑළිය, මහනුවර, ගාල්ල, බදුල්ල සහ රත්නපුර දිස්ත්රික්කවල සහ දඹුල්ල සහ අනුරාධපුර ප්රදේශවල සමහර ප්රදේශවලට අද සවස හෝ රාත්රියේ මධ්යස්ථ වැසි ඇති වීමට ඉඩ ඇත.
මෙම ප්රදේශවල ආපදා සහන මෙහෙයුම්වල නියැලී සිටින අය මෙය සැලකිල්ලට ගත යුතුය.
දැඩි වර්ෂාවක් නොමැත. එබැවින් කලබල විය යුතු නැත.
- නාගමුතු ප්රතිපරාජා -
01.12.2025 திங்கட் கிழமை நண்பகல் 12.45 மணி
டிட்வா புயலின் அமுக்க நிறைவுச் செயற்பாட்டின் காரணமாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில பகுதிகளுக்கு இன்று மிதமானது முதல் கனமானது வரை மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது. குறிப்பாக வட மாகாணத்தின் மேற்கு பகுதிகள் குறிப்பாக மன்னார் தீவு, மாந்தை மேற்கின் சில பகுதிகள், நானாட்டானின் சில பகுதிகள், கிளிநொச்சியின் மேற்கு பகுதிகள் கனமழையைப் பெறும் வாய்ப்புள்ளது.
ஆனாலும் இன்று மாலைக்கு பின்னர் படிப்படியாக மழை குறைந்துவிடும். ஆகவே இது தொடர்பாக பதட்டமடைய தேவையில்லை.
மீண்டும் ஒரு புயல் வருமா என பலர் வினவுகின்றார்கள். இன்றைய நிலையில் வங்காள விரிகுடாவில் டிட்வா புயலைத் தவிர வேறு எந்த காற்றுச்சுழற்சியோ, வளி மண்டல மேலடுக்கு சழற்சியோ இல்லை.
ஆனாலும் எதிர்வரும் ஜனவரி இறுதிப்பகுதி வரை வடகீழ்ப் பருவக்காற்று காலம் என்பதனால் அது வரைக்கும் இடையிடையே மிதமான, கனமான மற்றும் மிகக்கனமழைகள் கிடைக்கும் வாய்ப்புள்ளது என்பதனை நினைவில் கொள்க.
இடைப்பட்ட காலத்தில் ஏதாவது தீவிர வானிலை நிகழ்வுகள் இடம்பெறும் வாய்ப்பிருந்தால் உரிய காலத்தில் உங்களுக்கு தெரிவிக்கப்படும். அது வரை தேவையற்ற வதந்திகளைப் புறந்தள்ளுங்கள்.
டிட்வா புயல் தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுக்குறைந்து சென்னைக்கு கிழக்காக 60 கி.மீ. தொலைவில் நிலை கொண்டுள்ளது. இது அடுத்த 48 மணி நேரத்தில் சென்னைக்கு அண்மையாக கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிட்வா புயல் இன்னும் கரையைக் கடக்கவில்லை என்பதனால் வடக்கு மாகாணக் கடற்பகுதிகள் கொந்தளிப்பான நிலையில் காணப்படும் என்பதனால் மீனவர்கள் கடலுக்கு செல்வதில் அவதானமாக இருப்பது அவசியம்.
- நாகமுத்து பிரதீபராஜா -
