SHARE

Showing posts with label Sritharan. Show all posts
Showing posts with label Sritharan. Show all posts

Sunday, December 11, 2011

வன்னி விவசாயிகள் பிரச்சனை குறித்து சிறீதரன் பா.உ முறையீடு

கிளிநொச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள பன்னங்கட்டி கிராமத்தில் தனியார் ஒருவருக்கு சொந்தமான 100 ஏக்கர் காணி உள்ளது. இங்கு குடியிருந்த மக்கள் விவசாயம் செய்து வாழ்க்கை நடத்தி வந்தனர். ஆனால், இக் காணியில் 60 வீத மானவற்றை தற்போது இராணுவத்தினரும் அரச கட்சியொன்றைச் சேர்ந்தவர்களும் ஆக்கிரமித்துள்ளனர். அத்துடன் இக் காணியை வெளியாட்களுக்கு விற்கும் முயற்சிகளும் இடம்பெறுகின்றன.

எனவே இக் காணியை இராணுவத்தினரின் ஆக்கிரமிப்பிலிருந்து விடுவித்து விவசாய செய்கைக்காக அங்கு குடியிருந்த மக்களிடம் வழங்க வேண்டும்.


வன்னி மாவட்டத்தைப் பொறுத்த வரையில் குளங்களை நம்பியே விவசாய செய்கைகள் இடம்பெறுகின்றன. ஆனால், இக் குளங்களில் பல நீண்டகாலமாக அபிவிருத்தியோ புனரமைப்போ செய்யப்படாமல் உள்ளன.


எனவே இக் குளங்களை அபிவிருத்தி செய்து விவசாய செய்கையை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நாம் சபைக்குள் வரும் போது நீர் வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சு சார்பாக எமக்கு அவர்களின் தயாரிப்பான தண்ணீர் போத்தல்கள் வழங்கப்பட்டன. இது வரவேற்கத்தக்க விடயம் .
ஆனால், அடுத்த தடவை வரவுசெலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டு நீர் வழங்கல், வடிகாலமைப்பு அமைச்சின் விவாதம் நடக்கும் போது எமக்கு தமிழ்க் கலாசார முறைப்படி பித்தளைச் செம்புகளில் தண்ணீர் வழங்க அமைச்சர் தினேஷ் குணவர்தன நடிவடிக்கை எடுக்க வேண்டும்.

இன்று இரணைமடுக் குளத்திலிருந்து பாரிய குடிநீர் விநியோகத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது.

அதேவேளை இந்த இரணைமடுக் குளத்திற்கருகில் இலங்கை விமானப் படையின் விமானத்தளம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த விமானத் தளத்தில் "மிக்ரு' போர் விமானங்கள் வந்திறங்கிச் செல்கின்றன. இந்த "மிக்' விமானங்கள் வந்திறங்கிச் செல்வதால் ஏற்படும் அதிர்வுகளினால் இரணைமடுக் குளத்தின் அணைக்கட்டுகளில் வெடிப்புகள் ஏற்படும் ஆபத்துள்ளது. இதனால் இரணைமடுக் குளம் உடைப்பெடுக்குமாக விருந்தால் பேராபத்து ஏற்படும்.

எனவே இரணைமடுக் குளத்திற்கருகில் அமைக்கப்பட்டுள்ள விமானத் தளத்தை அகற்றுமாறு கோருகின்றோம்.
=============================================================


சிங்களமே சிறீதரன் பா.உ.வின் `தொகுதி வாரி` விவசாயக் கோரிக்கையை நிறைவேற்று!`

India, Sri Lanka head to a win-win relationship

India, Sri Lanka head to a win-win relationship 《  Asian Age 17 Dec 2024  》 All the signs are pointing to the possibility of a major win for...