Monday 9 July 2012

அரசியல் கைதிகள் பிரச்சினை தொடர்பில் சர்வதேச சமூக பிரதிநிதிகள் அரசுக்கு அழுத்தம் வழங்க வேண்டும்: மனோகணேசன்

நிமலரூபன் மரணத்தை அடுத்து ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமையை அடிப்படையாக கொண்டு கொழும்பு, நீர்கொழும்பு, மஹர,
யாழ்ப்பாணம், அனுராதபுரம், கண்டி, களுத்துறை ஆகிய அனைத்து சிறைசாலைகளிலும் பூசா தடுப்பு முகாமிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து அரசியல் கைதிகளின் விடுதலைக்காகவும் நாம் முன்னெடுக்கும் முயற்சிகளுக்கு சமாந்திரமாக, இந்த பிரச்சினைக்கு உடன் தீர்வு காணுமாறு
அரசாங்கத்திற்கு அழுத்தம் வழங்குக என மக்கள் கண்காணிப்பு குழு அழைப்பாளரும், ஜனநாயக மக்கள் முன்னணி தலைவருமான மனோ கணேசன், இலங்கையிலுள்ள அனைத்து சர்வதேச சமூக பிரதிநிதிகளுக்கும் எழுத்து மூலமான அவசர வேண்டுகோளை விடுத்துள்ளார்.



சர்வதேச சமூக பிரதிநிதிகளுக்கு அனுப்பிவைத்துள்ள கடிதம் தொடர்பில் மக்கள் கண்காணிப்பு குழு விடுத்துள்ள ஊடக செய்தி குறிப்பில்
தெரிவிக்கப்பட்டுள்ளதாவது...

மக்கள் கண்காணிப்பு குழுவின் அவசர வேண்டுகோளை ஏற்றுக்கொண்டு மிக குறைந்த கால அவகாசத்தில் கடந்த 5ஆம் திகதி கொழும்பில் நடைபெற்ற
நமது கலந்துரையாடலில் கலந்துகொண்டமைக்கு முதலில் நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

கொல்லப்பட்டுள்ள நிமலரூபன் தொடர்பில் நாம் ஏற்கனவே மூன்று முக்கிய கோரிக்கைகளை அரசிடம் முன் வைத்துள்ளோம். அது தொடர்பில்
உங்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

 * வவுனியாவிலிருந்து முதலில் அனுரதபுரத்திற்கும் பின்னர் மஹர, கண்டி சிறைச்சாலைகளுக்கும் கொண்டு வரப்பட்டுள்ள கைதிகள் அனைவரும்,
உடனடியாக கொழும்புக்கு கொண்டு வரப்பட வேண்டும். அவர்கள் எக்காரணம் கொண்டும் மீண்டும் அனுராதபுரத்திற்கு கொண்டு செல்லப்படக்கூடாது.

* வவுனியா சிறையிலிருந்து இடமாற்றம் செய்யப்பட்ட அனைத்து கைதிகளும், பக்க சார்பற்ற முறையில் மருத்துவ பரிசோதனைக்கு உள்ளாக்கப்பட வேண்டும். அவர்கள் தொடர்பிலான மருத்துவ அறிக்கைகள் அவர்களது குடும்பத்தவர்களுக்கும் மக்கள் பிரதிநிதிகளுக்கும் வழங்கப்படவேண்டும்.

* அனைத்து கைதிகளையும் அவர்களது பெற்றோர்களும், வழக்குரைஞர்களும் சந்திப்பதற்கு முழுமையான உத்தரவாதம் வழங்கப்பட வேண்டும்.

* சிறைகூடங்களிலும், தடுப்பு முகாமிலும் வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் அனைவரும் தற்போது பல்லாண்டுகள் சிறைவாசம் அனுபவித்துள்ளனர் என்ற உண்மையை கருத்தில் கொண்டு அவர்கள் அனைவருக்கும் உடனடியாக பொது மன்னிப்பு வழங்கப்படவேண்டும்.

மன்னார் கடற்பரப்பினுள் இந்திய ரோலர் படகு மீனவர்களின் அத்துமீறும் செயற்பாடு அதிகரிப்பு

பல வருடங்களுக்கு மேலாக மன்னார் கடற்பிராந்தியத்தினுள் அத்துமீறி நுழைந்து அடாத்தாக மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் இந்திய
ரோலர் மீன்பிடி தொழிலாளர்களின் குறித்த செயற்பாடுகளினால் மன்னார் மாவட்ட மீனவர்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து
வருவதோடு ஆழ்ந்த கவலையடைந்துள்ளனர்.

கடந்த யுத்த காலத்தில் இருந்து தற்போது வரை இந்திய ரோலர் படகு மீனவர்கள் மன்னார் கடற்பிராந்தியத்தினுள் அத்துமீறி நுழைந்து மீன்பிடி
நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்ததோடு மீனவர்களின் பெறுமதி வாய்ந்த மீன்பிடி உபகரணங்களையும் சேதப்படுத்தி விட்டுச் செல்லுகின்றனர்.


குறித்த பிரச்சினை தற்போதும் தொடர்ந்து கொண்டு செல்கின்றது.யுத்
தம் முடிவுற்ற நிலையிலும் இந்திய ரோலர் படகுகளைக் கட்டுப்படுத்த முடியாத நிலையில் அரசாங்கம் காணப்படுவதாக மன்னார் மாவட்ட மீனவர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

அன்று முதல் இன்று வரை இந்திய ரோலர் மீனவர்களின் அத்து மீறும் செயற்பாட்டை கட்டுப்படுத்துமாறு கோரி மன்னார் மாவட்ட மீனவர்கள் பல
தரப்பினரிடமும் பல்வேறு முறைப்பாடுகளை முன்வைத்தனர்.
பல்வேறு பேச்சுவார்த்தை இடம் பெற்றும் எவ்வித பலனும் கிடைக்கவில்லை.தொடர்ந்தும் மன்னார் மாவட்ட மீனவர்கள் பாதிக்கப்பட்டு வருவதோடு பல இலட்சம் ரூபா நஷ்டத்தையும் எதிர் நோக்கி வருகின்றனர். மீன் பிடி தொழிலாளர்கள் பலர் தமது தொழிலை முடக்குவதற்கும் தீர்மானித்துள்ளனர்.

இந்திய மீனவர்கள் கச்சதீவு கடற்படப்பில் தொழில் செய்வதாகக் கூறிக்கொண்டு மன்னார் கடற்பிராந்தியத்தினுள் அத்து மீறி நுழைந்து மீன்
பிடிக்கின்றனர்.

கடந்த 4 ஆம் திகதி இரவு 7.30 மணியளவில் சுமார் பல ஆயிரக்கணக்கான இந்திய ரோலர் படகுகள் மன்னார் கடற்பரப்பில் மீன்பிடி நடவடிக்கையில்
ஈடுபட்டமையும் குறிப்பிடத்தக்கது.
நன்றி:தினக்குரல்
 

எங்கள் நிலம் எமக்கே சொந்தம்: மன்னார் மக்கள்

எங்கள் நிலங்களை விட்டு வெளியேறுங்கள் மன்னாரில் திரண்டனர் மக்கள்

வவுனியா, மன்னார் மாவட்டங்களிலிருந்து ஆயிரக்கணக்கில் திரண்ட மக்கள் "எங்கள் நிலங்களை விட்டு வெளியேறுங்கள்' என்ற கோஷத்துடன் தமிழர்
நிலங்களை இராணுவம் அபகரிப்பதற்கு எதிராகவும், மன்னார் மீனவர்களுக்கு கடற்படையினரால் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள "பாஸ்'
நடைமுறைக்கு எதிராகவும் சாத்வீக முறையில் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.


 நேற்று முற்பகல் 10.30 மணியளவில் மன்னார் சிறுவர் பூங்காவில் ஆரம்பமான இந்தப் பேரணியில் பெரும் எண்ணிக்கையிலான பொது மக்களும்
மற்றும் அரசியல் கட்சிகளின் தலைவர்களும் கலந்து கொண்டனர்.



 "அரசே தமிழ் மக்களின் நிலங்களை அபகரிக்காதே', "அப்பாவித் தமிழர்களை கொல்லாதே', "தமிழர் தாயகத்தை விட்டு இராணுவமே வெளியேறு',
"தமிழர் நிலங்களை ஆக்கிரமிக்காதே', "அப்பாவி தமிழ்க் கைதிகளை கொல்லாதே' என்ற கோஷங்களை எழுப்பியவாறும் சுலோக அட்டைகளை தாங்கிய வண்ணமும் போராட்டத்தில் மக்கள் ஈடுபட்டனர்.
செய்தி:தமிழ் இணையம்

அரசாங்கம் வெற்றி பெறக் கூடாது என்பதற்காகவே நாம் கிழக்கு மாகாணத் தேர்தலில் போட்டியிடத் தீர்மானித்துள்ளோம்.

கிழக்கு மாகாணசபைத் தேர்தல் தொடர்பாக இரா.சம்பந்தன் தலைமையில் ஆராய்வு
[ ஞாயிற்றுக்கிழமை, 08 யூலை 2012, 09:31 GMT ]

கிழக்கு மாகாணசபைத் தேர்தல் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் இல்லத்தில் நேற்று மாலை கலந்துரையாடல் ஒன்று நடத்தப்பட்டுள்ளது.

இரா.சம்பந்தன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா, முன்னாள் நாடாளுமன்ற
உறுப்பினர் துரைரட்ணசிங்கம் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் கிழக்கு மாகாணசபைத் தேர்தலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எவ்வாறு எதிர்கொள்வது மற்றும் வேட்பாளர்களைத் தெரிவு
செய்வது குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கலந்துரையாடலில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன், “கிழக்கு மாகாணசபைக்கு நடக்கப் போகும் தேர்தல் தமிழ் மக்களுக்கு மிகவும் முக்கியமான ஒன்று.

வடக்கு, கிழக்கு மாகாணங்கள் பிரிக்கப்பட்டிருப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.

இந்தத் தேர்தலில் சிறிலங்கா அரசாங்கம் வெற்றி பெறுமானால், அதனைக் கொண்டு தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு தமிழ் மக்களின் ஆதரவு இல்லை
என்று அனைத்துலக அளவில் பாரிய பரப்புரைகளை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளது.

இந்தத் தேர்தலில் சிறிலங்கா அரசாங்கம் வெற்றி பெறக் கூடாது. சிறிலங்காவின் ஆளும் கட்சியுடன் இணைந்து போட்டியிடும் எந்தத் தமிழரும் இந்தத் தேர்தலில் வெற்றிபெறக் கூடாது.

இதற்குத் தமிழ் மக்கள் எவரும் அனுமதிக்கக் கூடாது.

சிறிலங்கா அரசாங்கம் வெற்றி பெறக் கூடாது என்பதற்காகவே நாம் இந்தத் தேர்தலில் போட்டியிடத் தீர்மானித்துள்ளோம்.

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் ஒரு இணக்கப்பாடு வருவதை நாம் விரும்புகின்றோம். இது
தொடர்பாக ரவூப் ஹக்கீமுடன் பேசியுள்ளோம்” என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
============

கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போட்டியிடும்.
Posted by sankathinews on July 6th, 2012

கிழக்கு மாகாணசபைத் தேர்தல் நடத்தப்பட்டால் அதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போட்டியிடும். இது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில்
அங்கம் வகிக்கின்ற 5 கட்சிகளிடையேயும் புரிந்துணர்வு உடன்படிக்கை விரைவில் ஏற்படுத்தப்படவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான சுரேஷ் க.பிரேமசந்திரன் தெரிவித்தார்.

கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பான இறுதி முடிவுகளை எடுப்பதற்காக நேற்று கூட்டமைப்பின் 6 பேர் கொண்ட குழு
கொழும்பிலுள்ள கூட்டமைப்பின் அலுவலகத்தில் பேச்சு நடத்தியது. இதில் நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா.சம்பந்தன், மாவை.சேனாதிராஜா,
சுரேஷ் பிரேமசந்திரன், செல்வம் அடைக்கலநாதன் மற்றும் வீ.ஆனந்தசங்கரி, த.சித்தார்த்தன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்தக் கலந்துரையாடல் தொடர்பாக சுரேஷ் பிரேமசந்திரன் மேலும் தெரிவித்ததாவது:

நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் பிரகாரம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கிழக்கு மாகாணசபைத் தேர்தல் நடத்தப்பட்டால் அதில் போட்டியிடுவது என்று தீர்மானிக்கப்பட்டது. மேலும் எந்தச் சின்னத்தில் போட்டியிடுவது போன்ற விடயங்கள் கலந்துரையாடப்பட்ட போதிலும் முடிவுகள் எதுவும் எட்டப்படவில்லை.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்ற 5 கட்சிகள் இடையிலே இணக்கப்பாட்டை எட்டுவதற்காக புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்று
தயாரிக்கப்பட்டு வருகின்றது. இந்தப் புரிந்துணர்வு உடன்படிக்கையின் பிரகாரம் எமது செயற்பாடுகள் முன்னெடுத்துச் செல்லப்படும்.இன்றும் மேற்படி குழு 6 பேரும் சந்தித்துக் கலந்துரையாடும் என்றார்.

அநுரா ஆட்சியில் செல்வினின் பனை அபிவிருத்தி சபைத் தலைவர் பொறுப்பு பறிப்பு!

அநுரா ஆட்சியில் செல்வினின் பனை அபிவிருத்தி சபைத் தலைவர் பொறுப்பு பறிப்பு! பனை அபிவிருத்தி சபைத் தலைவராக இரானியேஸ் செல்வின் அவர்களைப் பொறுப்ப...