Saturday, 13 February 2016

`நல்லாட்சி`க் கடற்படை பள்ளிமுனை மீனவர் மீது கத்தி வெட்டுத் தாக்குதல்!

`நல்லாட்சி`க் கடற்படை பள்ளிமுனை மீனவர் மீது கத்தி வெட்டுத் தாக்குதல்!
ENB பத்திரிகை அறிக்கை


நேற்று முன்தினம்  13-02-2016 சனிக்கிழமை அன்று மன்னார் நகர பள்ளிமுனைக் கடற்தொழில் கிராமத்தின் நான்கு மீனவர்கள் இரணைதீவுப் பகுதியில் வழக்கமான மீன்பிடித் தொழில் ஈடுபட்டிருந்தனர். காலை 9.00 மணியளவில் இவர்களை அணுகிய சிங்கள நல்லாட்சிக் கடற்படைச் சிப்பாய்களின் படகில் இருந்த கடற்படை சீருடை அணிந்த சிப்பாய்கள் மீனவர் படகுக்குள் பாய்ந்து, மீனவர்கள் மீது காட்டுமிராண்டித்தனமான கத்தி வெட்டுத்தாக்குதல் நடத்தியுள்ளனர்.இதில் இரண்டு மீனவர்கள் படுகாயமடைய ஏனைய இருவர் பற்றி தகவல் தெரியாதுள்ளது. கத்தி வெட்டுக்களால் காயமடைந்த இருவரில் ஒருவர் மன்னார் வைத்திய சாலையிலும், மோசமாக காயமடைந்த மற்ற மீனவர் மேலதிக சிகிச்சைக்காக (மன்னார் வைத்தியசாலையில் வசதி இல்லாமையால்(!)  அன்னார்) யாழ்ப்பாண வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

நல்லாட்சியும், நல்லிணக்கமும், ஒற்றையாட்சி சமாதானமும், நாட்டைப் பிளவுபடுத்தாத ஜனநாயகமும் பேசிவரும் சிங்களத்தைக் கட்டிக்காக்கும்,அமெரிக்க ஏகாதிபத்தியமும், இந்திய விரிவாதிக்கமும்,ஐ.நா.சபையும், இந்த முகாமோடு, ஈழப்பிரிவினையைக் கைவிட்டு அணிசேர்ந்த `சம்பந்தனும் நாற்பது திருடர்களும்` நடத்தும் அரசியல் இத்தகைய தாக்குதல்களிலிருந்து ஈழக்கடல்த் தொழிலாளர்களை காப்பாற்றாது.ஈழக்கடல் பரப்பின் மீது பூரண உரித்துள்ள தேசப்பிரிவினையும், சூசைக் கடற்படையுமே இப்பிரச்சனைக்கு நிரந்தரத்தீர்வாகும்.
உடனடித் தீர்வின் பொருட்டு, ரணில் மைதிரிப் பாசிசமே ஈழத்தமிழ் மீனவர் மீது உன் நேவிப் படை நடத்தும் கத்திவெட்டு வெறியாட்டத்தை உடனே நிறுத்து! தாக்குதல் தாரிகளுக்கு `உள்ளக` தண்டனை வழங்கு! என ஒரு சேர முழங்குவோம்.
=============================================இச்சம்பவம் குறித்த நமது ஊடகச் செய்திகள் வருமாறு

மன்னார் பள்ளிமுனையில் மீன்பிடித்து கொண்டிருந்த மீனவர்கள் மீது கடற்படையினர் கத்தி வெட்டு.
Published on February 13, 2016-2:17 pm

மன்னார் பள்ளிமுனை கிராமத்தில் இருந்து இன்று சனிக்கிழமை காலை கடற்தொழிலுக்குச் சென்ற மீனவர்கள் மீது கடற்படையினர் மேற்கொண்ட தாக்குதலில் கடுமையாக பாதிக்கப்பட்ட இரு மீனவர்கள் மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் ஒரு மீனவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

மன்னார் பள்ளிமுனை கிராமத்தைச் சேர்ந்த 4 மீனவர்கள் படகு ஒன்றில் பள்ளிமுனை கடற்கரையில் இருந்து மீன் பிடிக்க கடலுக்குச் சென்றுள்ளனர்.

இதன் போது இந்த மீனவர்கள் 4 பேரூம் இரணை தீவு பகுதியில் மீன் பிடியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது காலை 9 மணியளவில் படகு ஒன்றில் வந்த குழுவினர் அம் மீனவர்களின் படகிற்கு அருகில் தமது படகினை நிறுத்தியுள்ளனர்.

இதன் போது சுமார் 6 பேர் முகத்தை மறைத்தவாறும் ஒருவர் கடற்படையினரின் சீருடையுடனும் காணப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் கடற்படையினரின் சீருடையுடன் காணப்பட்ட நபர் அம் மீனவர்களின் படகிற்குள் சென்று கதைத்துக் கொண்டிருந்த போது மீனவர்களின் படகிற்குள் காணப்பட்ட கத்தியை எடுத்து ஏசுதாசன் அந்தோனி (வயது-38) மற்றும் ஜேசு ரஞ்சித்(வயது-37) ஆகிய இரு மீனவர்களையும் கண்மூடித்தனமாக வெட்டியுள்ளனர்.

இதன் போது அப்படகில் இருந்த பேதுரூ இரஞ்சன்(வயது-25) மற்றும் ஏ.யூட்சன் டெரன்சியன்(வயது-26) ஆகிய இரு மீனவர்களும் கடலில் பாய்ந்துள்ளனர்.

இந்த நிலையில் காயமடைந்த இரு மீனவர்களும் அவர்கள் சென்ற படகில் பள்ளிமுனை கடற்கரையை வந்தடைந்தனர்.

இதன் போது கடும் வெட்டுக்காயங்களுக்கு உள்ளான இரு மீனவர்களுக்கும் மன்னார் பொது வைத்தியசாலையில் சிகிச்சை வழங்கப்பட்ட நிலையில் ஜேசு ரஞ்சித்(வயது-37) எனும் மீனவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

ஏசுதாசன் அந்தோனி (வயது-38) என்ற மீனவர் தற்போது மன்னார் பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

கடலில் குதித்த பேதுரூ இரஞ்சன் (வயது-25) மற்றும் ஏ.யூட்சன் டெரன்சியன் (வயது-26) ஆகிய இரு மீனவர்களும் காணாமல் போயுள்ளனர்.
நன்றி: தினக்கதிர் இணையம்
===========================

==========================================
SL Navy brutally assaults Tamil fishermen from Mannaar near Ira'nai-theevu islet
[TamilNet, Saturday, 13 February 2016, 12:32 GMT]

The occupying navy of genocidal Sri Lanka on Saturday severely assaulted two Tamil fishermen who were engaged in sea cucumber fishing near Ira'nai-theevu islet, located west of Naachchik-kudaa, where the SL military has been expanding its military positions targeting Tamil Nadu and India in recent years. One of the four fishermen who are from Pa'l'li-munai in Mannaar has sustained serious injuries and was rushed to Jaffna Teaching Hospital. The fate of two young fishermen is not known while the third one is admitted at Mannaar hospital with cut injuries to his hands. The attacking navy men were armed with automatic rifles. They were aggressive and were using abusive terms in Sinhala while assaulting the two Tamil fishermen with knives, the wounded fishermen told TamilNet. The brutal incident has taken place around 9:30 a.m. on Saturday.

Medical sources at Jaffna Teaching Hospital said fisherman Jesu Ranjith was admitted at the Intensive Care Unit.

Four Tamil fishermen from Pa'l'li-munai in Mannaar set out for sea cucumber fishing in a fiberglass boat northwards towards Ira'nai-theevu islet located near Poonakari division of Ki'linochchi district around 6:00 a.m.

While they were engaged in diving near Ira'nai-theevu, 7 occupying Sri Lanka Navy sailors fully armed with automatic rifles and accompanied with a masked operative, approached the fishing boat near Ira'nai-theevu islet.

Three of the fishermen were engaged in diving to catch sea cucumbers. The fourth one, 37-year-old Jesu Ranjith, who is the helmsman of the fishing boat, was inside the fishing vessel at that time.

The incident took place around 9:30 a.m. on Saturday.

Two armed SL navy personnel, who jumped into the fishing vessel were pointing knives at Jesu Ranjith and wanted to search the fishing vessel for dynamite explosives.

The helmsman, a father of two, who is also known as Robinson, sustained severe injuries when the SL navy personnel brutally assaulted him using knives.

The SL Navy attackers were alleging that the Mannaar fishermen were deploying illegal means to catch sea cucumber using dynamite in the seas off Ira'nai-theevu islet.

One of the three fishermen who were out in the sea noticed the incident and got into the boat to explain their fishing background. 38-year-old Jesuthasan Antony, father of four, who got into the boat, was also attacked. He has sustained injuries at his hand.

The Sinhala navy men who didn't find any trace of dynamite inside their fishing vessel instructed the fishermen to drive the boat towards other fishing vessels. Then, they further attacked them and chased them away.

The two fishermen with injuries had to sail towards Mannaar to reach the hospital.

The seriously injured helmsman, Mr Ranjith (Robinson) has been transferred to Jaffna Teaching hospital while the other fisherman, Mr Jesuthasan is admitted for treatment at Mannaar General Hospital.

The fate of the two other fishermen, 25-year-old Peduru Oranjan and 37-year-old A Jude Deransian are not yet known.

The injured fishermen are worried about their fellow divers.

Einstein சார்பியல் தத்துவம் யதார்த்தமான கருதுகோள்கள்!




ஜனாதிபதியின் கொள்கை பிரகடன உரை! -ஆங்கிலக் குறிப்புடன் தமிழ் சிங்கள வீடியோக்கள்.

அநுரவின் உரையின் முக்கிய பகுதி தமிழில் LINK அநுரவின் உரையின் முழுப்பகுதி சிங்களத்தில்                                                       ...