SHARE

Wednesday, July 21, 2010

புதிய தகவல்கள்:'புதுவை யோகி பாலகுமார்' ஆயுதம் ஏந்தா அரசியல் கைதிகள் சிங்களத்தால் படுகொலை.

சிங்களத்தின் அமைச்சர் ஒருவர், 'அரசு வெளியிட்ட பட்டியலில் இல்லாதோர் இறந்தவர்களே', என வெளியிட்ட அதிகாரபூர்வமான செய்தியை ஆதாரமாகக் கொண்டு, கடந்த ஜூலை மாதம் 28ம் தேதி, : 'புதுவை யோகி பாலகுமார்' ஆயுதம் ஏந்தா அரசியல் கைதிகள் சிங்களத்தால் படுகொலை என பகிரங்கப் படுத்தியிருந்தோம்.இதை மேலும் உறுதி செய்யும் வகையில் அரச நிவாரணம் கோரும் ஈழத் தமிழ்க் கைம்பெண்களில், பாலகுமார், யோகியின் துணைவியார்களும் அடங்குவர் என மற்றொரு சிங்களத்தின் அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார். இதை ஐலண்ட் பத்திரிகை வெளியிட்டிருந்தது. இதனை மேற்கோள்காட்டி தமிழ் நெற் இணையமும் ஒரு செய்தி வெளியிட்டிருந்தது.இவை அனைத்தின் முழுமையான தொகுப்புக்கும் மேலேகாணும் வீரவணக்கச் சுவரொட்டியில் இரட்டை அழுத்தம் செய்வதன் மூலம் இணைப்புப் பெறலாம்.

இந்திய-இலங்கை மீனவர் சங்கங்களிடையே கலந்துரையாடல்

இந்திய-இலங்கை கடற்றொழிலாளர்கள் பிரச்சனை மீனவர் சங்கங்களிடையே கலந்துரையாடல் இரு நாட்டு கடற்றொழிலாளர் பிரச்சனைக்கு தீர்வு காணும் முகமாக இந்திய...