SHARE

Tuesday, July 17, 2012

ஈழச் சிறுமி ஸ்ரீநிதியைக் கொன்ற குற்றவாளி கைது!

CRIME:

செய்தி.கொம்

இலங்கை அகதிச் சிறுமியைக் கொன்ற குற்றவாளி கைது!
[Tuesday, 2012-07-17 19:57:49]

நாமக்கல் இலங்கை அகதிகள் முகாமில், மாயமான சிறுமி கொலையுண்ட வழக்கில், போலீசார் குற்றவாளியை கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் எம். மேட்டுப்பட்டியில் இலங்கை அகதிகள் முகாம் இயங்கி வருகிறது.

கடந்த 15ம் தேதி, இந்த முகாமிலிருந்து ஸ்ரீநிதி என்ற 6 வயது சிறுமி மாயமானார். நீண்ட தேடுதலுக்குப் பின்னர், திருச்சி நெடுஞ்சாலையில் உள்ள பாலத்தினடியில் சிறுமி கழுத்து அறுபட்ட நிலையில், சடலமாக மீட்கப்பட்டார். நரபலி தரப்பட்டாரா அல்லது பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்பட்டாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை துவக்கியுள்ளனர்.

தீவிர விசாரணைக்குப் பிறகு, அதே அகதிகள் முகாமை சேர்ந்த கண்ணன் (27) என்பவர் கைது செய்யப்பட்டார். பாலியல் பலாத்காரம் செய்து சிறுமியை கொன்றதாக அவன் ஒப்புக்கொண்டான். அவன்மீது, இதேபோன்று பல்வேறு வழக்குகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.seithy.com/breifNews.php?newsID=63622&category=IndianNews&language=tamil
=============

தினமணி

இலங்கை அகதிக் குழந்தை கழுத்து அறுத்துக் கொலை
First Published : 16 Jul 2012 02:10:29 PM IST

 நாமக்கல், ஜூலை,15: நாமக்கல் அருகே 6 வயது இலங்கை அகதிக் குழந்தை ஞாயிற்றுக்கிழமை கழுத்து அறுத்துக் கொலை செய்யப்பட்டார்.

  நாமக்கல் - திருச்சி சாலை என். மேட்டுப்பட்டி இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்தவர் புவனேஸ்வரன், இவரது மகள் ஸ்ரீநிதி(6). இவரை ஞாயிற்றுக்கிழமை மாலை முதல் காணவில்லை. பெற்றோர் அக்கம் பக்கத்தில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.

  இந்த நிலையில், அகதிகள் முகாம் அருகே உள்ள பாலம் ஒன்றின் கீழ் குழந்தை ஒன்றின் உடல் கிடப்பதாகக் கிடைத்த தகவலின்படி, முகாமில் உள்ளவர்கள் அங்கு சென்று பார்த்தனர். அப்போது, ஸ்ரீநிதி கழுத்து அறுபட்ட நிலையில் பிணமாகக் கிடந்தார்.

  இதுகுறித்து தகவல் அறிந்த எருமப்பட்டி போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று குழந்தையின் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
 இந்தக் கொடூர சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

http://dinamani.com/edition/story.aspx?&SectionName=Edition-Dharmapuri&artid=629397&SectionID=225&MainSectionID=225&SEO=&Title=இலங்கை அகதிக் குழந்தை  கழுத்து அறுத்துக் கொலை
============

யாழ்.உதயன்

காணாமற்போன ஈழத்தமிழ்ச் சிறுமி சடலமாக மீட்பு; தமிழகத்தில் சம்பவம்

தமிழகத்தில் ஈழத்தமிழர் முகாமில் காணாமற்போயிருந்த சிறுமி கொலையுண்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டம் மேட்டுப்பட்டியிலுள்ள ஈழத்தமிழர் மறுவாழ்வு முகாமில் தன் பெற்றோருடன் வாழ்ந்த ஸ்ரீநிதி என்ற 6 வயது சிறுமி
நேற்றுமுன்தினம் காணாமல்போயிருந்ததாகக் கூறப்படுகிறது.

கடந்த இரு நாட்களாக காவற்றுறையினரால் மேற்கொள்ளப்பட்ட தேடுதலை அடுத்து, முகாமுக்கு அண்மையில் திருச்சி நெடுஞ்சாலையில் உள்ள இருந்த ஒரு பாலத்தின் கீழ் சிறுமி கழுத்து அறுபட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மேட்டுப்பட்டி காவற்றுறையினர் தீவிர விசாரணையின் பின்னர், அதே முகாமை சேர்ந்த கண்ணன் (27) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாலியல் பலாத்காரம் செய்து சிறுமியை கொன்றதாக குறித்த நபர் ஒப்புக்கொண்டுள்ளதாகவும் அதேபோன்று பல்வேறு வழக்குகள் அந்நபர் மீது சுமத்தப்பட்டுள்ளன எனவும் கூறப்படுகிறது.

http://www.onlineuthayan.com/News_More.php?id=201041235518363686

ஆறுவயது ஈழ அகதிச்சிறுமி தமிழக அகதிமுகாமருகில் கோரக்கொலை - வீரகேசரி

ஆறுவயது அகதி ஈழச்சிறுமி தமிழக அகதி முகாமருகில் கொலை செய்யப்பட்டு  பாலத்தின் கீழ் வீசப்பட்டுள்ளதாக  வீரகேசரி, தமிழ் வின்,  மற்றும் பல தமிழ் இணையங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

 

தமிழக அகதி முகாமில் சிறுமிக்கு நடந்த கொடுமை     

7/17/2012 3:43:08 PM வீரகேசரி  

  தமிழகத்தின் நாமக்கல் அருகே இலங்கைத் தமிழர் முகாமைச் சேர்ந்த சிறுமி வாயில் மண் வைத்து அடைக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.

மேட்டுப்பட்டி இலங்கைத் தமிழர் முகாமைச் சேர்ந்தவர் புவனேஸ்வரன். இவரின் ஆறு வயது மகள் முகாமில் இருந்து ஒரு கி.மீ. தொலைவில் உள்ள திருச்சி சாலை பாலத்தின் கீழ் கழுத்தறுபட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சிறுமி பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டிருக்கலாம் எனப் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளதுடன் அதனை உறுதி செய்வதற்காக சிறுமியின் பிரேதம் சேலம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

கொலை செய்யப்பட்ட சிறுமியின் இரு கண்களும் காயப்படுத்தப்பட்டிருப்பதுடன் உடலின் பல்வேறு இடங்களில் இரத்தக் காயங்கள் உள்ளன. மேலும், உடல் முழுவதும் இரத்தக் கோடுகள் வரையப்பட்டுள்ளன. வாயில் மண் வைத்தும் அடைக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து எருமப்பட்டிப் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=39472

 ===========================

தமிழக அகதி முகாமில் ஈழத்துச் சிறுமிக்கு நடந்த கொடுமை: கழுத்து அறுக்கப்பட்டு படுகொலை
[ செவ்வாய்க்கிழமை, 17 யூலை 2012, 01:07.27 PM GMT ] தமிழ் வின்

 தமிழகத்தின் நாமக்கல் அருகே இலங்கைத் தமிழ் அகதி முகாமைச் சேர்ந்த சிறுமி ஒருவர் வாயில் மண் வைத்து அடைக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தின் மேட்டுப்பட்டி அகதி முகாமைச் சேர்ந்தவர் புவனேஸ்வரன். இவரின் ஆறு வயது மகள்
முகாமில் இருந்து ஒரு கி.மீ. தொலைவில் உள்ள திருச்சி சாலை பாலத்தின் கீழ் கழுத்தறுபட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சிறுமி துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டிருக்கலாம் எனப் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளதுடன் அதனை உறுதி செய்வதற்காக சிறுமியின் சடலம், சேலம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

கொலை செய்யப்பட்ட சிறுமியின் இரு கண்களும் காயப் படுத்தப் பட்டிருப்பதுடன்  உடலின் பல்வேறு இடங்களில் இரத்தக் காயங்கள் உள்ளன. மேலும், உடல் முழுவதும் இரத்தக் கோடுகள் வரையப்பட்டுள்ளன. வாயில் மண் வைத்தும் அடைக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து எருமப்பட்டிப் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

http://www.tamilwin.com/show-RUmqyHSbOYjt6.html

India, Sri Lanka head to a win-win relationship

India, Sri Lanka head to a win-win relationship 《  Asian Age 17 Dec 2024  》 All the signs are pointing to the possibility of a major win for...