Friday, 14 July 2017

காலமான ஓவியம்

 
ஓவியர் வீரசந்தானம் சென்னையில் காலமானார்!
 
Tamilnadu Devarajan Posted By: Devarajan Published: Thursday, July 13, 2017, 21:35 [IST] 
 
ஓவியர் வீரசந்தானம் சென்னையில் இன்று காலமானார். மூச்சுத்திணறல் ஏற்பட்டு அவதிப்பட்ட ஓவியர் வீரசந்தானம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனில்லாமல் மரணமடைந்தார். தமிழ் பற்றாளரும் சிறந்த ஓவியருமான வீரசந்தானம் உலக தமிழர்கள் நெஞ்சில் நீங்கா இடம்பிடித்தவர்.
 
தஞ்சை முள்ளிவாய்க்கால் முற்றம் என்ற ஈழத் தமிழர்களின் நினைவகத்தை தனது ஓவிய திறனால் நிஜமாக்கித் தந்தவர்.
 
தமிழ் மக்களுக்கான கலையையும் மண்ணுக்கான அரசியலையும் சுமந்து திரிந்த மக்கள் கலைஞன்
 
71 வது வயதில் மறைந்துள்ளார்.
 
கும்பகோணம் ஓவிய பள்ளியில் படித்து, மும்பையில நெசவாளர் பணி மையத்தில் டிசைனராக பணியில் சேர்ந்தார். பின்னர் அங்கிருந்து, தமிழ் இனத்துக்காகப் போராட வேண்டும் என்ற நோக்கோடு விருப்ப ஓய்வில் வெளியேறினார். கடந்த ஆண்டு அவருக்கு உடல்நலத்தில் குறைபாடு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து பல மாதங்கள் மருத்துவ சிகிச்சையில் இருந்து, நோயிலிருந்து மீண்டு, தமிழர் நலன் சார்ந்த பணிகளை மேற்கொண்டார். ஆனால் இன்று திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டு, மறைந்துவிட்டார்
 
 
 
 
 

மேற் திசை மீறி எம் ஈழக் காற்றிசை வெல்லும் என்பது உறுதி!

நினைவேந்தல்
 ஓவியர் - தோழர் வீர சந்தானம் 

 (1947 ஒப்பிலியப்பன் கோயில் தஞ்சாவூர் - 2017.07.13 சென்னை)
 
 சொல்லும் செயலுமாக வாழ்ந்த அறம்சார் மென் மனப் பண்பாளர்.
 
காலமாகிய தமிழ்த் தூரிகையாளருக்கு
 வீர சந்தான ஓவிய மலராகத் தூவி
 சமர்ப்பணப் படைப்பாக இறுதி வணக்கம் !
 
அவரது நினைவு தாங்கி தமது தூரிகைகளால் இந்த ஓவியங்களை வரைந்த ஓவியர்களுக்கு நன்றி கூறிப் பகிர்கிறேன்.
 
70களின் கடைசியில் ‘ஈழக் கனவு சுமந்த’ பணியாளர்களாக சென்னையில் அலைந்த போராட்ட முன்னோடிகளை வரவேற்று கைகுலுக்கிய தொடக்க கால ஆரம்பக் கரங்களில் இவரது கரங்களும் வாஞ்சையுடன் இறுகிப் பற்றியவை.
 
அந்த இறுக்கம் அவரது இறுதி மூச்சு வரையில் நிலைத்திருந்தது. தமிழக ஈழ நட்புறவுக் கழகமாகவும் பின்னர் ஈழ நண்பர் கழகமாகவும் கடைசியாக காக்கைச் சிறகினிலே இதழின் தொடக்க நெறியாளர்களில் ஒருவராகவும் முன்னின்ற உழைப்பாளி – அர்ப்பணிப்பாளர் !!
 
கறுப்பு – வெள்ளைக் காட்சியாகப் புலப்படுத்தும் தமிழ் அடையாளத் தூரிகையாளர்.
வார்த்தைகளைக் குவிக்கும் ஒற்றை ஓவியமாக இவரது தூரிகையால் வெளிப்பட்ட படையல்கள் வெளியீடுகளில் தடமிட்டன. ஓவியக் கலையை அசட்டை செய்யும் தமிழ்ச் சமூகத்தில் முகிழ்தெழுந்து தலைநிமிரப் பவனிவந்த முன்னோடிகளில் ஒருவர்.
 
இவரது அன்றைய ஓவியங்களைத் தொகுத்து 1987 இல் ‘முகில்களின் மீது நெருப்பு’ ஓவிய
 நூல் வெளியீட்டை நண்பரும் தோழருமான வைகறை பொன்னி மூலம் வெளியிட்டார். இந்தத் தொகுப்பை நண்பரும் தோழருமான மாரீசு அமைத்திருந்தார். நண்பர் இந்திரன் முன்னுரையுடன் இந்நூல் வெளிவந்தது. அக்காலத்தில் தமிழ்நாட்டில் வெளிவந்த ‘தனி ஓவியத் தொகுப்பு’ நூல்களில் இது முதன்மையானது என்பதை நினைவில் கொள்ளலாம்.
 
நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்
 பெருமை உடைத்து இவ் வுலகு.
 
(குறள் 336 – நிலையாமை)
வீர வணக்கம்

நன்றி Face Book

ஜனாதிபதியின் கொள்கை பிரகடன உரை! -ஆங்கிலக் குறிப்புடன் தமிழ் சிங்கள வீடியோக்கள்.

அநுரவின் உரையின் முக்கிய பகுதி தமிழில் LINK அநுரவின் உரையின் முழுப்பகுதி சிங்களத்தில்                                                       ...