SHARE

Tuesday, September 22, 2009

தமிழீழ விவாதம்: Tamil Net Vs ENB

தமிழீழ தேசிய விடுதலைக்கான தொலை நோக்குத்திட்டம்

1) இன்றைய இலங்கை அரசு சிங்கள தமிழ் தேசிய இனங்களின் சம உரிமையை அங்கீகரித்த ஒன்றியமல்ல.இந்த கட்டாய இணைப்பை உருவாக்கியது சிங்களவர்களும் அல்ல.இது பிரித்தானிய ஏகாதிபத்தியவாதிகள் தமிழ்மக்களின் சம்மதம் இன்றி ஏற்படுத்திய பலாத்கார பிணைப்பாகும்- கட்டாய இணைப்பாகும்.

2) 1947 இல் நேரடியான ஏகாதிபத்திய அதிகாரம் உள்நாட்டு தரகர்களுக்கு கைமாற்றப்பட்டு இலங்கை போலிச்சுதந்திரம் அடைந்த நாள் முதல் இலங்கையில் தமிழ்த் தேசிய இனம், மற்றும் இன மத சிறுபான்மை மக்கள் மீது இலங்கை அரசு தொடர்ந்து வன்முறையைக் கட்டவிழ்த்து வந்துள்ளது.

3) இலங்கையின் அரைக்காலனித்துவ அரசு தமிழ்த் தேசம் மீதான ஒடுக்குமுறையை தனது இருப்புக்கு ஆதாரமாகக் கொண்டுள்ளது.இதனால் அதன் வீழ்ச்சிக்கும் சிங்கள மக்களின் விடுதலைக்கும் தமிழ் மக்களின் பிரிவினைக் கோரிக்கை வெற்றி பெறுவது முன் நிபந்தனையாகவுள்ளது.

4) சிங்கள பெரும் தேசிய இனத்தின் உழைக்கும் மக்கள், சிங்கள பவுத்த பேரினவாதத்துக்கு பலியாகி இருப்பதால் இரு இனமும் ஒன்று பட்டு இலங்கையில் ஜனநாயக குடியரசை அமைக்கப் போராடுவதற்கான வாய்ப்பு தடைப்பட்டுள்ளது.

5) இலங்கையில் வடக்கு கிழக்கு மாகாணங்களை தமது தாயகமாகக் கொண்ட தமிழ்மக்கள் ஒரு தேசிய இனமாகும். அவர்களது வட கிழக்கு மாகாணம் ஒரு தனித் தேசமாகும்.

6) இலங்கை வாழ் மலையகத் தமிழ் மக்கள் இனச் சிறுபான்மையினர் ஆவர்.

7) இஸ்லாமியத் தமிழர்கள், அல்லது முஸ்லிம் தமிழர்கள் மதச் சிறுபான்மையினராவர். (முழுமை அறிய)

India, Sri Lanka head to a win-win relationship

India, Sri Lanka head to a win-win relationship 《  Asian Age 17 Dec 2024  》 All the signs are pointing to the possibility of a major win for...