SHARE

Monday, January 04, 2010

யுத்தக் குற்றவாளியோடு தேர்தல் கூட்டு: தமிழ் தேசியக் கூட்டமைப்பு பொன்சேகாவிற்கு ஆதரவு

Tamil National Alliance extends support to Fonseka
By Dianne Silva Daily Mirror LK
The Tamil National Alliance (TNA) has decided to extend support to General Sarath Fonseka at the Presidential Elections this month, sources at the General’s office told Daily Mirror online. The decision was reached following talks between the TNA leader R. Sambanthan and the General this afternoon.
=====================================
பதிவு திங்கள், ஜனவரி 4, 2010 17:38 சிவதாசன், கொழும்பு
தமிழ் தேசியக் கூட்டமைப்பு சரத்பொன்சேகாவிற்கு ஆதரவு வழங்குவதாக தீர்மானம்?
எதிர்வரும் ஐனாதிபதித் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு சரத்பொன்சேகா அவர்கட்கு ஆதரவு வழங்குவதாக தீர்மானித்துள்ளதாக தெரியவருகிறது.

சிறீலங்காவில் இடம்பெறவிருக்கும் ஐனாதிபதித் தேர்தலில் இருவேட்பாளர்களுக்கும் இடையே பெரும் போட்டி நிலவும் இந்நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் நீண்ட ஆலோசனைகளுக்கு பிற்பாடு சரத்பொன்சேகாவிற்கு தமது ஆதரவினை வழங்குவதாக தீர்மானித்துள்ளதாக தெரியவருகிறது.

எனினும் இச்செய்தியை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதுவரை உறுதி செய்யவில்லை. இத்தகவலை சரத்பொன்சேகாவின் தேர்தல் அலுவலம் உறுதி செய்துள்ளதாக டெய்லிமிரர் என்ற ஆங்கில நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.

ஜனாதிபதித் தேர்தலில் தமது நிலைப்பாடு தொடர்பாக ஆராய்வதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இன்று நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் கூடி ஆராய்ந்துள்ளனர். கூட்டம் காலை 10 மணிக்கு முதல் மாலை 4 மணி வரை கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

இரா.சம்பந்தன் தலைமையில் நடை பெற்ற இக் கூட்டத்தில் எம்.கே.சிவாஜிலிங்கம் இசந்திரநேரு சந்திரகாந்தன் ( தற்போது லண்டன்) இஎஸ்.ஜெயானந்தமூர்த்தி ( தற்போது லண்டன் ) த.கனகசபை (தற்போது இந்தியா ) இசதாசிவம் கனகரத்தினம் ( தடுப்புக் காவல் ) தவிர்ந்த ஏனைய 17 நாடாளுமன்ற உறுப்பினர்களும் இக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

இந்த நிலையில் இன்றைய கலந்துரையாடலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரால் எந்தவொரு தீர்மானமும் எடுக்கப்படவில்லை. நானை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முடிவு அறிவிக்கப்படும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் திருகோணமலை நாடாளுமன்ற உறுப்பினர் துரைரட்ணம் அவர்கள் கொழும்பு ஊடகம் ஒன்றுக்குக் கூறியுள்ளார்.

India, Sri Lanka head to a win-win relationship

India, Sri Lanka head to a win-win relationship 《  Asian Age 17 Dec 2024  》 All the signs are pointing to the possibility of a major win for...