SHARE
Wednesday, November 23, 2011
புதிய ஈழம்: சிங்களத்தின் வரவு செலவுத் திட்டம் 2012 - பார்வையும...
புதிய ஈழம்: சிங்களத்தின் வரவு செலவுத் திட்டம் 2012 - பார்வையும...: ஈழத்தமிழ்த் தேசிய இன ஒடுக்குமுறையைப் பற்றி நின்று, உலகமயமாக்கலுக்கு சேவகம் செய்ய, மென்மேலும் இராணுவமயமாகும் சிங்களத்துக்கு, தீனி போடும் வரவ...
இராணுவமயமாகும் சிங்களத்துக்கு, தீனி போடும் வரவு செலவுத் திட்டம் 2012
ஈழத்தமிழ்த் தேசிய இன ஒடுக்குமுறையைப் பற்றி நின்று, உலகமயமாக்கலுக்கு சேவகம் செய்ய, மென்மேலும் இராணுவமயமாகும் சிங்களத்துக்கு, தீனி போடும் வரவு செலவுத் திட்டம் 2012
நாணய மதிப்பிறக்கம், சிங்கள வன்படைச் செலவினத்தின் அமைதிக்கால அதீத அதிகரிப்பு, அந்நியர்களுக்கு வரிச்சலுகை, உலகமயமாக்கலுக்கு உறுதுணை,விவசாயத்தை அந்நியமயப்படுத்தல், தமிழீழத்தை அந்நியருக்கு தாரை வார்க்க இராணுவ முற்றுகையில் வைத்திருத்தல் என ஒட்டு மொத்த இலங்கை மக்கள் மீது ஜனநாயக விரோத பாசிசத் தாக்குதல் தொடுப்பதே சிங்களத்தின் திட்டமாக உள்ளது.
இதனால் பக்ச பாசிஸ்டுக்களின் 2012 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம், ஈழத்தமிழ்த் தேசிய இன ஒடுக்குமுறையைப் பற்றி நின்று, உலகமயமாக்கலுக்கு சேவகம் செய்ய, மேலும் இராணுவமயமாகும் சிங்களத்துக்கு, தீனி போடும் வரவு செலவுத் திட்டமாகும்.
இது ஒட்டு மொத்த இலங்கை மக்கள்மீதும், குறிப்பாகத் தமிழீழமக்கள் மீதும் தொடுக்கப்பட்ட ஜனநாய விரோத பாசிசத்தாகுதலாகும்.இதனைத் தோற்கடிக்க பின்வரும் முழக்கங்களின் அடிப்படையில் அணிசேர்ந்து போராடுவோம்!
எதிரிகள்:
· உலகமயமாக்கலின் நலனுக்காக சிங்களத்தின் இராணுவ மயமாக்கலை ஊக்குவிக்கும் ஏகாதிபத்தியவாதிகள் நமது எதிரிகளே!
· நம்மை நிராயுதபாணியாக்கி எதிரியை இராணுவ சர்வாதிகாரியாக்கிய அமெரிக்க ஏகாதிபத்திய-இந்திய விரிவாதிக்க அரசுகள் நமது எதிரிகளே!
· உலக மறுபங்கீட்டுப் போட்டியில் இலங்கையில் களம் இறங்கியுள்ள IRC (Iran Russia China) அணி நமது எதிராளிகளே!
· இவ்விரு அணிகளாலும் ஊட்டி வளர்த்து பேணிப் பாதுகாக்கப்படும் சிங்களம் நமது பிரதான எதிரியே!
அணிசேர்க்கை:
· IRC (Iran Russia China) அணிக்கெதிராக AmeIn (America India) ஆமேன் அணியுடன் அணிசேரும் தரகுப் பாதையை நிராகரிப்போம்!
· ஏகாதிபத்தியமே நீதிவழங்கு, இந்தியாவே தீர்வு வழங்கு என முனகும் சமரசவாதத் துரோகிகளைத் தனிமைப்படுத்துவோம்!
· உலகத்தொழிலாளர்களுடனும் ஒடுக்கப்பட்ட தேசங்களுடனும் ஒன்று சேருவோம்!
சிங்கள உழைக்கும் விவசாயப் பாட்டாளி மக்களுக்கு:
· சிங்களத் தொழிலாளர்களே விவசாயிகளே தங்களுக்கு பேரினவாத வெறியூட்டி, தமீழீழப் படுகொலைக்கு ஆதரவாகத் திரட்டிக் கொண்டு, தேசிய வீரராக நாடகமாடும் பக்சபாசிஸ்டுக்கள் தங்கள் தேசத்தை அந்நியருக்கு கூறு போட்டு விற்பதை உணருங்கள்!
· IRC அணியோடோ அல்லது AmeIn அணியோடோ எதனோடு கூட்டமைத்தாலும் கூட்டமைப்பவர்கள் ஏகாதிபத்திய தாசர்களே!
· பக்ச பாசிஸ்டுக்கள் தேசிய புருசர்கள் அல்ல ஏகாதிபத்தியத் தாசர்களே!
· தங்கள் மீதான அனைத்துத் தளைகளையும் தகர்க்க தாங்கள் ஏந்த வேண்டிய முழக்கம் `ஈழத்தமிழினத்தின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிப்போம்` என்பதே ஆகும்!
தமிழீழ மக்களுக்கு;
· பக்ச பாசிஸ்டுக்கள் சிங்கள நீசர்கள் மட்டுமல்ல ஏகாதிபத்திய தாசர்களும் ஆகும்!
· ஒன்றை மட்டும் உயர்த்தி, மற்றதை ஒழித்து விடுதலைப் பயணத்தில் தாங்கள் வெற்றி பெற முடியாது!
முரணற்ற முழக்கங்கள்:
· ஈழத்தமிழ்த் தேசிய இன ஒடுக்குமுறையைப் பற்றி நின்று, உலகமயமாக்கலுக்கு சேவகம் செய்ய, மென்மேலும் இராணுவமயமாகும் சிங்களத்துக்கு, தீனி போடுவதே 2012 வரவு செலவுத் திட்டம் ஆகும்!
· இது இலங்கை மக்கள் மீது தொடுக்கப் போகும் ``அபிவிருத்தி யுத்தத்தை`` எதிர்கொள்ளத் தயாராகுவோம்!
· பிரிவினைக் கோரிக்கையை உயர்த்திப்பிடிப்போம்!
· என்றும் சிங்கள மக்களுடன் ஒன்றுபடக் குரல் கொடுப்போம்!
· உலகத்தொழிலாளர்களே ஒடுக்கப்பட்ட தேசங்களே ஒன்று சேருங்கள்! தமிழீழ தேசத்தின் சுயநிர்ணய உரிமை இயக்கத்தை ஆதரியுங்கள் !
புதிய ஈழப்புரட்சியாளர்கள்
Subscribe to:
Posts (Atom)
America’s “Just War” against Afghanistan: Women’s Rights “Before” and “After” America’s Destructive Wars
America’s “Just War” against Afghanistan: Women’s Rights “Before” and “After” America’s Destructive Wars The CIA Sponsored Islamic Insurge...
-
தமிழகம் வாழ் ஈழத்தமிழர்களை கழகக் கண்டனப் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ளக் கோருகின்றோம்!
-
சமரன்: தோழர்கள் மீது எடப்பாடி கொலை வெறித்தாக்குதல், கழகம்...