SHARE

Tuesday, March 15, 2016

வெற்றிச் செல்வி படைப்புகள்

வெற்றிச் செல்வியின் ஒரு கவிதை!



எங்கள் கண்ணீருக்கு மட்டுமல்ல
செந்நீருக்கும் விலையற்றுப்போன
வேதனை வரலாற்றை எழுதுவதால்
யாருக்குப் பயன்?

பத்திரிகைகள்
காலத்தின் கண்ணாடிகள்தான்.
எனினும்
குருதிப் படிவும் பிணத்தின் நெடியும் வீசும்
மரணக்குழியாகிய எனது முகத்தை
கண்ணாடியில் பார்க்க எனக்கு விருப்பமில்லை.

வீரத்தின் கொடியேற்றங்களை எழுதிய
எனது பேனாவுக்கு,
தியாகத்தின் உச்சங்களை பாராட்டிய
எனது பேனாவுக்கு,
தோழிகளின் குறும்புகளை வடித்த
எனது பேனாவுக்கு,
துயர்மிகுந்த அந்த வீழ்ச்சியை எழுத
பிடிக்குதேயில்லை.

துகிலுரியப்பட்ட பெண்களாய்
என் தோழிகளை பார்ப்பேன் என்று
நான் கனவிலும் நினைத்தவளில்லை.

இப்போது கனவுகளும் நினைவுகளும்
அவைகளாகவே இருப்பதனால்
எனது எழுத்து
என்னோடு முரண்டுபிடிக்கிறது.

எனது முகத்தின் வடுக்களை பார்த்து
இன்னொருவர் அழுவாரா?
துடிப்பாரா?

யாருக்கு வேண்டும் அந்த வலியின் பிரதிபிம்பங்கள்?
உன்னையும் என்னையும் பெற்றதற்காக
பெருமைப்படவேண்டிய மண் இப்போதெம்மை
புனைபெயர்களில் ஒழித்துவைத்திருப்பதற்காக
அழுகிறேன்.

என் அழுகுரல் கேட்கிறதா?
நித்திரைகூடப் புறக்கணித்த என் இரவுகள்
என்னை குத்திக்கிழிப்பதால்
நானிடும் ஓலம் எவரின் செவிகளையும்
தொட்டுவிடுமா என்ன?

எனினும்
வழியும் விழிகளை துடைத்தபடிஎன் நம்பிக்கைகள்
புதிதாய் துளிர்விடுவதை யாராலும் தடுக்க முடியாது.

வெற்றிச்செல்வி

வெற்றிச் செல்வி ஒரு போராளிப் படைப்பாளி!

படைப்பாளிப் போராளி!


30 ஆண்டுகள் அகிம்சாவாதிகளுக்கு எதிராகவும், அடுத்த 30 ஆண்டுகள் ஆயுதப் போராளிகளுக்கும், ஆதரவான பொதுமக்களுக்கும் எதிராகவும் ஆக மொத்தம் அறுபது ஆண்டுகள் சிங்களமும்,இந்தியமும்,ஏகாதிபத்தியமும், நடத்திய இனப்படுகொலை யுத்தத்தை எதிர்த்த முதலாவது ஈழ விடுதலை யுத்தம் மே 18 2009 இல் முள்ளிவாய்க்காலில் ஓய்ந்தது;

``துயர் மிகுந்த அந்த வீழ்ச்சியை`` அரசியல் இலக்கிய வரலாறாக்குகின்றது, வெற்றிச் செல்வியின் கலைத்துவம்.


துணை புரிகிறது வலது கண்ணையும், செவிப்பறைகளையும், வலது கையையும் இழந்து புதிய போராயுதமாக அவர் பழக்கி எடுத்துக் கொண்ட இடது கரத்தின் காயம் பட்ட ஐந்து விரல்கள்.

வெற்றிச் செல்வி ஈழ மன்னார் மாவட்டத்தில் அடம்பன் என்கிற நெல் விவசாயக் கிராமத்தைச் சார்ந்தவர்.தந்தை வேலு விவசாயி, தாயார் பொன்னியின் செல்வன், நளவெண்பா போதித்த இலக்கியவாதி.

1970 களின் உலக ஏகாதிபத்திய பொருளாதார நெருக்கடியைச் சார்ந்து, தரகு வணிக நாடாக இருந்த இலங்கையிலும் பொருளாதார நெருக்கடி வெடித்தது.சிங்களம் அன்றும் இன்றும் கையாளும் அதே தந்திரத்தை 70 களிலும் கடைப்பிடித்தது. ஏகாதிபத்திய நெருக்கடிக்கு முண்டு கொடுக்க உள்நாட்டில் இன மோதலை ஊக்குவித்தது.

1980 களில் இந்த இன ஒடுக்கு முறை அரசியல் இனப்படுகொலை யுத்தமாக வடிவெடுத்து 1983 இல் உள் நாட்டு யுத்தமாக மாறியது.

1970 களில் இலங்கையில் ஒரு விவசாயப் பிரச்சனை எழுந்தது, 1972 அரசியல் யாப்பு,தரப்படுத்தல் திட்டமும், அதை எதிர்த்த ஈழ மாணவர் இயக்கமும், ஜே.வி.பி.இன் ஆட்சிக் கவிழ்ப்பு கிளர்ச்சியும் ஒரு மரத்தின் இரு கிளைகளாகும்.

இதுதான் வெற்றிச் செல்வியின் இளம் பருவக் காலம்.அவர் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்தது 16 வயதினிலே!

வெற்றிச்செல்வி 19 வயதில் ஈழ தேசிய தற்காப்புப் போர்க்கடமையில் வலது கையையும் வலது கண்ணையும், செவிப்பறைகளையும், இழந்து புற ``முதுகு தவிர பெரு விரல் வரை``  உடல் எங்கும் காயப்பட்டார்.

முள்ளிவாய்க்காலில் இவர் கைதி ஆனார்.

``புனர்வாழ்வுப் பயிற்சியின் போது எனக்கு பயிற்சி எதுவும் கிடைக்கவில்லை , அரசாங்கம் தானாக முன்வந்து கொடுத்த கடன் உதவியின் மூலம் தன்னைப் போன்றவர்கள் வாழ்வாதார முயற்சிகளில் முன்னேறுவதற்குப் பதிலாக கடனாளிகளாக மாறியுள்ளோம்``
என பி.பி.சி.தமிழோசைக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

 தனது இடது கையைக் கொண்டு பல்வேறு பணிகளையும் செய்யும் இவர் பிறப்பியல்பாக வலது கைப்பழக்கத்தைக் கொண்டிருந்தவர். கடுமையான சுய பயிற்சியின் மூலம் இடது கையினால் அழகாக எழுதவும் கணணியில் வேகமாகத் தட்டச்சு செய்யவும், மோட்டார் சைக்கிளில் ஓடித்திரிபவராகவும் இருக்கின்றார். அரசாங்க ``ஐசலக்கா``வீட்டுத்திட்டத்தில் ஒரு குடில் பெற்று விட்ட வெற்றிச் செல்வி அதனை ஒரு பூங்கா வனமாக, தூங்கா ஈழக் கனவாக,
புத்துயிர் பெற்ற பொருளாக படைத்துள்ளார்.

வீட்டுச் சுற்றமே சொல்லும் அவர் படைப்பின் இரகசியத்தை.

அரசாங்க சுயதொழில் திட்டத்தின் இலாப போட்டி இயந்திர வாழ்க்கையை கைவிட்டு, தனியார் நிறுவனம் ஒன்றின் மாத வருமானத்தில் தற்போது வாழ்க்கை நடத்தி வருகின்றார்.

சமூக முன்னேற்றத்துக்கும், ஈழப் போர்க்கால மானுட வாழ்வை இலக்கிய ஆவணமாக படைத்தளிக்கும் பெரும் பணியில் ஈடுபட்டுள்ளார்.

இது வரையில் கட்டுரை,கவிதை,சிறுகதை,நாவல் என ஐந்து நூல்கள் வரை வெளியிட்டுள்ளார்.

மன்னார் அமுதனின் ஒரு குறும் திரைப்படத்திலும் நடித்து வருகின்றார்,



அவர் தன்னைப்பற்றியும், முள்ளிவாய்க்காலுக்குப் பின்னால்  தான் காணும் ஈழ சமூகத்தைப் பற்றியும் இதில் தனது பங்கு பாத்திரம் குறித்தும் மன்னார் இணையத்துக்கு அளித்த பேட்டி வருமாறு.







India, Sri Lanka head to a win-win relationship

India, Sri Lanka head to a win-win relationship 《  Asian Age 17 Dec 2024  》 All the signs are pointing to the possibility of a major win for...