SHARE

Monday, April 23, 2018

2018 கழக மே நாள் நடவடிக்கைகள்

2018 கழக மே நாள் நாமக்கல்

2018 மே நாளையொட்டி நாமக்கலில் ஊர்வலமும் ஆர்ப்பாட்டமும் நடைபெறவுள்ளது.
==================
நாமக்கல்:

மே நாள் செவ்வாய்க் கிழமை மாலை 4.00 மணியளவில் ஊர்வலம், தோழர் பூபதி தலைமையில் பெருமாம்பாளையம் பஸ் ஸ்டாப்பில் இருந்து ஆரம்பமாகும்.

ஊர்வலத்தைத் தொடர்ந்து, பொதுக்கூட்டம் மாலை 6.00 மணியளவில் நாமக்கல், முத்துக்காப்பட்டி, கொல்லம் பட்டறை அருகில் தோழர் சதாசிவம் தலைமையில் நடைபெறவுள்ளது.
இப் பொதுக்கூட்டத்தில் தோழர்கள்,மணி,சோமு,ஆறுமுகம்,முத்து ஆகியோர் உரையாற்ற தோழர் அன்பு நன்றியுரை வழங்குவார்.


மக்கள் கலை மன்ற கலை நிகழ்ச்சிகள் இடம்பெறுமெனவும் கழகப் பிரசுரத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.




2018 கழக மே நாள் தர்மபுரி.

2018 மே நாளையொட்டி தர்மபுரியில் ஊர்வலமும் ஆர்ப்பாட்டமும் நடைபெறவுள்ளது.
==========
தர்மபுரி:

மே நாள் செவ்வாய்க்கிழமை மாலை 4.00 மணிக்கு தர்மபுரி வேல் பால் டிப்போ அருகாமையில் ஊர்வலம் ஆரம்பமாகி BSNL அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம் இடம்பெறும். ஆர்ப்பாட்ட உரையை ம.ஜ.இ.க.மாநில அமைப்பாளர் தோழர் ஞானம் ஆற்றுவார் என கழகப் பிரசுரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
==========



2018 கழக மே நாள் செங்கல்பட்டு.

2018 மே நாளையொட்டி செங்கல்பட்டில் ஊர்வலமும் பொதுக்கூட்டமும் நடைபெறவுள்ளது.
==========
செங்கல்பட்டு

செங்கல்பட்டு ஊர்வலம் ராட்டினக் கிணறு அருகில் மாலை 4.00 மணிக்கு ஆரம்பமாகும்.பொதுக்கூட்டம் மாலை 6 மணிக்கு பழைய பேரூந்து நிலையம் அருகில் இடம்பெறுமென கழகப் பிரசுரத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

பொதுக்கூட்டத்தில் தோழர்கள் ஸ்டாலின்,டேவிட் செல்லப்பா,சேல் முருகன்,வெண்ணிலா,சுரேஸ், அன்பு,வேலு ஆகியோர் உரையாற்றுவதோடு,மக்கள் கலைமன்ற கலை நிகழ்ச்சியும் இடம்பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்திய-இலங்கை மீனவர் சங்கங்களிடையே கலந்துரையாடல்

இந்திய-இலங்கை கடற்றொழிலாளர்கள் பிரச்சனை மீனவர் சங்கங்களிடையே கலந்துரையாடல் இரு நாட்டு கடற்றொழிலாளர் பிரச்சனைக்கு தீர்வு காணும் முகமாக இந்திய...