SHARE

Monday, September 03, 2012

கூடங்குளம் அணு உலையை மூடு என்ற பிற்போக்கு முழக்கத்தை முறியடிப்போம்! - சமரன்




கூடங்குளம் அணு உலை குறித்த எமது முழக்கங்கள்:

அணுசக்தி, மனிதகுல ஆற்றல் பற்றாக்குறை எனும் இருளைப் போக்கும் அற்புத விளக்காக, இயற்கை உயிரியல் துறையில் சாகசங்கள் புரியும் உயிர் சக்தியாக, கடவுள் படைப்பு எனும் மாயையைக் கட்டுடைத்து இயற்கை உண்மையை உலகுக்குக் காட்டும் மாபெரும் சக்தியாக திகழ்கிறது. அந்த அற்புத சக்தியை மனிதகுலம் தம்வசப்படுத்தி வளம் பெற்றிட கீழ்க்கண்ட முழக்கங்களின் அடிப்படையில் அணிதிரள்வோம்.

* இந்திய - அமெரிக்க இராணுவ, மற்றும் அணுசக்தி ஒப்பந்தங்களை ரத்துசெய்!

* ஏகாதிபத்தியங்கள்,உள்நாட்டுத் தரகுப் பெருமுதலாளிகளின் இலாப வெறிக்காக இயங்கும் பழைய காலாவதியான அணு உலைகளை மூடு,
புதிய தொழில்நுட்ப ரீதியிலான, பாதுகாப்பான அணு உலைகளை அனுமதி!


* மக்களுக்கு உரியபாதுகாப்பு வழங்கி கூடங்குளம் அணு உலையைத் திற!

* அணுசக்தி “காலாவதியாகிவிட்டது” என்று கூறி , அணு உலையை மூடு என்ற பிற்போக்கு முழக்கத்தை முறியடிப்போம்!

* அனல், புனல், காற்று,சூரிய ஒளி, அணுசக்தி உள்ளிட்ட தேசிய மின் திட்டத்திற்காகப் போராடுவோம்!

மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம், தமிழ்நாடு
----------------------------------------
முழு விரிவான குறு நூலைப் படிக்க:

படியுங்கள்!                           பரப்புங்கள்!!                       பங்களியுங்கள்!!!

Maduro in court- U.S. kidnapped Me

Maduro, making first court appearance, says U.S. ‘kidnapped’ him As the deposed Venezuelan president and his wife, Cilia Flores, grapple wit...