அகசுயநிர்ணய உரிமை என்கிற அதிகாரப் பரவலாக்கத் திட்டத்தில் விடுதலைப் புலிகள் அமைப்புக்குள் சீர்குலைவுகளை ஏற்படுத்தி எரிக் சொல்ஹெயுமுடன் இணைந்து கருணாவை உடைத்து, கேபியை விலைக்கு வாங்கி தேசியத் தளபதி பிரபாகரனை யுத்தப் பிரபு என மாசுபடுத்தி விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அழிவுக்கும் முள்ளிவாய்க்கால் பிரளயத்துக்கும் காரணமான அன்ரன் பாலசிங்கம் தேசத்துரோகியே ஆகும்.
பிரபாகரன் அவர்கள் மரியாதையின் நிமித்தமும் அரசியல் சந்தர்ப்பவாதம் காரணமாகவும் பாலசிங்கத்துக்கு வழங்கிய ”தேசத்தின் குரல்” என்ற பட்டத்துக்கு அவர் தகுதியோ பொறுப்போ உடையவர் என்று நிரூபிக்கவில்லை. நோர்வே பேச்சுவார்த்தை ஆரம்பித்த காலம் முதலே நாம் பாலசிங்கத்தின் வழி நாசத்துக்கு இட்டுச் செல்லும் என சுட்டிக் காட்டி விமர்சித்து வந்தோம்.ஆனால் இன்று நோர்வே ஆய்வறிக்கை வெளிவந்த பின்னர் அன்று நாம் அனுமானித்த பல்வேறு உண்மைகளை இவ்வறிக்கை ஆதாரப்படுத்திய பின்னரும் அன்ரன் பாலசிங்கத்துக்கு ஐந்தாம் ஆண்டு நினைவு விழா எடுப்பவர்கள் மாண்ட நம் மக்களையும் மாவீரத் தோழர்களையும் தேசியத் தளபதி மேதகு பிரபாகரன் அவர்களையும் இழிவுபடுத்துபவரே ஆவர். அது மட்டுமல்ல பாலசிங்கத்தின் துரோகத்தை மூடிமறைப்பவர்கள் அத்துரோகத்துக்குத் துணைபோவதுடன் தாமும் தொடர்ந்து தமிழீழத்திற்கு துரோகம் இழைக்கின்றனர்.
படியுங்கள்! பரப்புங்கள்!
”யுத்தப்பிரபு” பிரபாகரனும் அரசியல் சாணக்கியன் அன்ரன் பாலசிங்கமும்