முதலாளித்துவ நாடாளுமன்றம் நடைமுறையில்
காலாவதி ஆகியதன் விளைவே சிங்களத்தில் நிகழ்ந்த கலகம்.
`தாமரைக் களத்தில்` சில மொட்டுக்கள்!
சிங்கள நாடாளுமன்றம் சோல்பரி அரசியல் யாப்பால்
உருவாக்கப்பட்ட அரைக்காலனிய அந்நிய மன்றமாகும்.
மலையக மக்களின் வாக்குரிமை பறிக்கப்பட்டபோது
அதன் செங்கோல் வளைந்து விட்டது.
1972,1978 யாப்பும் 6வது திருத்தமும் வந்த போது செங்கோல்
முழுதாக முறிந்து விட்டது.
பயங்கரவாதச் சட்டம், அவசரகாலச் சட்டம் உள்ளிட்ட
கறுப்புச் சட்டங்கள் வந்து, இனப்படுகொலை யுத்தம்
சட்ட பூர்வமாக்கப்பட்ட போது எரிந்து சாம்பராய் விட்டது.
19வது திருத்தம் அதை உயிர்ப்பிக்கவில்லை, மாறாக 19
திருத்தங்களும் பாசிசப் பேயாக வளர்ந்து நிற்கின்றன.
ஒரு ஆயிரம் பேர் வடகிழக்கில் 6வது திருத்தத்தை நீக்கக்
கோரி ஆர்ப்பரித்தால், அல்லது இராணுவ முகாம் முன்னால்
ஒரு `பட்டாசு` வெடித்தால் அந்தக்கணமே இவர்கள்
ஒன்று சேர்ந்து விடுவார்கள்.
இந்த வேண்டாப் பிண்டத்தைக் கட்டிக் காப்பது அல்ல,
வெட்டிச் சரிப்பதே ஜனநாயகம்!