SHARE

Wednesday, September 25, 2013

ஒபாமாவுடனான வட்டமேசை சந்திப்பில் கலந்துகொண்டார் பாக்கியசோதி சரவணமுத்து

ஒபாமாவுடனான வட்டமேசை சந்திப்பில் கலந்துகொண்டார் பாக்கியசோதி சரவணமுத்து!
[ புதன்கிழமை, 25 செப்ரெம்பர் 2013, 01:49.23 PM GMT ]

ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ள அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா, நாடுகளின் தலைவர்கள் மற்றும் உலக முழுவதிலும் உள்ள சிவில் அமைப்புகளின் தலைவர்களை சந்திக்கும் வட்டமேசை கூட்டத்தில் கலந்து கொண்டார்.

இதன் போது சிவில், சமூக அமைப்புகளுக்கு எதிரான தடைகள் குறித்து அவர் இவர்களுடன் விவாதித்துள்ளார்.

சிவில், சமூக அமைப்புகள் எதிர்நோக்கும் தடைகள், அந்த அமைப்புகளை பாதுகாக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள், அவற்றுக்கு ஆதரவு வழங்குவது தொடர்பில் இதன் போது விவாதிக்கப்பட்டுள்ளது.

23 ஆம் திகதி நடைபெற்ற இந்த விவாதத்தில் கலந்து கொள்ள இலங்கையின் மாற்றுக்கொள்கைக்கான நிலையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்துவிற்கு வெள்ளை மாளிகை அழைப்பு விடுத்திருந்து.


Ambassador Yash Sinha on Anura Kumara Dissanayake visit to India

 It is a win win situation for both nations * The joint statement shows continuity over the previous governments * significant is the refer...