Tuesday 23 February 2010

உலகத்தில் ஒழுக்கமான இராணுவமும் ஒன்பது வயது மாணவியும்!


கிழக்கின் உதயம்!
கிழக்கு மாகாணம் மட்டக்களப்பு மாவட்டம் ஏறாவூர் சித்தாண்டிக்கு அருகில் உள்ள திகிலிவெட்டையில் படையினரின் பாலியல் வன்முறைக்குள்ளான ஒன்பது வயதுச் சிறுமி.
படையினரின் காட்டுமிராண்டித்தனம் - திகிலிவட்டையில் 9 வயது சிறுமிக்கு நடந்த கொடூரம்
திகதி: 21.02.2010 // தமிழீழம் சங்கதி
திகிலிவெட்டை அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் தரம் 4இல் கல்வி கற்கும் அனுஷா (வயது 09) என்ற மாணவியும் இன்னொரு மாணவியும் 12.02.2010 அன்று மாலை நேர வகுப்பு முடிவுற்றதும் திகிலிவட்டையிலுள்ள தமது வீடுகளுக்கு சென்று கொண்டு இருக்கும் வழியில், 3 சிறீலங்கா இராணுவத்தினர் நிர்வாணமாக குளித்துக்கொண்டு இருந்த வேளையில் அந்த
இராணுவத்தினர் இச் சிறுமி இருவரையும் துரத்திய போது அதில் ஒரு (9 வயது) சிறுமி இராணுவத்தினரிடம் சிக்கியுள்ளார். மற்றவர் ஓடி தப்பிவிட்டார்.

பின்னர் அந்த மாணவிக்கு ஒரு இனிப்பு கொடுக்கப்பட்டதாகவும் பின்னர் அந்த மாணவி மயக்கமான நிலையில் நடக்க முடியாமல் தள்ளாடிய நிலையில் வீட்டுக்கு சென்றதாகவும் அந்தரங்க உறுப்புக்களில் இருந்து இரத்தம் வந்ததாகவும் பிள்ளை ஒரு விரக்தியான நிலையிலும் பிரம்மை பிடித்த நிலையிலும் காணப்பட்டதாகவும் உணர்வு குறைந்த நிலையில் அப்பிள்ளை இருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

12-02-2010 அன்று மாலை 5 மணியளவில் பிள்ளையை மாவடிவேம்பு வைத்தியசாலையில் பிள்ளையின் தாய் மற்றும் சிறிய தாயும் சேர்த்துள்ளனர். 12-02-2010 மாலை 6 மணிக்கு பின்னர் இரு சிறீலங்கா குற்றப்புலனாய்வுப் பிரிவினர் வீட்டிற்கு சென்று பிள்ளையின் உள்ளாடைகளை பசோதனைக்காக எடுத்து செல்வதாக கூறி எடுத்து சென்றுள்ளனர். 13.02.2010 சனிக்கிழமை சிறுமி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
பின்னர் ஞாயிறு தொடக்கம் கடந்த செவ்வாய்க்கிழமை வரை மட்டக்களப்பு வைத்தியசாலையில் அவரை வைத்திருந்தனர். இதையடுத்து, கிராமத்தில் பதற்றநிலை காணப்பட்டது. உந்துருளிக் குழுவினர் (அப்பாஜ் குழுவினர்) போவோர் வருவோரை விசாரித்தார்கள். இது சம்பந்தமாக அரச சார்பற்ற நிறுவன பிரதிநிதிகளால் அரச அதிபருக்கும் காவல்துறையினருக்கும் முறைப்பாடு செய்யப்பட்டது.

சிறீலங்கா காவல்துறையினர் இது தொடர்பாக கூறுகையில் நான்கு இராணுவத்தினரை கைது செய்தாகவும் சட்ட நடவடிக்கை எடுப்பதாகவும் தெவித்தனர். அப்பிள்ளையை பல இராணுவத்தினர் மற்றும் அயல் கிராம காவல்துறையினர் பயறுத்தியதாகவும் பிள்ளை பயந்த நிலையில் உள்ளதாகவும் இராணுவ சீருடையை கண்டால் பயப்படுவதாகவும் தாயாரால் கூறப்படுகிறது.

இச்சம்பவத்தை அறிந்த இராணுவத்தின் கட்டளை அதிகாரி, காவல்துறை பொறுப்பதிகாரி போன்றோர் சிறுமியை தனித்தனியாக விசாரித்ததில் சிறுமி பயத்துடன் காணப்படுவதுடன் சிறுமியின் தாய் தந்தையர் அச்சுறுத்தப்படுவதாகவும் கூறுகின்றனர். 15-02-2010 அன்று மாலை திகிலிவட்டையில் இருந்த அனைத்து இராணுவ முகாம்களும் அகற்றப்பட்டதுடன் மற்றும் அவர்களால் ஏற்கனவே இயங்கி வந்த கடையும் அகற்றப்பட்டது.

இருந்த போதிலும் மீண்டும் கிராமத்து மக்களிடம் வந்த இராணுவம் முகாம் இங்கே இருக்க வேண்டும் என்ற கருத்தை மக்களிடம் எதிர்பார்ப்பதாக கூறி அச்சுறுத்தியதன் மூலம் 17-02-2010 அன்று காலையில் கிடைத்த தகவல்படி மீண்டும் இராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டனர.; 18-02-2010 அன்று DCPU அமைப்புடன் தொடர்பு கொண்ட போது, சட்ட மருத்துவ அதிகாரியின்
அறிக்கை 17-02-2010 மாலை கிடைத்ததாகவும் பிள்ளையை தங்களிடம் ஒப்படைத்துள்ளதாகவும் வைத்திய அறிக்கையில் பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெற்றுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளதாக அவ்வமைப்பு தெரிவித்துள்ளது.
பிள்ளையின் பெற்றோர்களும் கிராமத்தவர்களும் அச்சுறுத்தப்பட்ட நிலையில் சந்திரசேகரம் சுகபாலன் கடந்த 19 ஆம் திகதி கொலை செய்யப்பட்டு காவல்துறையினால் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவர் இரண்டு பிள்ளைகளின் தந்தை ஆவார். இவன் மனைவியின் தகப்பனார் சம்பவத்தினால் ஆத்திரமுற்று இராணுவத்தினரையும் குற்றப்புலனாய்வு பிரிவினரையும் திட்டித் தீர்த்ததாக தகவல்கள் தெவிக்கின்றன. இச்சம்பவம் சிறுமியின் சம்பவத்துடன் தொடர்புபட்டதாக தகவல்கள் கசின்றன.

அநுரா ஆட்சியில் செல்வினின் பனை அபிவிருத்தி சபைத் தலைவர் பொறுப்பு பறிப்பு!

அநுரா ஆட்சியில் செல்வினின் பனை அபிவிருத்தி சபைத் தலைவர் பொறுப்பு பறிப்பு! பனை அபிவிருத்தி சபைத் தலைவராக இரானியேஸ் செல்வின் அவர்களைப் பொறுப்ப...