SHARE

Friday, January 17, 2025

Israeli cabinet approves Gaza ceasefire accord, due to take effect Sunday

A Palestinian man inspects the damage to a tent for displaced people, after an Israeli airstrike, amid the conflict between Israel and Hamas, in Khan Younis,
southern Gaza Strip, January 17, 2025. 
REUTERS/Hatem Khaled

Israeli cabinet approves Gaza ceasefire accord, due to take effect Sunday

ஈழ-நாடகத்துறை வல்லுனர் போதகர், குழந்தை சண்முகலிங்கம் அவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்!









ஈழத்து நாடக வல்லுனர் கலாநிதி குழந்தை ம. சண்முகலிங்கம் தனது 94 வது வயதில் இன்று17-01-2025 காலமானார் . பொதுவாக நாடகத் துறைக்கும், இலங்கை-ஈழ நாட உலகத்திலும் பெரிதும் மதித்து படிக்க வேண்டிய ஒரு கலைஞரும், கற்பிதரும் ஆவார்.

அவரின் இழப்பால் துயருறும் இரத்த, இலக்கிய உறவுகளுக்கு எமது ஆழ்ந்த இரங்கலை பகிரும், அதே வேளை ஏறத்தாழ ஒரு தலைமுறை கடந்த அவரதும் வாழ்வையும் பணியையும் பதிவு செய்ய முயலுகின்றோம்.  

ENB

திருநெல்வேலியை பிறப்பிடமாகக் கொண்ட இவர் குழந்தை ம.சண்முகலிங்கம் என எல்லோராலும் அறியப்படுகிறார்.
குழந்தை ம. சண்முகலிங்கம் நாடகத்துறைக்கான பட்டப்படிப்பினை கொழும்பு பல்கலைக்கழகத்தில் கற்று முப்பது ஆண்டு காலமாக அதே பல்கலைக்கழகத்தில் நாடகத்துறை விரிவுரையாளராகவும் பணியாற்றியிருக்கின்றார்.

கலைப்பட்டதாரியான சண்முகலிங்கம் ஈழத்தின் சொர்ணலிங்கம், தமிழகத்து பம்மல் சம்பந்தமுதலியார் ஆகியோரை குருவாகக்கொண்டு தனது இயல்பான நடிப்பினாலும் அரங்க அமைப்பு முறைகளினாலும் நவீனமயப்பட்ட அரங்கொன்னை ஈழத்திற்கு தந்துள்ளார். அவரது உலக நாடக அரங்கியல் மாற்றங்களோடு தன்னை இணைத்துக்கொண்டு புடம் போட்டு ஈழத்தமிழரின் அரசியலை, வாழ்க்கை ஆகியவற்றை நாடகத்தின் பொருளாக்கி ஈழத்தின் தமிழ் நாடகப் போக்கயே புதிய நடையில் பயிற்றுவித்து வருகிறார்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் இவரின் நாடகத்துறை ஈடுபாட்டின் காரணமாக வருகை விரிவுரையாளராக நியமித்தது. 1950ஆம் ஆண்டு நாடக பயணத்தை ஆரம்பித்த சண்முகலிங்கம் 1951ஆம் ஆண்டு திருநெல்வேலி இந்துவாலிப சங்க நாடகமொன்றில் கிழவன் பாத்திரம் ஏ்ற்று நடித்தார். 1957ஆம் ஆண்டு அருமை நண்பன் என்னும் நாடகத்தை எழுதி தயாரித்தார். 1958ஆம் ஆண்டு கலையரசு சொர்ணலிங்கம் தயாரித்த அருச்சுனன் பாத்திரம் ஏற்று நடித்தார். 1960ஆம ஆண்டு திருக்குறள் தந்த திருவள்ளுவரின் வாழ்வைச் சித்தரிக்கும் வையத்துள் தெய்வம் என்னும் எழுத்துரு இவரால் எழுதப்பட்டது. சந்தி, தாலியைக்கட்டு போன்ற நாடகங்களிலும் பங்குகொண்டார். ஆசிரியராகவும் அதிபராகவும் கடமையாற்றிய இவர் 1976ஆம் ஆண்டு கொழும்புப் பல்கலைக்கழகத்தில் நாடக டிப்ளோமாப் பயிற்சியில் பங்கு கொண்டதன் ஊடாக நாடகத்துறையில் புதிய பயணததை மேற்கொள்ளக்காரணமாக அமைந்தது.

நாடகக்கலைஞர் தாசீசியஸ் உடன் இணைந்து நாடக அரங்கக் கல்லூரி என்னும் அமைப்பை உருவாக்கினார். இதன் முதல் படைப்பாக கூடிவிளையாடு பாப்பா என்னும் சிறுவர் நாடகத்தினை எழுதி அரங்கேற்றினார். தாசீசியஸ் உடன் இணைந்து நாடக அரங்கக் கல்லூரியின் ஊடாக நாடக ஆர்வலர்களுக்கு களப்பயிற்சியினை நடாத்தினார். பல பாடசாலைகளிலும் இவர் நாடக பயிற்சியை வழங்கியுள்ளார். 1980ஆம் ஆண்டு காலப் பகுதியில் உறவுகள், நாளைமறுதினம், மாதொருபாகன், புழுவாய் மரமாகி, தாயுமாய் நாயுமானார், திக்விஜயம் , நரகத்தில் இடர்ப்படோம், சத்தியசோதனை, தியாகத்திருமணம் , பஞ்சவர்ண நரியார் போன்ற பாடசாலை நாடங்களை எழுதி தயார்த்தார்.

1985ஆம் ஆண்டு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலாசார குழுவுக்காக மண்சுமந்த மேனியார் எழுதித் தயாரிக்கப்பட்டது. மண்சுமந்தமேனியர் என்னும் நாடகத்தினூடாக ஈழத்தமிழரின் போராட்டம் பற்றி விபரித்துள்ளார் சண்முகலிங்கம். அன்னை இட்ட தீ (1991) நாடகத்தின் ஊடாக போராட்டத்தின் காரணமாக மக்கள் மனங்களில் ஏற்பட்ட வடுக்கள் தொடர்பாக பேசியிருந்தார். எந்தையும் தாயும் முதுமையில் பெரியோர்களை பேணுதல் தொடர்பாக பேசுகிறது. யார்க்கெடுத்துரைப்பேன் என்ற இவரின் நாடகம் அகதிமுகாம்களில் தஞ்சம் புகுந்த அகதிகளின் அவலநிலையை எமது கண்முன் கொண்டு வருகிறது.

இந்திய அமைதிப்படையினால் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணின் நிலையை வேள்வித் தீ நாடகம் சித்தரிக்கிறது. ஆர்கொலோ சதுரர், அளப்பெருங்கருணை போன்ற நாட்டிய நாடகங்கள் என்பவற்றுடன் தாகூரின் துறவி, கிரேக்க இடிபஸ் மன்னன், நோவே ஒரு பாவை வீடு என்பனவற்றை மொழிபெயர்த்து மேடையேற்றினார். நூறுக்கும் மேற்பட்ட சமூகவிடுதலை, அரசியல் விடுதலை, பண்பாட்டு விடுதலை சார்ந்த நாடகங்களை ம.சண்முகலிங்கம் எழுதியுள்ளார். இவர் நாடக கலைஞர், நாடக ஆய்வாளன், தயாரிப்பாளர், களப்பயிற்சியாளர் என பன்முகத்திறமைகளைக் கொண்டவர்.

இவர் இதுவரை நூற்றி இருபதிற்கும் மேற்பட்ட நாடகங்களை எழுதியிருக்கிறார். இவற்றில் சில நூலுருவிலும் வந்திருக்கின்றன. நாடக ஆசிரியர்களான சோபாக்கிளிஸ், இப்சன், அன்ரன்-செக்கோவ், பேட்டல்-பிரக்சட், தாகூர் ஆகியோரின் நாடகங்களில் சிலவற்றையும் சில யப்பானிய நாடகங்களையும் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார்.

1970களின் பிற்பகுதியில் யாழ்ப்பாணத்தில் நாடக அரங்கக் கல்லூரி ஒன்றினை நிறுவி நாடகத்தை ஒரு பயிற்சி நெறியாக தமிழ் கலைஞர்கள் மத்தியில் அறிமுகம் செய்தார். இந்தப் பணி மூலமாக யாழ்ப்பாணத்தில் மட்டுமல்ல இலங்கையிலேயே காத்திரமான நாடகத்துறை ஒன்று உருவாக இவர் காரணமாக இருந்திருக்கின்றார்.

1980களுக்குப் பின்னர் தமிழ் மக்கள் எதிர்கொண்ட பிரச்சனைகளை தனது நாடகங்கள் மூலமாக வெளிப்படுத்திய இவர் ராணுவ அடக்குமுறை பெண்களுக்கெதிரான அடக்குமுறை மாணவர்களை அடக்கிய கல்வி அடக்குமுறை சாதிய அடக்குமுறை சமூகத்தின் போலித்தனங்கள் என்பவற்றையெல்லாம் தனது நாடகங்கள் மூலமாக வெளிப்படுத்தி வந்துள்ளார்.

இவர் எழுதி இயக்கிய மண் சுமந்த மேனியர் என்ற நாடகம் யாழ்ப்பாணத்தின் பட்டி தொட்டியெல்லாம் மேடையேற்றப்பட்டு மக்கள் மத்தியில் பெரும் விழிப்புணர்வை ஏற்படுத்தியிருந்தது. அத்துடன் இவரது ஏனைய நாடகங்களான அன்னை இட்ட தீ, எந்தையும் தாயும் ஆகிய நாடகங்களும் மிகவும் பிரபல்யம் ஆனவை. இவரது ஆர்கொலோ சதுர‍ர் நாடகம் எல்லா நாடகங்களிலும் உச்சமானது.யுத்த‍த்தில் வெற்றி அல்லது முடிவு ஒன்றில்லை. தோற்பது மனிதம் தான் என்பதை பாரதப் போரின் 14ம் நாள் போரை மையப்படுத்திக் காட்டுகின்றார். இவர் மொழிபெயர்த்த வெண்கட்டி வட்டம் மக்கள்களரி தயாரிப்பில் 2016இல் தமிழ் சிங்கள மலையக முஸ்லிம் கலைஞர்களின் சங்கமிப்பில் யாழ்ப்பாணத்திலும் பண்டத்தரிப்பிலும் கொழும்பிலும் மேடையேறியமை குறிப்படத்தக்கது. நாடக அரங்கக் கல்லூரியின் தயாரிப்பாக உறவுகள் நாடகம் 2017இல் மீளவும் இரதிதரன் இயக்கி பண்டத்தரிப்பு, காரைநகர், புத்தூர், வ‍வுனியா ஆகிய இடங்களில் தேசிய கலை இலக்கியப் பேரவையினால் மேடையேற்றப்பட்டுவருகின்றது. அதேபோல் அவரது மொழிபெயர்ப்பில் தான் விரும்பாத் தியாகி நாடகமும் பல மேடையேற்றங்களைக் கண்டு வருகின்றது. 1976 ஆம் ஆண்டில் வெளியான பொன்மணி இலங்கைத் திரைப்படத்தில் இவர் நடித்துள்ளார். இவர் மொழிபெயர்த்த கவிதைகள் சில தாயகம் இதழில் பிரசுரமானதுடன் தாயகம் இதழின் ஆசிரியர் குழுவிலும் அங்கம் வகிக்கின்றார். ஈழத்தின் சிறுவர் நாடகத்தின் முன்னோடியான இவர் சிறுவர் நாடகங்களையும், பாடசாலை நாடகங்களையும் எழுதி இயக்கியிருக்கிறார். கூடிவிளையாடு பாப்பா, காட்டுராஜா, முயலார் முயல்கிறார் போன்ற நாடகங்கள் அவர் எழுதிய சிறுவர் நடாகங்களில் சில.

நாடகத்துறைக்கு இவர் ஆற்றிவரும் பணிக்காக கிழக்குப் பல்கலைக்கழகம் கலாநிதி (முனைவர்) பட்டம் 2001ஆம் ஆண்டு வழங்கியிருந்தது.

எழுதிய நூல்கள்

நாடக வழக்கு (அரங்கியற் கட்டுரைகளும், நேர்காணல்களும்)
மாதொருபாகம்
வேள்வித் தீ
ஒரு பாவையின் வீடு ( மொழி பெயர்ப்பு நாடகம்)
அன்னை இட்ட தீ
கோக்கேசிய வெண்கட்டி வட்டம் (மொழிபெயர்ப்பு நாடகம்)

(தொடரும்)
நன்றி :ஊடகங்கள்.

இந்திய-இலங்கை மீனவர் சங்கங்களிடையே கலந்துரையாடல்

இந்திய-இலங்கை கடற்றொழிலாளர்கள் பிரச்சனை மீனவர் சங்கங்களிடையே கலந்துரையாடல் இரு நாட்டு கடற்றொழிலாளர் பிரச்சனைக்கு தீர்வு காணும் முகமாக இந்திய...