SHARE

Monday, December 29, 2014

பக்ச பாசிசமே சோலங்கராச்சியை உடன் விடுதலை செய்!




சோலங்கராச்சியின் மனைவி தவங்காவின் ஊடக அறிக்கையின் பொதுத் தமிழ் வடிவம்

”எனது கணவரை கொலை செய்ய வேண்டாம்”; 
சோலங்கராச்சியின் மனைவி தவங்கா கோரிக்கை
29 டிசம்பர் 2014

கொடிகாவத்த – முல்லேரியாவ பிரதேச சபையின் தலைவர் பிரசன்ன சோலங்கராச்சியின் பாதுகாப்பு குறித்து அச்சப்பட வேண்டியுள்ளதாக அவரது மனைவி தவங்கா தெரிவித்துள்ளார்.

மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவு தெரிவிப்பதற்காக மேற்கொண்ட தீர்மானத்தின் பின்னரே, இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் திவங்கா சோலங்கராச்சி தெரிவித்தார்.

"விஷேட அதிரடி படையினர் நிறைந்துள்ள வாகனம் ஒன்று முதல் நாள் முழுவதும் நாம் இருக்கும் பிரதேசத்தில் காணப்பட்டது.  நேற்று எனது கணவரை தேடி வந்த பொலிஸ் ஜீப் வண்டியே இது.

தற்போது நான் கற்பமடைந்துள்ளேன். காலையில் எழுந்ததும் முதல் நினைவு, கணவருக்கு என்ன நடக்கும் என்ற அச்சம்தான்.

2010ஆம் ஆண்டில் ஒக்டோபர் மாதம் 8 ஆம் திகதி பாரத லக்ஷ்மன் பிரேமசந்திர கொலை செய்யப்பட்டது அனைவருக்கும் தெரியும். 4 பேருடன் வீதியில் கொலை செய்யப்பட்டார்.

இது எனது கணவருக்கும் நேருவதை நான் விரும்பவில்லை. அவரது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளமையினாலேயே தங்கள் முன்னால் நாம் நிற்கின்றோம்.

தற்போதைய அரசாங்கம் ஏன் இவ்வாறு செய்கின்றது என்று தெரியவில்லை, அவரைக் கடத்திச் சென்றுள்ளனர். அவரை கொலை செய்ய வேண்டாம்.
அவர் ஆயுதங்களை பயன்படுத்துபவர் அல்ல. தவறு என்றால் அதனை நேரடியாகவே கூறிவிடுவார். 
அரசாங்கம் தவறாக பார்ப்பது ஏன் என தெரியவில்லை. கடந்த 6 நாட்களாக அவரை காணவில்லை. சந்திப்பதற்கும் வாய்ப்பில்லை . இதனால் அவருக்கு பிரச்சினை ஏற்படலாம்.

தெமட்டகொட குற்றத்தடுப்பு பிரிவினர் எவ்விதமான ஆவணமும் இன்றி வருமாறு உத்தரவு இடுகின்றனர். எவ்வாறு அவர்களை நம்பி நான் பொலிஸ் நிலையத்திற்கு செல்ல முடியும்."


நன்றி: சம்பவத் தகவல்கள்  newsfirst

India, Sri Lanka head to a win-win relationship

India, Sri Lanka head to a win-win relationship 《  Asian Age 17 Dec 2024  》 All the signs are pointing to the possibility of a major win for...