புலிப்பார்வை, கத்தி திரைப்படங்கள் திரையிட்டால் கடுமையான போராட்டங்கள் வெடிக்கும் - செய்தியாளர் சந்திப்பில் அறிவிப்பு!
புலிப்பார்வை மற்றும் கத்தி திரைப்படங்கள் திரையிடப்பட்டால் கடுமையா போராட்ங்கள் வெடிக்கும் என இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில தி.வேல்முருகன் தலைமையில் இடம்பெற்ற சந்திப்பிலே இவ்விடயம் அறிவிக்கப்பட்டுள்ளது. இன்றைய சந்திப்பில் கட்சிகள் மற்றும்
இயக்கங்கள் சார்பாக 51 பேர் ஆரதரவு வழங்கியுள்ளனர்.
செய்தியாளர் சந்திப்பு பின் விடுக்கப்பட்ட செய்தியறிக்கை கீழே தரப்படுகிறது.
அன்று வியட்நாம் போரின் கொடூரத்தை உலகுக்கு எடுத்துச் சொன்னது ஒரு சிறுமியின் படம். அதுபோல் தமிழீழ விடுதலைப் போரின் உச்ச கொடூரத்தை சர்வதேச சமூகம் முன்வைத்தது தமிழீழ தேசியத் தலைவர் மேதகு பிரபாகரனின் இளைய மகன் பச்சிளம் பாலகன் பாலச்சந்திரன் குறித்த புகைப்படங்கள்.
சிங்கள வல்லூறுகளிடம் உயிருடன் சிக்கி நெஞ்சப் பரப்பெங்கும் வஞ்சகத்தார் துப்பாக்கி குண்டுகளால் துளைத்த அந்தப் பிஞ்சுவின் புகைப்படக் காட்சிகள் கண்டு கதறியழுது கண்ணீர் விடாத இதயம் எதுவும் இல்லை.
தற்போது பாலச்சந்திரனின் வாழ்க்கை வரலாற்றைச் சொல்வதாகக் கூறும் வகையில் புலிப்பார்வை என்ற திரைப்படம் வெளியாக இருக்கிறது.
இதன் காட்சிகளைப் பார்க்கும் மனச்சாட்சி உள்ள எந்த மனிதருமே இப்படி ஒரு அப்பட்டமான இனத்துரோக சிந்தனையுடன் கூடிய படம் தமிழகத்தில் இருந்து வெளியாகிறதே? என்று கொந்தளிக்கத்தான் செய்வார்கள்.
ஏனெனில்
1. இந்தப்படத்தின் காட்சிகள் அனைத்திலுமே பாலகன் பாலச்சந்திரன் சிறார் போராளியாக சித்தரிக்கப்படுகிறார். இது உண்மைக்கு மாறானது.
2. அத்தனை காட்சிகளிலுமே துப்பாக்கியுடனும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க சீருடையுடனுமே பாலச்சந்திரன் பாத்திரம் வலம் வருகிறது.
3. உச்சக்கட்ட கொடூரமாக தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் பாலசந்திரனுக்கும் சிறார்களுக்கும் ஆயுத பயிற்றி கொடுப்பதாக காட்சிகள் வருகின்றன.
4. இவை அனைத்துமே சிங்களத்தின் பொய்யுரைக்கு வலுச்சேர்க்கவே பயன்படும்.
தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் தொடர்பான உண்மை புகைப்படம் எதனிலும் அவர் தமிழீழ விடுதலைப் புலிகளின் இயக்கச் சீருடையுடன் ஆயுதப் போராளியாக இருந்ததே கிடையாது.
5. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் ஆளுமை செலுத்திய காலத்தில் பாலகன் பாலசந்திரன், அங்கு கல்வி கற்றுக் கொண்டிருந்தார். அது தொடர்பான செய்திகளும் படங்களும் உலகத்தின் பார்வைக்கும் வந்திருக்கின்றன.
6. ஆனால் போர்முனையில் பாலகன் பாலச்சந்திரன் பலியானதாகக் காட்சி அந்தப்படுகொலையை நியாயப்படுத்தத் துடிக்கிறது “புலிப்பார்வை” திரைப்படம். இது சிங்களப் பேரினவாத்தின் பொய்யுரைக்கு வலு சேர்க்கிறது திரைபடம்.
7. பாலகன் பாலச்சந்திரன் போன்ற பிஞ்சுக் குழந்தைகளையும் அப்பாவி பொதுமக்களையும் ஈவிரக்கமின்றி சிங்களப் பேரிவாதம் படுகொலை செய்ததை நியாயப்படுத்துகிற இனவெறியின் உச்சகுரலே புலிப்பார்வை திரைப்படம்.
8. இனக்கொலை புரிந்த குற்றச்சாட்டின் பேரில் சிங்களப் பேரினவாத அரசு பன்னாட்டுப் புலனாய்வுக்கு உள்ளாகியிருக்கும் நேரத்தில் சிங்களத்தைக் காப்பாற்றும் முயற்சியாக இத்திரைப்படம் வந்துள்ளது.
இதை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம்.
கத்தி
இயக்குநர் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் கத்தி திரைப்படம் குறித்து பல்வேறு சர்ச்சைகள் கடந்த ஒரு மாத காலமாக ஓடிக்கொண்டிருக்கின்றன.
தமிழீழப் பிரச்சினையில் ஒட்டுமொத்தமாக தமிழகமே ஒன்று திரண்ட நிலையில், இலங்கை பேரினவாத அரசு மீது பொருளாதாரத் தடை விதிக்க வலியுறுத்தி தமிழ்நாட்டு சட்ட மன்றத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஆனால் சிங்களப் பேரினவாதமும் அதன் தலைமைத்துவத்தில் இருக்கிற போர்க்குற்றவாளியான ராஜபக்சவும் ஒட்டுமொத்த தமிழினத்தின் கொந்தளிப்பை கொச்சைப்படுத்த, திசை திருப்ப, மழுங்கடிக்க கையில் எடுத்த உத்திதான் தமிழ்நாட்டு சட்டமன்ற தீர்மானத்தை தோற்கடிக்கும் வiயில் தமிழ்த திரை உலகத்துக்குள் பணத்தை பாய்ச்சுவது என்பது.
தமிழ்த் திரை உலகத்தில் ஐங்கரன் கருணாவை அனைவரும் அறிவர். ஆனால் அவருடன் மெல்ல மெல்ல லைக்கா என்ற நிறுவனம் இணைந்து கோடம்பாக்கத்தில் கால்பதித்தது.
அத்துடன் இயக்குநர் முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் திரைப்படத்தைத் தயாரிக்கிறது லைக்கா நிறுவனம்.
இந்த தகவல்கள் வெளியானது முதலே லைக்கா நிறுவனத்திற்கும் ராஜபக்ச குடும்பத்திற்குமான உறவுகள் என்ன என்பது குறித்து நீண்ட பட்டியல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. லைக்கா நிறுவனமே இந்தியாவில் இல்லை என்று சொன்னபோது சென்னையிலே அதன் அலுவலகம் இருப்பதும் சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது.
இதற்கெல்லாம் மேலாக லைக்காவின் சுபாஸ்கரன் அல்லிராஜா ஒரு ஈழத் தமிழர் என்ற சப்பை கட்டப்படுகிறது. ஆமாம் சுபாஸ்கரன் அல்லிராஜா ஒரு ஈழத்தமிழர்தான் சந்தேகம் இல்லை.
ஆனால் முள்ளிவாய்காலில் கொத்து கொத்தாக உறவுகள் படுகொலை செய்யப்பட்ட போது நம் இனத்தின் மீது நச்சுக்குண்டுகளை வீசிய அதே சிங்கள ராணுவத்தின் ஹெலிகாப்டரில் போய் இறங்கும் அளவுக்கு ராஸபக்ச கும்பலிடம் செல்வாக்குக் கொண்ட இன்னொரு டக்ளசும் கருணாவும் தான் இந்த சுபாஸ்கரன் என்பது உலகத்தமிழினம் நன்கறியும்.
முருகதாஸ், விஜய் போன்ற தமிழர்கள் செய்யும் துரோகத்தை இனமானம் உள்ள எந்த ஒரு தமிழனும் ஏற்க முடியாது.
உலகத்தையே உலுக்கிய இனப்படுகொலையை நிகழ்த்திய போர்க்குற்றவாளிகளின் கரங்களில் படிந்திருப்பது நம் தொப்புள் கொடி உறவுகளின் ரத்தம் என்பதை மறந்துவிட முடியாது. ஒரு மனிதனாக இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய மனிதப் பேரவலத்தை நிகழ்த்திய மிக மோசமாக மனித உரிமைகள் காலில்போட்டு மிதித்த போர்க்குற்றவாளியான ராஜபக்சேவுடன் யார் கரம் குலுக்கினாலும் மன்னிக்க முடியாது.
இப்படி புலிப்பார்வை, கத்தி போன்ற திரைப்படங்கள் தமிழினத்தின் உளவியல் சிந்தனை மீது நடத்தப்படுகிற போரின் வெளிப்பாடே!
சிறீலங்காவைப் புறக்கணிப்போம். அதன் மீது பொருளாதாரத் தடைவிதிப்போம்! என்ற முழக்கம் தமிழகத்திலும் உலகெங்கிலும் எழுந்து வரும் நிலையில் தமிழகத்துக்குள்ளேயே சிங்கள் தலை நுழைத்து தொழில், வணிகம் செய்கிற முயற்சியை தமிழர்கள் ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது.
சிங்கத்தின் உளவியல் போரை வெல்ல தமிழர்களாய் ஓரணியில் ஒன்று திரள்வோம்! தமிழீழ விடுதலையை மீட்டெடுப்போம்! என தமிழர் வாழ்வுரிமைக் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் தி.வேல்முருகன் மேலும் கூறியுள்ளார்.
ஆதரவு தரும் கட்சிகள், இயக்கங்கள் பெயர் பட்டியல்
01. தமிழக வாழ்வுரிமைக் கட்சி
02. விடுதலைச் சிறுத்தைகள்
03. மனித நேய மக்கள் கட்சி
04. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
05. கொங்கு இளைஞர் பேரவை
06. புரட்சி பாரதம்
07. எஸ்.டி.பி.ஜ
08. தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம்
09. தமிழ்த் தேசிய மக்கள் கட்சி
10. தமிழ்நாடு மக்கள் கட்சி
11. திராவிடர் விடுதலைக் கழகம்
12. தமிழ்த் தேசிய முன்னணி
13. மே 17 இயக்கம்
14. இளந்தமிழர் இயக்கம்
15. தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கம்
16. தமிழர் எழுச்சி இயக்கம்
17. தமிழர் முன்னேற்றக் கழகம்
18. தமிழத் தேசப் பேரியக்கம்
19. கே.எம்.ஷரீப் ஞானசேகரன்
20. தமிழ்ப்புலிகள் - குடந்தை அரசன்
21. நாகை திருவள்ளுர்
22. தமிழத் தேசிய விடுதலை இயக்கம்
23. இயக்குநர் புகழேந்தி தங்கராசு
24. கவிஞர் புலிமைப்பித்தன் - படைப்பாளிகள்
25. சுப.உதயகுமாரன் - கூடங்குளம் அனு உலைக்கு எதிரான மக்கள் கூட்டமைப்பு
26. சுந்தரராஜன் - பூவுலகின் நண்பர்கள்
27. ஆதியமான்
28. மு.களஞ்சியம் இயக்குநர்
29. மருத்துவர் எழிலன்
30. தமிழர் வாழ்வுரிமை இயக்கம்
31. தமிழர் படை – ஜோதிலிங்கம்
32. தொழிலாளர் மறுசீரமைப்பு இயக்கம் - சேகர்
33. பெண்கள் களம் - வழக்கறிஞர் கயல்
34. ராச்குமார் பழனிச்சாமி
35. மாணவர்களுக்கான அனைத்து கூட்டமைப்புகள்
36. தமிழ்நாடு மக்கள் முன்னேற்றக் கட்சி
37. தமிழ்நாடு வணிகர் பேரவை
38. இயக்குநர் கீரா – களம்
39. காஞ்சி மக்கள் மன்றம்
40. மனித உரிமைகள் கழகம்
41. ராஜா ஸ்டாலின்
42. அப்பேத்கர் விடுதலை இயக்கம்
43. புலமைப்பித்தன்
44. மீனவர் வேங்கைகள்
45. தமிழக மீனவர் அமைப்பு
46. தமிழ்நாடு மீனவர் பேரவை
47. டி.எஸ்.எஸ். முணி
48. பத்திரிகையாளர்கள்
49. சுன்னத் ஜமாத்
50. பாப்புலர் ஆப் இண்டியா
51. வின் டிவி தேவநாதன்
52. கோவை ராமகிருட்டிணன் - தந்தை பெரியார் திராவிடர் கழகம்