SHARE

Wednesday, June 10, 2015

``அவருக்கு தெரியும்`` அனந்தி - ``எனக்குத் தெரியாது`` கனிமொழி!




எழிலன் வழக்கு
விடுதலைப்புலிகள் அமைப்பின் மூத்த உறுப்பினர்கள் இலங்கை இராணுவத்திடம் சரணடைந்த விடயத்தில் தங்களுக்குள்ள தொடர்பு குறித்து தமிழக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியும், அவரது மகள் கனி மொழியும் உலகிற்கு உண்மையை தெரியப்படுத்தவேண்டும்
 என வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்து நாளிதழிற்கு அளித்துள்ள பேட்டியில் இதனை தெரிவித்துள்ள அவர் முள்ளிவாய்க்காலில் வைத்து கனிமொழியுடன் மேற்கொண்ட பேச்சுவார்த்தைகளிற்கு பின்னரே மே 16ம் திகதி 2009 இல்  காலை 8 மணியளவில் எனது கணவர்;இராணுவத்திடம் சரணடைந்தார்.

நான் இதனை தெரிவிப்பது இது முதற்தடவையல்ல, ஆனால் அவர்கள் தரப்பிலிருந்து இதுவரை எந்த பதிலுமில்லை, தமிழக முன்னாள் முதல்வரும் அவரது மகளும் இந்த விடயத்தில் தங்கள் மௌனத்தை கலைப்பதற்கான தருணமிது,அவர்கள் முழு உலகிற்கும் என்ன நடந்தது என்பதை தெரிவிக்கவேண்டும்  என அவர் தெரிவித்துள்ளார்.

சரணடைவதை தவிர அவரது கணவர் எழிலனிற்கு வேறு வழிகள் இருந்ததா என்ற  என அவரிடம் கேட்கப்பட்டதற்கு , அவரிடம் இரு சயனைட் குப்பிகள்
காணப்பட்டன,அவர் அதனை பயன்படுத்தியிருப்பார் என குறிப்பிட்டுள்ளார்.

தனது கணவர் கனிமொழியுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டவேளை தான் அருகிலிருந்ததாகவும், தனது தந்தையின் சார்பில் பதிலளித்த
கனிமொழி தனது கணவரை சரணடையுமாறு தெரிவித்ததாகவும்,சர்வதேச அளவில் பேச்சுவார்த்தைகள் இடம்பெறுவதால் சரணடைபவர்கள்
விடுவிக்கப்படுவார்கள் என அவர் குறிப்பிட்டதாகவும் அனந்தி குறிப்பிட்டுள்ளார்.

'யாரையும் இலங்கை அரசாங்கத்தின் சார்பில் அல்லது இந்திய அரசாங்கத்தின் சார்பில் சரணடையும்படி கூறும் அதிகாரம் எனக்கு இல்லை” தனது ஆலோசனையின் பேரிலேயே தமிழீழ விடுதலைப் புலிகளின் பிராந்திய தலைவர்களில் ஒருவராகவிருந்த எழிலன் (சசிதரன்) இலங்கை இராணுவத்தினரிடம் கரணடைந்ததாக அவரது மனைவி அனந்தி சசிதரன் முன்வைத்துள்ள குற்றச்சாட்டை, திராவிட முன்னேற்றக் கழகத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி நிராகரித்துள்ளார்.

'யாரையும் இலங்கை அரசாங்கத்தின் சார்பில் அல்லது இந்திய அரசாங்கத்தின் சார்பில் சரணடையும்படி கூறும் அதிகாரம் எனக்கு இல்லை. இந்த செய்தியின் பின்னணியில் யார் உள்ளார்கள் என்று எனக்கு தெரியாது' என்று, இந்தியாவிலிருந்து வெளியாகும் தி இந்து பத்திரிகைக்கு கனிமொழி எம்.பி
கூறியுள்ளார்.

'தனது கணவர் எழிலன், இலங்கை இராணுவத்தினரிடம் சரணடைவதற்கு தீர்மானம் எடுக்க முன்னர், செய்மதி தொலைபேசி மூலம் கனிமொழியுடன்
உரையாடியிருந்ததாக, இந்து பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டியொன்றின் போதும் முல்லைத்தீவு நீதவான் முன்னிலையில் சாட்சியளிக்கும் போதும்,
அனந்தி கூறியிருந்தார்.

அனந்தியின் இந்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் பதிலளித்துள்ள கனிமொழி எம்.பி, 'எனக்கு சசிதரன் யார் என்றே தெரியாது. ஏனென்றால், அவர்
எல்.ரீ.ரீ.ஈ.யின் முன்னணி தலைவர்களில் ஒருவர் அல்ல. செய்மதி தொலைபேசி மூலம் அவருக்கு ஆலோசனை கூறியதாகச் சொல்வது முற்றுமுழுதிலும் தவறானது.

`யுத்தம் அதி உச்சக்கட்டத்தில் இருக்கும் போது, ஒருவரை இலங்கை இராணுவத்திடம் சரணடையும்படி யாராவது கூறுவார்களா?' 
                                        என கேள்வி எழுப்பியுள்ளார்.

தொடரும்---------

India, Sri Lanka head to a win-win relationship

India, Sri Lanka head to a win-win relationship 《  Asian Age 17 Dec 2024  》 All the signs are pointing to the possibility of a major win for...