Monday 11 June 2012

ம.ஜ.இ.க: பெற்றோல் விலை உயர்வை எதிர்த்து பிரச்சாரப் பொதுக்கூட்டங்கள்.

சோனியா மன்மோகன் கும்பலே, பெட்ரோல் விலை உயர்வை உடனே திரும்பப் பெறு!


விபரம் சமரனில் : http://samaran1917.blogspot.co.uk/2012/06/blog-post.html


எண்ணெய் விலையைக் குறைக்கவும், சுதந்திர வர்த்தகத்தை உருவாக்கவும் அமெரிக்காவின் புதிய காலனி ஆதிக்கத்தையும் டாலர் ஆதிக்கத்தையும் முறியடிப்போம்!

இந்திய அரசே!

* அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தத்தை ரத்துச் செய்!

* ஈரான் உள்ளிட்ட எண்ணெய்வள நாடுகளுடன் சுதந்திர ஒப்பந்தம் செய்!

* டாலருக்கு மாற்றாக ரூபாய், யூரோ நாணய அடிப்படையில் வர்த்தகம் செய்!

* பெட்ரோலியப் பொருட்கள் மீதான விலை நிர்ணய அதிகாரத்தை தனியாரிடமிருந்து பறித்தெடு! அரசே விலை நிர்ணயம் செய்!

மத்திய, மாநில அரசுகளே!

* பெட்ரோலியப் பொருட்கள் மீது விலை என்ற பேரால் 40 சதவீதம் வரி விதிக்கும் கொள்கையைக் கைவிடு!

* எண்ணெய், எரிவாயு வளத்தின் மீதான தனியார் ஆதிக்கத்தை ஒழித்துக்கட்டு!  அனைத்தையும் அரசுடைமையாக்கு!

* உற்பத்தி வீழ்ச்சிக்கும் ரூபாய் மதிப்பு வீழ்ச்சிக்கும் காரணமான உலகமயக் கொள்கைகளைக் கைவிடு!

* எண்ணெய் ஆதிக்கத்தில் அமெரிக்க ஏகபோகத்தை எதிர்க்காமல், தரகுமுதலாளித்துவ வரிக்கொள்கையை எதிர்க்காமல், விலையைக் குறை என ஆளும்வர்க்கக் கட்சிகள் போடும் கூப்பாடு மக்களை ஏமாற்றவே!

எண்ணெய் விலையைக் குறைக்க – அமெரிக்காவின் புதியகாலனி ஆதிக்கத்தையும் இந்திய அரசின் சரணாகதிப் பாதையையும் எதிர்த்துப் புரட்சிகர, ஜனநாயக சக்திகள் ஒன்றுபடுவோம், போராடுவோம்!


அநுரா ஆட்சியில் செல்வினின் பனை அபிவிருத்தி சபைத் தலைவர் பொறுப்பு பறிப்பு!

அநுரா ஆட்சியில் செல்வினின் பனை அபிவிருத்தி சபைத் தலைவர் பொறுப்பு பறிப்பு! பனை அபிவிருத்தி சபைத் தலைவராக இரானியேஸ் செல்வின் அவர்களைப் பொறுப்ப...