SHARE

Sunday, September 22, 2019

வவுனியாவில் எட்டு வயது மாணவி மீது `பெண்ணின இம்சை`



தண்டனை வழங்க தந்தையார் அழைப்பு! அறைகூவல்!!

வவுனியா நெடுங்கேணி கிராமத்தில் உள்ள தமிழ்ப் பாடசாலை சுற்றாடலிலேயே இவ் இழி செயல்(21/22) இன்று இடம் பெற்றுள்ளது.

பாடசாலை முடிந்ததும் பெற்றோரிடம் கையளிக்காமல், நிர்வாகத்தால் அநாதரவாக விடப்பட்ட, மூன்றாம் வகுப்பு மாணவர்களில் ஒருவரே இந்தச் சிறுமி.

தனியாக வீடு செல்ல முயன்ற வேளையில் பாடசாலை சுற்றாடலில் கட்டிட வேலையில் ஈடுபட்டிருந்த கும்பலில் இருவர் இச் சிறுமியை `பெண்ணின இம்சை` செய்துள்ளனர்.

குழந்தை ஒருவாறு தப்பி ஒரு கிலோ மீற்றர் வரை ஓடிச் சென்று தன் தந்தையாரிடம் நடந்ததை விளக்கி கதறி அழுதுள்ளது.

இதன் பின்னணியில் குற்றவாளிகளுக்கு மக்களே தண்டனை அளிக்க வேண்டும், அதற்காக மக்கள் ஒன்று திரளவேண்டும் எனக் கோரி சிறுமியின் தந்தையார் வெளியிட்ட வீடியோ மேலே இணைக்கப்பட்டுள்ளது.

குற்றவாளிகளுக்கு மக்கள் தண்டனை அளிக்கவும், பாடசாலை நிர்வாகத்தை சீர் செய்யவும் சிறுமியின் பெற்றோருடன் மக்கள் ஒன்று சேர வேண்டும்.

இந்தக் குற்றவாளிகளுக்கு மட்டுமல்ல தமிழரை நிராயுதபாணிகளாக்கிய குற்றவாளிகளுக்கும் தண்டனை அளிக்க மக்கள் ஓரணி திரளவேண்டும்.

22-09-2019/ செய்தி அறிக்கை சுபா. 

Maduro in court- U.S. kidnapped Me

Maduro, making first court appearance, says U.S. ‘kidnapped’ him As the deposed Venezuelan president and his wife, Cilia Flores, grapple wit...