Tuesday 30 April 2024

2024 மே நாளில் சூளுரைப்போம்!

 


2024 மே நாள் வாழ்க!

உலக உழைக்கும் மக்கள், மாதர், தொழிலாளர் விவசாயிகள், ஒடுக்கப்படும் தேசங்களின் ஒப்பற்ற புரட்சிகர மே தினம் நீடூழி வாழ்க!!

இன்றைய சகாப்தத்தின் மாபெரும் புரட்சிகர வர்க்கமான பாட்டாளிவர்க்கம், என்றும் போல இன்றும் மனித குலத்தின் விடுதலைக்கான தலையான தீர்மானங்களை இயற்றும் நாள் இன்றாகும். எனினும் 2024 மே நாள் பல காரணங்களால் தனி விசேட முக்கியத்தும் பெற்று நிற்கின்றது.

இக்காரணிகள் சர்வதேச பிராந்திய உள்நாட்டு நிலைமகளில் செல்வாக்குச் செலுத்தி, அவற்றின் வர்க்கப் (அரசியல்) போராட்டத்தின் போக்கையும் பொதுத் திசை வழியையும் தீர்மானிக்கின்றன.

சூடான் யுத்தம், ரசிய-உக்ரைன் யுத்தம், பாலஸ்தீன படுகொலை யுத்தம், எண்ணற்ற எல்லைத் தகராறுகள், வணிகப் போர்கள், தேசிய ஒடுக்குமுறைகள்-உள் நாட்டு யுத்தங்கள், அந்நியத் தலையீடுகள்-ஆட்சிக்கவிழ்ப்புகள், தலைமை மற்றும்  தனி நபர் அழித்தொழிப்புகள், கறுப்புப் பட்டி கருங்காலிகளின் ஏவல் போலி பொது ஜன கிளர்ச்சிகள், வர்ணப் புரட்சிகள், அரபு வசந்தங்கள்.....என அரசியல் போர்க்களம் `களை கட்டி` நிற்கின்றது! 

போர் பிரதான போக்காகி, போர்த் தயாரிப்பு முன்னுரிமை பெறுவதாக ஆகி விட்டது,

பொருளாதாரத் துறையில் அந்நியக் கடன், பணவீக்கம்-விலைவாசி உயர்வு, வேலையின்மை போன்றவை கூர்மை அடையாத ஒரு நாடு இல்லை என்கிற அளவுக்கு இவை உலகப் பொருளாதாரத்தின் பொதுத் திசை வழியாகி, உற்பத்தி மந்தம் தொடர் நிகழ்வாகி விட்டது,

பலகட்சி அல்லது இரு கட்சி ஆட்சிமுறை- (சமாதான சகவாழ்வு நடத்தும்) ஒரு கட்சி முறை ஆகுதல், முதலாளித்துவ ஜனநாயகத்தின் அடி ஆதாரக் கோட்பாடான நீதித் துறையின் சுயாதீனம் மீது தலையீடு நடத்தப்பட்டு, சட்டம் ஒழுங்கு சீர்குலைக்கப்பட்டு, வாக்குரிமையும் தேர்தற் காலப் பண்டமாக மாற்றப்பட்டு, நாடாளமன்ற ஜனநாயகம் நடைமுறையில் காலாவதி ஆகியது,

ஐ.நா.சபை அதன் கிளை நிறுவனங்களான பாதுகாப்புச் சபை, மனித உரிமைகள் சபை, சர்வதேச குற்றவியல் நீதி மன்றம், International Atomic Energy Agency, உலகத் தொழிலாளர் கழகம் போன்ற மாபெரும் உலகப் பொது நிறுவனங்கள், அவை உருவாக்கப்பட்ட குறிக்கோள்களை காக்க இயலாத இடர்ப்பாடுகளைச் சந்தித்தல்,

இறுதியாக தொகுப்பாக இரண்டாம் உலப் போருக்குப் பின்னால் உருவாக்கி நிலை நிறுத்தப்பட்ட அனைத்து முறைமைகளும் நிலை குலைதல்.

எனினும் இவை  முதலாளித்துவ சமூகத்திலும், அதன் ஏகபோக  கட்டத்திலும் பொதுவாக நிகழ்பவையும் நிகழ்ந்தவையும் தான் என்பது உண்மைதான்.காலத்துக்கு காலம் இவை நிகழ்ந்த வண்ணம் தான் இருந்திருக்கின்றன, அவை முதலாளித்துவத்தின் விதியும் கூட.

ஆனால் இந்தத் தடவை இது அவற்றில் ஒன்றல்ல, அவை போன்ற ஒன்றுமல்ல. இதில் தான் இக்காலப்பகுதியின் வரலாற்று முக்கியத்துவம் அடங்கியிருக்கின்றது. 

இப்போதுள்ள நெருக்கடி மந்த நிலைக்கு அரச நிதிக் கொள்கைகளில் ஏற்படுத்தும் மாறுதல்களைக் கொண்டோ, அல்லது சமாதான பூர்வமாக ( WTO -World Trade Organisation ) சந்தையைப் பங்கிட்டுக் கொள்வதன் மூலமோ தீர்க்கப்படக் கூடிய ஒன்றாக இனியும் இல்லை.

சமாதானப் பங்கீடு முற்றிலுமாக முடிந்தொழிந்து முழு அளவிலான பங்கீட்டு (மூன்றாம் உலக)ப் போர் ஆரம்பிக்க இல்லையென்றாலும், பகுதியளவிலான ( பிரதேச, தேசிய, பிராந்திய), பங்கீடுகளின் பிரதான வழி முறை யுத்தம் என்பதாக ஆகிவிட்டது.இந்தப் போர் இது அமெரிக்க சோவியத் ரசிய இரட்டைத்துருவ உலக காலத்தின்(12 March 1947 – 3 December 1989) பனிப்போர் அல்ல இது நிஜப் போர் ஆகும்.

ஏன்?

சாதாரண வாழ்வில் ஒருவர் இன்னொருவரைக் காதலித்தாலோ அல்லது ஒருவர் மற்றொருவரை மணம் புரிந்தாலோ அவர்களுக்குள் சண்டை மூள நியாயம் இல்லை. ஆனால் ஒரு காதலரை இன்னொருவர் காதலித்தாலோ, அல்லது ஒரு குடும்பஸ்தரை மற்றொருவர் மணம் முடித்தாலோ சண்டை மூளும் சந்தர்ப்பம் உருவாகின்றது!

 மறுபங்கீடு இத்தகையது. ஏற்கெனவே ஒருவர் கையகப் படுத்திவிட்ட சந்தையை, அடுத்தவர் ஒருவர் அபகரிக்க முயலும்போது சண்டை மூளுகின்றது. அவ்வாறல்லாமல் இது வேறெதுவுமாக இருக்க இயலாது. 

இக்காலப் பொருளாதாரத்தின், அதன் நெருக்கடியின் தனிக் குறிப்பான அம்சம் உலக மறுபங்கீடே ஆகும். இவ்வாறு உலக மறுபங்கீடு இக்காலப் பகுதியை இயக்கும் பொது விதியாக உள்ளது.

குறிப்பிடத்தக்க அதன் குணக் கூறுகளைக் கொண்டு இக்காலப் பகுதியை ஈராக் யுத்தம் (20 Mar 2003 – 15 Dec 2011) முதல் இஸ்ரேல் யுத்தம் (07-ஒக்ரோபர்-2023 .........) மற்றும் அதன் தொடர்ச்சியான காலப் பகுதியாகக் கொள்ளலாம். இப்போக்கு ஒரு மூன்றாம் உலகப் போரிலேயே மறு முனைக்குச் செல்லும்.

பொருளாதாரத் துறை

பொருளாதாரத் துறையைப் பொறுத்த மட்டில் இக்காலப் பகுதியின் குணாம்சம், ஏகாதிபத்திய அபரிமித உற்பத்தி நெருக்கடி, உலக மயத்தின் படு தோல்வியோடு மீள இயலாத நெருக்கடியாக மாறியதில் வெளிப்படுகின்றது.இந்த மீள இயலாத நெருக்கடியில் இருந்து மீள்வதற்குத்தான் `மறு பங்கீடு` அவசியமாகின்றது.

`மொத்தத் உள்நாட்டு உற்பத்தி` 

அதிகார பூர்வ புள்ளி விபரங்கள், வரை படங்கள் என்னவோ எப்போதும் ஆகா ஓகோ என்றுதான் உள்ளன.உண்மை நிலைமையில் மக்களின் வாழ்க்கை நிலைமை அவ்வாறு இருப்பதில்லை.

முதலாளிகள் தமது கையில் இருந்த ஆரம்ப மூலதனத்தின் ரகசியம், ஆதித் திரட்சி என்று கூறினார்கள். கார்ல் மார்க்ஸ் ஆதித் திரட்சியின் ரகசியம் ஊதியம் அளிக்கப்படாத உழைப்புச் சக்தி என்கிற உபரி மதிப்புத் தத்துவம் மூலம் இந்த வரலாற்றுப் பொய்மையை `அரசியல் பொருளாதார` விஞ்ஞானம் மூலம் முறியடித்து அம்பலமாக்கினார்.

அதிகார பூர்வ புள்ளிவிபரங்களும் `ஆதித் திரட்சி` போன்றது தான்.இரண்டாம் உலகப் போருக்குப் பின்னால், (உள் நாடுகளின் ஒட்டு மொத்தத் தொகுப்பான) உலகப் பொருளாதாரம் என்பது `மொத்தத் உள்நாட்டு உற்பத்தி` என்கிற மந்திரக் கோலால் அளவிடப் படுகின்றது. 

இந்த `மொத்தத் உள்நாட்டு உற்பத்தி` என்றால் என்ன?

ஒரு நிலப்பகுதியின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (Gross Domestic Product அல்லது GDP) என்பது, அப்பகுதியின் பொருளாதாரத்தின் அளவை அறிய உதவும் அளவைகளுள் ஒன்றாகும். 'ஒரு குறிப்பிட்ட காலப் பகுதியுள்,  ஒரு நிலப்பகுதியின் எல்லைக்குள் உற்பத்தி செய்யப்படுகின்ற மொத்தப் பொருட்களினதும், சேவைகளினதும் சந்தைப் பெறுமதியே மொத்த உள்நாட்டு உற்பத்தி` என வரைவிலக்கணம் கூறப்படுகின்றது.

பொதுவாக இந் நிலப்பகுதி ஒரு நாட்டின் எல்லைப் பகுதியாகவும், காலப்பகுதி ஒரு வருடமாகவும் உள்ளது.

இது சந்தை நலன்களுக்கான அளவையே தவிர சமூக நலனுக்கான அளவை அல்ல. இதனால் இதன் உயர்வு (வளர்ச்சி Growth) எவ்வகையிலும் சமூக வளர்ச்சியை குறித்து நிற்பது இல்லை. `` உற்பத்தி செய்யப்படுகின்ற மொத்தப் பொருட்கள்`` என்பது அரசியல் பொருளாதாரத்தில் அபரிமித உற்பத்தி, சேவைகள் என்பது பிரதானமாக பண்ட விநியோகம்,மற்றும் நிதி நிர்வாகம் சார்ந்த வலையமைப்பே ஆகும். 

ஆக மொத்த உள்நாட்டு உற்பத்தி என்பது ஏகாதிபத்திய அபரிமித உற்பத்தியின் வளர்ச்சியை மட்டுமே அளவிடுகின்றது.


தனிப்பட்ட ஒரு நாட்டின்  `மொத்த உள்நாட்டு உற்பத்தி` என்பது கூட அந் நாட்டுக்குள் இயங்கும் அந்நிய உற்பத்தியும் இணைந்ததாகும். `இந்தியாவில் உற்பத்தி செய்யுங்கள்` (Make in India) என பாய் விரித்து செய்யும் அனைத்து அந்நிய உற்பத்திகளும் இந்தியாவின்  `மொத்த உள்நாட்டு உற்பத்தி` யே ஆகும்! இந்தியா வளராதா என்ன!

இந்த வளர்ச்சி அந்நிய வளர்ச்சியாக இருக்கையில், இதன் ஏற்ற இறக்கங்கள் என்பது சந்தை நடவடிக்கைகளின் ஏற்ற இறக்கங்களாகவே  தவிர்க்க இயலாமல் உள்ளன.

உற்பத்தி முறையின் நெருக்கடிகளை இந்த மந்திரக் கோல் மதிப்பீடு செய்வதில்லை.

ஒரே ஒரு உதாரணம்: 

கடந்த 20 ஆண்டுகளில் உலக மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சியை கீழே காணும் வரைபடம் காட்டுகின்றது.


உலகப் பொருளாதாரம் அசுரப் பாய்ச்சலில் எகிறிக் குதிக்கின்றது!
இந்தக் காலப் பகுதியில் ஈராக், இஸ்ரேல் ஆகிய இரு பெரும் போர்கள் மூண்டன, சூடான்,ஈழம், உக்ரைன் என மொத்தம் 130 இற்கு மேற்பட்ட யுத்தங்கள் இதே 20 (2003-2023) ஆண்டுகளில் தான் ``வளர்ந்தன`` !

உலகப் பொருளாதாரம் சீராக இவ்வாறு வளரும் காலப் பகுதியில், உலகம் சீராக `வளர்ச்சி` அடைந்த அதே காலப் பகுதியில் 130 யுத்தங்கள் எங்கனம் வளர்ந்தன என்பதை மொத்த உள்நாட்டு உற்பத்தி (Gross domestic product அல்லது GDP) விளக்கவில்லை. இது யுத்தத்தின் கதை தான்!

மானுட நெருக்கடி அனைத்தினதும் ஒட்டுமொத்தமான ஒரு வெளிப்பாடாக அமைவது இடப் பெயர்வு அல்லது அகதித் தஞ்சம். இது குறித்த விரிவான தவல்களை UNHCR’s Refugee Population Statistics Database தருகின்றது.




இவ்வாறு அரசியல் நெருக்கடியும் சரி பொருளாதார நெருக்கடியும் சரி உலக மறுபங்கீட்டுப் போரைச் சுற்றியே வலம் வருகின்றன. அல்லது அதற்கமைய செப்பனிடப்படுகின்றன.

இதன் தவிர்க்க இயலாத மற்றொரு விளைவே பாசிசமாகும்.

இப்பாசிசமும் கூட இக்காலப் பகுதிக்குரிய தனித் தன்மைகளைக் கொண்டிருக்கின்றது.

Russia-China: Two countries' coordination 'propelling establishment of a fair multipolar world order'

  Putin says China clearly understands roots of Ukraine crisis Two countries' coordination 'propelling establishment of a fair multi...