SHARE

Thursday, February 03, 2011

Day of departure march February 4, 2011 Egypt

மனித நாகரீகத்தின் மாபெரும் சின்னங்களில் ஒன்றான எகிப்திய தேசத்தை தங்கள் தோள்களில் சுமக்கும் புதிய இளம் தலைமுறையே,


விடிகாலை உனது விடுதலைப் புரட்சியில் தீர்மானகரமான பங்காற்றப்போகின்றது.

எக்காரணம் கொண்டும் விடுதலைச் சதுக்க முற்றுகையை விட்டுக் கொடுக்காதீர்கள்!

அதைக் காக்க முடியும் என்பதை தாங்கள் நிரூபித்துள்ளீர்கள். தொடருங்கள்!

இங்கே நீங்கள் ஊன்றி நிற்கிற வரையில் அது அமெரிக்காவைக் குலுக்கும், உலகைக் குலுக்கும், முபாரக்கை உங்கள் காலடியில் வீழ்த்தும்.

இந்த முற்றுகை சுயெஸ் கால்வாயை சுற்றி வளைத்தால் அமெரிக்காவின் முதுகெலும்பு முறிந்துவிடும்!

அடுத்த காலடியை வைக்க முன் உங்கள் சொந்தப்பலத்தை நீங்கள் சரிவர மதிப்பீடு செய்யவேண்டும்.

உங்கள் பலம் என்பது உங்களுக்குப் பின்னால் எந்த நிலைமையிலும் பின்வரத்தயாராக இருகின்ற மக்கள் திரளாகும்.மக்கள் திரள் மட்டுமேயாகும்.

(எகிப்திய இராணுவத்திலும், ஏகாதிபத்திய வாதிகளின் ஜனநாயக சீர்திருத்த நாடகங்களிலும் தாங்கள் சலனப்படக்கூடாது.எதிர்க் கட்சிகளையும் கவனம் இன்றி நம்பக்கூடாது.)

விடுதலைச் சதுக்க முற்றுகையைப் பாதுகாத்துக்கொள்வதற்கான மக்கள் பலத்தில் இருந்து தங்களைத் தனிமைப்படுத்தும், பலவீனப்படுத்தும் எந்த சாகச முயற்சிகளிலும் தாங்கள் இறங்கக் கூடாது.

இவை எமது தோழமையான ஆலோசனைகள்.

தங்கள் ஜனநாயகக் கிளர்ச்சி வெற்றி பெற புரட்சிகர வாழ்த்துக்கள்!

என்றும் தோழமையுடன்

புதிய ஈழப் புரட்சியாளர்கள்.

Boston Lanka News: Feb. 3, 2011

How Nato is preparing for war in the Arctic

How Nato is preparing for war in the Arctic  Nordic nations hope US fixation on Greenland will spur alliance to catch up with years of Russi...