SHARE

Tuesday, December 15, 2015

Climate Accord Is a Healing Step, if Not a Cure



Climate Accord Is a Healing Step, if Not a Cure
By JUSTIN GILLISDEC. 12, 2015

LE BOURGET, France — After the stomping and cheering died down, and the hugs and toasts ended, a question hung in the air as the climate conference came to a close: What does the new deal really mean for the future of the Earth?

Scientists who closely monitored the talks here said it was not the agreement that humanity really needed. By itself, it will not save the planet.

The great ice sheets remain imperiled, the oceans are still rising, forests and reefs are under stress, people are dying by tens of thousands in heat waves and floods, and the agriculture system that feeds seven billion human beings is still at risk.

And yet 50 years after the first warning about global warming was put on the desk of an American president, and quickly forgotten, the political system of the world is finally responding in a way that scientists see as commensurate with the scale of the threat.

The agreement reached here on Saturday will, if faithfully carried out, achieve far larger cuts in emissions than any previous climate accord. It will reduce, without eliminating, the risk that runaway climate change might render parts of the Earth uninhabitable. It will lessen somewhat the possibility of a collapse of one of the ice sheets, which would cause a rise in the sea of 20 feet or more.

The deal, in short, begins to move the countries of the world in a shared direction that is potentially compatible with maintaining a livable planet over the long term.

Hans Joachim Schellnhuber — a pioneering environmental scientist, chairman of the German government’s advisory committee on climate change, and climate adviser to Pope Francis — declared on Saturday that “this is a turning point in the human enterprise, where the great transformation towards sustainability begins.”

Perhaps the most important part of the deal is that it explicitly recognizes that countries were not ambitious enough in the emissions cuts they pledged ahead of the Paris negotiations, pledges that were incorporated into the document. The agreement, in effect, criticizes itself for not doing enough.

To compensate, the deal sets up a schedule of regular review that will encourage countries to raise their goals over time. It envisions a tighter system to monitor whether the nations are keeping their promises — though how tough that will really be was put off to future debates.

In interviews, scientists with long experience studying climate change, and a long history of being discouraged by the politics of the issue, said they were heartened by the cooperative tone in Paris.

But for the deal to mean anything, they said, the celebratory moment must give way immediately to an era in which intensive efforts are made to squeeze emissions out of the world economy. That task will fall largely to businesses and investors, operating under emissions-reduction policies that countries have pledged to put into effect by 2020.

Emissions of greenhouse gases — primarily of carbon dioxide from the burning of fossil fuels and the destruction of forests — have been rising for decades, interrupted only briefly by economic downturns. They stalled this year, projected to fall 0.6 percent in part because of the softness of the Chinese economy, in what some experts hope is an early sign of things to come.

Yet 2015 will nonetheless be the hottest year in recorded history, breaking a mark set only one year earlier. All 10 of the hottest years in a global record stretching to 1880 have occurred since 1998. No one under 30 has ever lived through a month of global temperatures below the 20th-century average.

Since an agreement in Cancun in 2010, the official goal of international climate policy has been to limit the warming of the Earth to 2 degrees Celsius, or 3.6 Fahrenheit, above the level that prevailed before the Industrial Revolution. With the rapid warming that has occurred since 1950 as a result of industrial emissions, the planet is already nearly halfway there.

The Paris deal sets a more ambitious target, declaring that the global average temperature rise ought to be kept “well below” 2 degrees Celsius, and that countries should try go further, limiting warming to 1.5 degrees Celsius.

As small as that difference might sound, as an average warming over the surface of an entire planet, it is actually substantial. Scientists say it could make the difference, for example, between saving much of the Greenland ice sheet and losing it.

The research organization Climate Central found recently that 280 million people live on land that could eventually be submerged by the sea if warming were allowed to reach the higher number. If it were kept to the lower target, that number would be cut by more than half, to 137 million people.

Yet action on global warming has been delayed for so long, and emissions allowed to rise so high, that reaching either target will be exceedingly difficult.

Scientists say that limiting warming to the higher target would require that industrial emissions of greenhouse gases come to an end by roughly 2050, and to stay below the lower target, by about 2030.

But coal-burning power plants are being built today that can be expected to operate well past 2050, and fossil-fuel companies are spending hundreds of billions a year looking for new reserves that cannot be burned if either target is to be met.

A serious campaign to meet the more ambitious goal would mean that in less than two decades, the nations of the world would likely have to bring an end to gasoline cars, to coal- or gas-burning power plants in their current form, and to planes or ships powered by fossil fuels.

Countries have offered no plans that would come remotely close to achieving either goal, and, given the current state of technology, it is difficult to see how they could be achieved. That led some scientists on Saturday to dismiss the tighter temperature targets as feel-good measures with no real meaning.

And yet, the tighter targets do throw the seriousness of the situation into sharp relief. Experts hope that, by highlighting the gulf between humanity’s stated goals and its plans to achieve them, the Paris deal will launch a more intensive push to figure out how it might actually be done.

“We lost a lot of time squabbling over the science,” Dr. Field said. “We lost a lot of time that could have been used trying out innovative solutions. Now, we have a lot of experimentation still to do.”

A version of this news analysis appears in print on December 13, 2015, on page A1 of the New York edition with the headline: Healing Step, If Not a Cure. Order Reprints| Today's Paper|Subscribe

காணாமல் ஆனோர் - கதறியழும் உறவினர்.




ஈபிடிபியினரும் இராணுவத்தினருமே எனது மகனை கடத்தினர்! பொய் சொன்ன டக்ளஸ் தேவானந்தா
[ செவ்வாய்க்கிழமை, 15 டிசெம்பர் 2015, 03:20.41 PM GMT ]

அம்மா.. இங்கே பாருங்கள் நான் இங்கே இருக்கிறேன்... என என்னுடைய பிள்ளை ஈ.பி.டி.பி முகாமிற்குள் இருந்து கத்தினான். என்னுடைய பிள்ளையை பார்க்க ஓடிச் சென்றபோது அங்கு நின்ற படையினர் துப்பாக்கியை கொண்டு என்னை சுடுவதற்கு துரத்தினார்கள் என அராலி செட்டியார் மடத்தைச் சேர்ந்த இராசேந்திரம் துளசிமலர் என்ற தாய் கதறியழுது சாட்சியமளித்துள்ளார்.
காணாமல்போனவர்களை கண்டறிவதற்கான ஜனாதிபதி ஆணைக்குழு அமர்வுகள் இன்றைய தினம் சங்கானை பிரதேச செயலகத்தில் நடைபெற்றிருந்த நிலையில் குறித்த சாட்சியம் வழங்கப்பட்டிருக்கின்றது.

குறித்த சாட்சியத்தில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

2007.05.12ம் திகதி பிரதேச செயலகத்திற்கு தந்தையுடன் கடவுச்சீட்டு எடுப்பதற்காக சென்றுவிட்டு திரும்பிக் கொண்டிருந்தபோது 252-3286 என்ற இலக்கம் பொறிக்கப்பட்ட வெள்ளை வாகனம் மற்றும் மோட்டார் சைக்கிளில் வந்த படை யினரும், ஈ.பி.டி.பியினரும் வட்டுக்கோட்டை கண்ணகை அம்மன் ஆலயத்திற்கு முன்பாக வைத்து எனது மகனை பிடித்துச் சென்றார்கள்.



பிடிக்கும்போதே என் பிள்ளையை வீதியில் வைத்து மூர்க்கத்தனமாக தாக்கியே இழுத்துச் சென்றார்கள். அதில் வந்திருந்த ஈ.பி.டி.பியினரை எமக்கு தெரியும். பின்னர் நான் மானிப்பாய் ஈ.பி.டி.பி முகாமுக்குச் சென்றேன். அங்கே நின்றவர்கள் தாங்கள் பிடிக்க வில்லை. என கூறிவிட்டார்கள்.

மேலும் பிள்ளை வேண்டுமென்றால் கடவுளை கும்பிடுங்கள் எனவும் கூறினார்கள். பின்னர் நான் யாழ்ப்பாணத்திலுள்ள ஈ.பி.டி.பி முகாமிற்கு வந்தபோது நான் வந்திருப்பதை அறிந்த எனது மகன் பெரும் சத்தமாக கதறியழுது அம்மா நான் இங்கே இருக்கிறேன் என கத்தினான்.

நான் உள்ளே செல்ல முற்பட்டபோது அங்கு நின்ற படைசிப்பாய் துப்பாக்கியால் என்னை சுடுவதற்கு வந்தான். பின்னர் நான் ஈ.பி.டி.பியின் யாழ்ப்பாண பொறுப்பாளர் என இருந்த சில்வேஸ்திரி அலென்டினை சந்தித்து சம்பவத்தை கூறினேன். அப்போது ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் தங்கள் அலுவலகத்திற்கு வரும்படியும் பார்க்கலாம் என்றும் கூறினார்கள்.

பல மாதங்களாக அந்த முகாமுக்கு நடந்தேன். எந்த பயனும் இல்லாமல். டக்ளஸ் தேவானந்தாவை கொழும்பில் சந்தித்தேன். அப்போது அவரிடம் விடயத்தை சொன்னபோது உங்கள் மகன் வட்டுக்கோட்டை பொலிஸ் ஊடாக ஒப்படைக்கப்பட்டதாக கூறிவிட்டார்.

அவர் சொன்னது பொய். பிள்ளை விடுவிக்கப்படவேயில்லை. பின்னர் 5 வருடங்களுக்கு முன்னர் கண்டியில் வைத்தியசாலை ஒன்றில் படையினருடன் எனது மகன் நிற்பதை கண்டதாக ஒருவர் கூறினார்.

ஆனால் அவருக்கு கிட்டச் செல்ல முடியவில்லை. எனவும் அவர் கூறிவிட்டார். எனவே எனது மகன் உயிருடன் இருக்கிறான். அவனை மீட்டுக் கொடுங்கள் என ஆணைக்குழு முன்னிலையில் பெரும் சத்தமிட்டு கதறியழுது சாட்சியமளித்தார் அவர்.
===============
இராணுவத்தின் இரகசிய முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார் எனது கணவர்! - மீட்டுத்தருமாறு கதறியழுத மனைவி
[ புதன்கிழமை, 16 டிசெம்பர் 2015, 03:28.17 AM GMT ]

இராணுவத்தினருடைய இரகசிய முகாம்களை விசாரணை செய்யுங்கள். அதில்தான் எனது கணவர் உள்ளார். இரகசிய முகாம்களை விசாரணை செய்தால் எனது கணவரைக் கண்டு பிடிக்கலாம். இவ்வாறு யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி ஆணைக்குழு முன் நேற்றுக் கதறியழுதவாறு சாட்சியம் அளித்தார் பெண் ஒருவர்.

யாழ்.சங்கானை பிரதேச செயலகத்தில் நேற்று நடைபெற்ற காணாமல் போனோரைக் கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழு அமர்வில் சாட்சியம் அளிக்கும் போதே அந்தப் பெண் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

எனது கணவர் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்த போதே இராணுவத்தினரால் பிடித்துச் செல்லப்பட்டார். அவருடன் அவருடைய நண்பர்களும் இராணுவத்தால் பிடிக்கப்பட்டார்கள். எனது கணவரைப் பிடித்து 5 மாதங்களில் அவர் வவுனியா வைத்தியசாலைக்கு இராணுவத்தினரால் கொண்டுவரப்பட்டார். நான் கண்டேன்.

ஆனால், வைத்தியசாலையில் சென்று அங்கு சிகிச்சை பெற்றவர்களின் விவரத்தில் பார்த்தால் அவருடைய விவரங்கள் எதுவும் இல்லை. இராணுவத்தால் கொண்டு வரப்படுபவர்களை வைத்தியசாலையில் பதியமாட்டார்கள். இராணுவத்தினர் விவரங்களைக் கொடுக்க மாட்டார்கள். எனது கணவரை இராணுவத்தினர்தான் வைத்திருக்கின்றார்கள்.

எனது கணவருடன் இராணுவத்தால் பிடிக்கப்பட்டு காணாமல்போன ஒரு நண்பர் அண்மையில் திரும்பிவந்து தனது மனைவியுடன் இணைந்துள்ளார். நான் அவரிடம் நேரடியாகச் சென்று விசாரித்தேன். அப்போது அவர், ''எங்களை திருகோணமலையில் உள்ள ஓர் இரகசியமான முகாம் ஒன்றில்தான் இராணுவத்தினர் அடைத்து வைத்திருந்தார்கள்.

ஆனால், அங்கு யார் யார் இருக்கின்றார்கள் என்ற விவரம் எனக்குத் தெரியாது. எனக்குப் பக்கத்தில் யார் இருக்கின்றார் என்றே எனக்குத் தெரியாது. அப்படித்தான் இராணுவத்தினர் எங்களை வைத்திருந்தார்கள் என்று கூறினார்.

அவருடன்தான் எனது கணவரையும் இராணுவம் பிடித்துச் சென்றது. குறித்த இராணுவத்தினருடைய இரகசியமான தடுப்பு முகாம்களில் ஏதோ ஒன்றில்தான் எனது கணவர் உள்ளார்.

அந்தத் தடுப்பு முகாம்கள் மீது விசாரணைகளை மேற்கொண்டால் எனது கணவரைக் கண்டுபிடிக்கலாம் என்றார்.

``பிடுங்கப்படும்`` அதிகாரப் பகிர்வு!

மாகாணசபையின் அதிகாரங்களைப் பிடுங்குகிறது மத்திய அரசு – வட மாகாண முதல்வர் குற்றச்சாட்டு
DEC 16, 2015 | 0:33by யாழ்ப்பாணச் செய்தியாளர் செய்திகள்

மாகாணசபைகளிடம் இருந்து அதிகாரங்களைப் பறிக்கும் முயற்சியில் மத்திய அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாக விசனம் வெளியிட்டுள்ள வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், மத்திய அரசாங்கம் முன்வைத்துள்ள கிராம இராஜ்ஜியத் திட்டம் மற்றொரு அதிகாரப் பறிப்பு முயற்சி என்றும் விமர்சித்துள்ளார்.

வடமாகாண சபையின் வரவு செலவுத்திட்டத்தை நேற்று அவையில் சமர்ப்பித்து உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறினார்.

“கடந்த ஆண்டு நிதி ஒதுக்கீட்டின் போது எனது உரையில் வடமாகாணத்தின் அப்போதைய நிலை பற்றியும் பல ஆண்டுகள் கடந்தும் போரினால் ஏற்பட்ட தாக்கங்களிலிருந்து எமது மக்கள் இன்னமும் முற்றுமுழுதாக விடுபடவில்லை என்ற கருத்தையும் தெரிவித்திருந்தேன்.

தற்போதும் அந்த நிலைமைகளில் பாரிய மாற்றங்கள் எதுவும் ஏற்பட்டுவிடவில்லை.  போரினால் பலவிதங்களில் பாதிக்கப்பட்ட எமது மக்கள் வீடுகளை இழந்து, சொத்துக்களை இழந்து, குடும்பத் தலைவர்களை இழந்து, பிள்ளைகளை இழந்து, பெற்றோர்களை இழந்து, உடல் அங்கங்களைப் பறிகொடுத்து நிர்க்கதியாய் நிற்கின்றார்கள்.

மேலும் காணாமல்போனோரின் குடும்பத்தினர், சந்தேகத்தின் பேரில் சிறையில் வாடுபவர்களின் குடும்பங்கள் என பலதரப்பட்ட மக்கள் தமது குறைகளை தினமும் எம்மிடம் தெரிவித்தவாறு உள்ளனர்.

அதே நேரம் வெளிநாட்டுத் தூதுவர்கள், தூதரக அதிகாரிகள், அரச சார்பற்ற நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்கள் எனப் பல மட்டங்களில் உள்ளவர்கள் எம்மை அணுகி வடமாகாண சபையினதும் இங்கு வாழ்கின்ற மக்களினதும் நிலைமைகள் பற்றித் தினமும் ஆராய்ந்த வண்ணம் உள்ளனர்.

ஆனாலும் இதுவரை குறிப்பிடக் கூடியளவு முன்னேற்றங்கள் எதுவும் ஏற்படவில்லை என்றே குறிப்பிட வேண்டும்.

இப்பகுதியில் மத்திய அரசினால் மேற்கொள்ளப்படுகின்ற அல்லது மேற்கொள்ளப்பட இருக்கின்ற அபிவிருத்தித் திட்டங்கள் பல எமது மக்களுக்கு நன்மை பயப்பதைவிட தென் பகுதி மக்களுக்கு நன்மை வழங்கும் திட்டங்களாகவே காணப்படுகின்றன.

அத்துடன் புதிய அரசாங்கத்தினது செயற்பாடுகள் மேம்போக்காக நல்லெண்ண சமிக்ஞைகளை  வெளிப்படுத்துவதாகக் காணப்படுகின்ற போதிலும் மறைமுகமாக மாகாணசபைகள் மீதான கட்டுப்பாடுகளைத் தொடர்ந்தும் பேணுகின்ற வகையில்த் தான் காணப்படுகின்றன.

அத்துடன் மாகாணசபைக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் குறைக்கும் வகையிலும் மத்திய அரசாங்கத்தினது நேரடிக் கட்டுப்பாடுகளை அதிகரிக்கக் கூடிய வகையிலுமான மறைமுகத் திட்டங்களை அமுல்படுத்த முற்படுவதைக் காணக்கூடியதாக உள்ளது.

அண்மையில் மத்திய அரசாங்கத்திடமிருந்து கிராம இராஜ்ஜியம் என்ற புதிய திட்டத்திற்கான வரைவு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் மூலம் மத்திய அரசாங்கத்தின் நேரடிக் கட்டுப்பாட்டுக்குள் வருகின்ற கிராம மற்றும் மாவட்ட மட்டத்திலான குழுக்களே சகல அபிவிருத்திச் செயற்திட்டங்களையும் தீர்மானித்து செயற்படுத்துகின்ற அதிகாரத்தினை கொண்டுள்ளதாகக் காணப்படுகின்றன.

இது மாகாணசபைகளைப் புறந்தள்ளி மத்திய அரசு தனது நேரடிச் செல்வாக்கை பிரயோகிக்க முற்படுகின்ற ஓர் புதிய வடிவிலான திட்டமாகக் கருத வேண்டியுள்ளது.

இவ்வாறு மத்திய அரசாங்கம் ஒவ்வொரு விடயத்திலும் தனது பிடியை இறுக்க முற்படுகின்றதே தவிர தளர்த்த முற்படவில்லை. அதிகாரப் பரவலாக்கத்திற்குப் பதில் அதிகார மையமாக்கலையே இன்றைய அரசாங்கம் கடைப்பிடிக்க எத்தனிப்பது போல் தெரிகிறது.

கடந்த காலத்தில் எம் மீது திணிக்கப்பட்டிருந்த ஆளுனரின் கட்டுப்பாடுகள் பிரதம செயலாளரின் ஒத்துழையாமை போன்ற தடைகளில் இருந்து நாம் இப்போது விடுபட்டுள்ள போதிலும் எமது செயற்பாடுகளை செயற்திறனுடன் முழுமையாக நிறைவேற்றுவதற்கு முடியாமல் உள்ளது.

பல வழிகளில் மத்தியின் செல்வாக்கை மேம்படுத்தவும் மாகாணத்தைப் புறக்கணிக்கவுமே நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்பதே உண்மையாக இருக்கின்றன.

மேலும் அரச அலுவலர்களின் உளப்பாங்கில் மாற்றங்களைக் கொண்டு வருவதற்கு நாம் இன்னமும் கடுமையாக உழைக்க வேண்டியுள்ளது. மாற்றங்களை நடைமுறைப்படுத்தவும் நாங்கள் இவ்வருடம் பின்நிற்கப் போவதில்லை என்பதை இங்கு கூறிவைக்கின்றேன்.

மத்திய அரசினது மன நிலைமைகளிலும் மாற்றங்கள் ஏற்பட்டு எமது மக்களின் தேவைகளைப் புரிந்து கொண்டு வடமாகாண அரசிற்கு நிலைமைகளிலும் மாற்றங்கள் ஏற்பட்டு எமது மக்களின் தேவைகளைப்புரிந்து கொண்டு வடமாகாண அரசிற்கு அனுசரணையாக எமது மக்களுக்கான அடிப்படை வசதிகளையும் வாழ்வாதார தேவைகளுக்குமான உதவிகளையும் புரிய அவர்கள் முன்வருவார்கள் எனவும் நம்புகின்றேன்.

எம்மிடையே உள்ள அனைத்து கருத்து வேறுபாடுகளையும் மறந்து எமது மக்களின் விடிவிற்காக 2016ல் அனைவரும் கைகோர்த்துப் பாடுபடுவோம் என இச்சந்தர்ப்பத்தில் உங்கள் அனைவரையும் விளித்து எனது ஆரம்ப உரையை நிறைவு செய்து 2016ம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்ட அறிக்கையை சமர்ப்பிக்க விழைகின்றேன்.” என்று அவர் தெரிவித்தார்.

அதேவேளை, அடுத்த ஆண்டு செலவினங்களுக்காக வடக்கு மாகாணசபைக்கு 7,978.03 மில்லியன் ரூபாவை ஒதுக்குமாறு கேட்ட போதிலும், மத்திய அரசாங்கம் 3,199 மில்லியன் ரூபாவை மட்டுமே ஒதுக்கியுள்ளதாகவும் அவர் விசனம் தெரிவித்துள்ளார்.

நல்லாட்சியில் கருத்துச் சுதந்திரத்துக்குப் போராடும் TNA

குரோதப் பேச்சுக்குத் தண்டனை விதிக்கும் சட்டமூலத்தை விலக்குமாறு கூட்டமைப்பு கோரிக்கை
DEC 15, 2015 | 13:15by கொழும்புச் செய்தியாளர் செய்திகள்

இனவாதம், மதவாதம் போன்றவற்றைத் தூண்டும் வகையில், குரோதமாகப் பேசுவதை குற்றமாகப் பிரகடனம் செய்யும் சட்டத்திருத்தத்தை விலக்கிக் கொள்ள வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

குரோதப் பேச்சுகளுக்குத் தண்டனை விதிக்கும் வகையில், குற்றவியல் திருத்தச் சட்டமொன்றை சிறிலங்கா அரசாங்கம் நாடாளுமன்றத்தில் முன்வைத்துள்ளது.

இந்த சட்டம் அரசியலமைப்புக்கு எதிரானது என்றும், அரசியலமைப்பின் 14ம் சரத்தில், கூறப்பட்டுள்ள கருத்துச் சுதந்திரம் இந்த புதிய சட்டத்தின் மூலம் முடக்கப்படுவதாகவும் கூட்டமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

1887ம் ஆண்டு குற்றவியல் சட்டத்தில் திருத்தங்களைச் செய்யும் வகையில், இந்த புதிய திருத்தச்சட்ட யோசனையை நாடாளுமன்றத்தில் அரசாங்கம் சமர்ப்பித்துள்ளது.

ஆனால், புதிய திருத்தச்சட்டயோசனை பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் இரண்டாம் பிரிவிற்கு அமைவான வகையிலேயே காணப்படுகிறது.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் இரண்டாவது பிரிவைப் பயன்படுத்தி , கடந்த காலங்களில் தமிழ், முஸ்லிம் மக்களை கடந்த கால அரசாங்கங்கள் ஒடுக்குமுறைக்கு உட்படுத்தி வந்தன.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் இரண்டாம் பிரிவின் கீழேயே,  ஊடகவியலாளர் ஜே.எஸ். திசநாயக்கத்துக்கு 20 ஆண்டு கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதுடன், மத்திய மாகாணசபை உறுப்பினர் அசாத் சாலி கைது செய்யப்பட்டிருந்தார்.

இந்த நடவடிக்கைகள் கடந்த காலங்களில் அனைத்துலக அளவில் கண்டனங்களை ஏற்படுத்தியிருந்தது.

இந்த நிலையில், இதனையொத்ததாக, குற்றவியல் சட்டத்தின் ஓர் பிரிவாக குரோதப் பேச்சு குறித்த சட்டம் அறிமுகம் செய்யப்படுவதனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு  வன்மையாக எதிர்க்கிறது.

நாட்டின் அனைத்து குடிமக்களினதும் கருத்து, பேச்சு மற்றும் ஊடக சுதந்திரத்தை உறுதி செய்ய வேண்டியது மிகவும் அவசியமானது.

பயங்கரவாத தடைச் சட்டத்தை ரத்து செய்து, அனைத்துலக தரத்திலான பயங்கரவாத எதிர்ப்பு சட்டமொன்று அறிமுகம் செய்பய்பட வேண்டுமென, சிறிலங்காவும் இணை அனுசரணை வழங்கிய ஐ.நா மனித உரிமைகள் பேரவைத் தீர்மானத்தில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறான பின்னணியில் கருத்து, பேச்சு மற்றும் ஊடக சுதந்திரத்தை ஒடுக்கும் வகையில் அரசாங்கம் குற்றவியல் சட்டத்தில் திருத்தங்களைச் செய்வது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

India, Sri Lanka head to a win-win relationship

India, Sri Lanka head to a win-win relationship 《  Asian Age 17 Dec 2024  》 All the signs are pointing to the possibility of a major win for...