Friday, 22 January 2010

பிரித்தானியாவில் தமிழீழத் தனியரசுக்கான கருத்துக்கணிப்பு

பிரித்தானியாவில் தமிழீழத் தனியரசுக்கான கருத்துக்கணிப்பு
ஊடக அறிக்கை
09 சனவரி 2010
சுதந்திரமும் இறைமையுமுள்ள தமிழீழத் தனியரசு என்ற இலட்சியத்தின் வீச்சை பிரித்தானியாவில் பதிவு செய்யும் வரலாற்று வாக்குக் கணிப்பில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயலாற்றுவோம்! பெருவாரியான மக்கள் பங்களிப்பை உறுதிசெய்வோம்!!

ஈழத்தமிழர்கள், பாதுகாப்பாகவும் சுதந்திரமாகவும் சகல உரிமைகளையும் பெற்று வாழ்வதற்கு, எமது அரசியல் அபிலாசையான சுதந்திரமும் இறைமையுமுள்ள தமிழீழத் தனியரசா? அல்லது அதைத் தமிழர்கள் கைவிட்டுவிட்டார்களா? என்பதை, பிரித்தானியாவிலுள்ள ஈழத் தமிழர்கள் எதிர்வரும் சனவரி 30, 31 ஆம் திகதிகளில் நடைபெறவிருக்கும் சனநாயக கருத்துக்; கணிப்பு வாக்கெடுப்பின் மூலம் உலகுக்கு எடுத்தியம்ப உள்ளனர்.

1977 ஆம் ஆண்டு தமிழர் தாயகத்தில் தமிழ்பேசும் மக்கள் வட்டுக்கோட்டைத் தீர்மானத்திற்கு அமைவாக சனநாயக ரீதியாக வழங்கிய ஆணையானது, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு மைல் கல் நிகழ்வாகும். எமது இலக்குக் குறித்த மக்களின் அளப்பரிய அர்ப்பணிப்பை இதைத் தொடர்ந்து வந்த காலம் எடுத்தியம்பி நிற்கிறது.

பாரியதும் ஆழமானதுமான இன அழிப்பு வரலாற்றைக் கொண்ட சிறிலங்கா அரசின் தமிழ்த்தேசியத்தின் மீதான போரை, அமைதிவழியிலும் பின்னர் ஆயுதவழியிலும் எதிர்கொண்டு தற்போது சர்வதேசத்திடம் தீர்க்கமான நியாயம் கேட்கும் நிலையில், குறிப்பாக சர்வதேசத்தில் எமது அரசியல் கட்டுமானங்களை உருவாக்கும் இந்தச் சூழலில் இவ்வாக்கெடுப்பு முக்கியத்துவம் பெறுகிறது.

புலம்பெயர் வாழ் எம்மக்கள் மத்தியில் நடாத்தப்படும் இந்த கருத்துக்கணிப்பு வாக்கெடுப்பு, சர்வதேசத்திற்கு எடுத்துச் சொல்லப்போகும் செய்தி என்ன என்பதை தெளிவாக்க, பிரித்தானியா வாழ் தமிழீழ மக்கள் பெருந்திரளாய்; திரண்டெழுந்து பங்களிக்க வேண்டியது மிகவும் அவசியமும் தார்மீகக் கடமையுமாகும்.

இலங்கைத் தீவில் தமிழ் பேசும் மக்கள், தனித்துவமான தேசியத்தையும் பாரம்பரியத் தாயகத்தையும் சுயநிர்ணய உரிமையையும் கொண்டவர்கள். இதன் அடிப்படையில், இத்தீவின் வடக்கு-கிழக்கு இணைந்த நிலப்பரப்பில் சுதந்திரமும் இறைமையும் கொண்ட தமிழீழத் தனியரசு அமைவதுதான் ஈழத்தமிழ் மக்களின் அரசியல் அபிலாசையா என்பதை எடுத்துக்காட்டும் கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பை வருகின்ற சனவரி 30, 31 ம் திகதிகளில் பிரித்தானியா முழுவதும்; ஒற்றுமையுடன் வெற்றிகரமாக நடாத்தி முடிக்க நாம் அனைவரும் திடசங்கற்பம் ப+ண்டுள்ளோம்.

தமிழ் தேசிய சபையால் நடாத்தப்படும் இக்கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பினை, தமிழீழச் செயற்பாட்டாளர்கள், பிரித்தானிய தமிழர் பேரவை, தமிழ் இளையோர் அமைப்பு (ஐ.இ) ஆகிய நாம் அனைவரும் ஒருமித்து, தமிழ்த் தேசிய ஒற்றுமையை வலியுறுத்தி, ஒரே தளத்தில் நின்று மக்களை அணிதிரண்டு வந்து எதிர்வரும் 30, 31 ம் திகதிகளில் நடைபெறவுள்ள கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பில் பெருவாரியாகப் பங்களிக்குமாறு வேண்டி நிற்கிறோம்.

நாடு கடந்த தமிழீழ அரசாங்க பிரித்தானிய செயற்பாட்டுக் குழு, தமிழீழத் தேசிய ஒற்றுமையினை வலியுறுத்தியும் இம்முயற்சி வெற்றிபெற வேண்டியதன் அவசியத்தை கருத்திற்கொண்டும் தமது ஆதரவை வழங்கியிருப்பது இக்கருத்துக்கணிப்பு வாக்கெடுப்பிற்கு மேலும் வலுச்சேர்க்கிறது.
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இன்றைய காலகட்டத்தில், தமிழீழத் தேசியத்தின் ஒன்றுபட்ட கருத்தை உறுதிபட நின்று உலகுக்குப் பறை சாற்றுவோம்!
இவ்வண்ணம்:
தமிழ் இளையோர் அமைப்பு – (ஐக்கிய இராச்சியம்)
பிரித்தானிய தமிழர் பேரவை
தமிழீழச் செயற்பாட்டாளர்கள்

ஜனாதிபதியின் கொள்கை பிரகடன உரை! -ஆங்கிலக் குறிப்புடன் தமிழ் சிங்கள வீடியோக்கள்.

அநுரவின் உரையின் முக்கிய பகுதி தமிழில் LINK அநுரவின் உரையின் முழுப்பகுதி சிங்களத்தில்                                                       ...