தர்மபுரி: நத்தம் காலனி 144 தடை
2013 ஆம் ஆண்டில் தர்மபுரியில் நத்தம் காலனி இளவரசன் - செல்லன் கொட்டாய் திவ்யா ஆகியோர் காதலித்து கலப்புத் திருமணம் செய்துகொண்டனர்.
இதைப் பொறுக்காத ராமதாஸ் தலைமையிலான சாதி வெறிக் கும்பல் நத்தம் காலனியில் சாதி வெறித்தாண்டவம் ஆடியது.
இதன் உச்சமாக இளவரசனை படுகொலை செய்து 2013, ஜூலை 4 ஆம் தேதி அன்று ரெயில்வே தண்டவாளம் அருகில் தூக்கிவீசி எறிந்து விட்டு ``தற்கொலை`` என்று கூறி தன் கொலைக் குற்றத்தை மூடி மறைத்தது.
நத்தம் காலனி ``சாதிக் கலவரத்துக்கும்``, இளவரசன் படுகொலைக்கும் பொறுப்பான, ஜனநாயக, தேச விரோத, சாதி வெறிப் பயங்கரவாத, சமூக விரோத ராமதாசுக்கு எதிராக சட்டம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்தப் பின்னணியில் நத்தம் காலனி மாரியம்மன் திருவிழாவை ஒட்டி மாவட்ட ஆட்சியர் விவேகானந்தன், தர்மபுரியில் 144 தடை உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
இந்த உத்தரவானது, நாயக்கன் பாளையம், நத்தம் காலனியைச் சுற்றி 5 கிலோ மீட்டர் வரையிலான சுற்றளவில் 20 நாட்களுக்கு அமலில் இருக்கும் என்றும் மாவட்ட ஆட்சியர் விவேகானந்தன் உத்தரவிட்டுள்ளார்.